அவர்தான் பெரியார்

அவர்தான் பெரியார்

1902923_1378785985729460_2022924644_n

அண்மைக்காலமாக தமிழர், திராவிடர் என்ற சொல்லாடல்களும், திராவிடத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும், இறுதியாக பெரியார் குறித்த கூர்மையான விமர்சனங்களும் நம்மைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன.

வரலாற்றை தம் விருப்பத்திற்கேற்ப வளைந்து, தம் சொந்தத் தாழ்ப்புணர்வுகளை ஊடகங்களில் பரப்புவதற்கு தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கத்தைப் பயன்படுத்தும் இந்தப் புதிய பரப்புரையாளர்கள் நாம் வெறுமனே புறந்தள்ளி விட முடியாது. வரும் இளைய தலைமுறைக்கு இவர்கள் மறைக்கும் வரலாற்றின் உண்மைகளை வெளிக்காட்டுவதோடு, இந்த அரசியலின் பரிமாணத்தையும் விளக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

முதலாவதாக திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற பழைய குற்றச்சாட்ட தூசி தட்டி மீண்டும் எடுக்கப்பட்டு, தமிழின வீழ்ச்சிக்கு அதிலும் குறிப்பாக அண்மைய ஈழப் பேரழிவுக்கு திராவிடம் என்ற ஒற்றைச் சொல்லே காரணமாய் உருக்காட்டப்படுகிறது.

இரண்டாவதாக திராவிடத்தின் மூல வித்தாகப் பெரியார் காட்டப்பட்டு, அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு அவரது புரட்சிகர பிம்பம் கேள்விக்குரியதாக்கப்படுகிறது.

மூன்றாவதாக இவற்றுக்கெல்லாம் மாற்று தமிழ்த் தேசியமே. என்றும், அந்தத் தமிழ்த் தேசியத்திற்கான வரையறைகள் குறித்து பலரும் பலப்பல கருத்துக்களை உதிர்த்து வருகின்றனர்.

இந்த மூன்று தளங்களிலும் உண்மையை அறிய வரலாற்றின் ஊடாக நாம் சுற்றுப் பயணிக்க வேண்டியிருக்கிறது.

முதலில் திராவிடம் என்ற சொல்லாடலின் உண்மையைத் தேடுவோம். இன்று திராவிடம் என்று இவர்கள் கையாலும் பொருள், திராவிட என்ற பெயரை தமது பெயரில் வைத்துள்ள பதவி அரசியல் கட்சிகளின் ஊழல், அவர்களின் மக்கள் அக்கறையற்ற தன்மை, பதவி வெறி அவர்களின் அரசியல் ஆகியவையும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய தமிழிலிருந்து பிரிந்த பிற திராவிட மொழியினரின் தமிழின விரோத, ஆளுமை அரசியலும் தான்.
ஆனால் திராவிடம் என்ற சொல்லின் உண்மைப் பொருளும், அச்சொல்லின் பின்னால் பொதிந்திருக்கும் அடிமைப்பட்ட மக்கள் விழித்தெழுந்த வரலாறும் இவர்கள் காட்டும் பிம்பங்களிலிருந்து முற்றிலும் மாறுபாடானவை.

தென்னாரு, தென்னாட்டில் வாழ்வோர், அவர்தம் மொழி என்ற பொருளில் இந்தியாவின் வடபகுதியில் வாழ்ந்தோரால் குறிப்பிடப்பட்ட இந்த திராவிடம் என்ற சொல் 4ம் நூற்றாண்டில் முதன் முதலாகக் காணக் கிடைக்கிறது. சமணர்கள் தொடங்கிய பெயர் என்பவை தென்பட்டாலும், ஆங்கிலேயர் வருகைக்குப்பின், கார்டுவெல் பாதிரியாரால் திராவிடர் என்பதற்கான வரையறை தெளிவாக்கப்படுகிறது. வரலாற்று ஆசிரியர்களின் ஆராய்ச்சிகளும், மொழி அறிஞர்களின் ஆராய்ச்சிகளும் ஒரு அரிய வரலாற்று உண்மையை தெளிவாக்கிறன.

தென்னாட்டில், பாரம்பரிய தமிழ் நிலத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டும், தமிழ் மொழியிலிருந்து பிரிந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், தூர மொழிகளைப் பேசும் மக்கள் திராவிடர். அவர்களுக்குச் சொந்தமான நிலம் திராவிட மண். அவர்களே இம்மண்ணின் பூரவ குடிகள் அவர்களின் மரபு திராவிட இன மரபு.

மத்திய ஆசியாவிலிருந்து கைபர் போலன் கணவாய் வழி இங்கு நுழைந்த நாடோடி வந்தேறிகள் ஆரிய மரபினர். அவர்களது மொழி சமக்கிருதம். அவர்கள் வருமுன்னரே தொன்மையான நாகரிக மடைந்த மரபுக்குச் சொந்தக்காரர்கள் திராவிட இனத்தினர் என்ற பேராண்மைகள் வெளித் தெரிந்தன.

சங்க காலத்திற்குப் பின் சரியாகச் சொல்ல வேண்டுமானால் 4ம் நூற்றாண்டுக்குப்பின் கிட்டத்தட்ட 15 நூற்றாண்டுகளாகப் புறந்தள்ளப்பட்டு ஆரியப் பண்பாட்டால் அடிமையாக்கப்பட்டு, முற்றிலும் முழுகடிக்கப்பட்ட திராவிடப் பண்பாட்டில் வெளிச்சக் கீற்றுகள் வெளியாகத் தொடங்கியது ஆங்கிலேயர் மேற்கண்ட வரலாற்று ஆராய்ச்சியின் விளைவாகத்தான்.

ஆரியப் பண்பாடுதான் உயர்ந்தது. மனு நீதி தான் சீரிய வாழ்வுமுறை. சமக்கிருதமே தேவபாசை என்று நம்பிக் கொண்டு, 15ம் நூற்றாண்டுகளாக தம் சொந்தப் பண்பாட்டைப் பற்றிச் சற்றும் அறியாதிருந்த ஒரு இனம் ஒன்று மட்டுமாகவே இருக்க முடியும்.

ஆரிய மரபைப் பின்பற்றி, மனு நீதியை வாழ்வியல் நெறியாகத் திணித்து, திராவிட மரபினத்தவரை அடிமைகளாக ஒடுக்கி, அவர்கள் வாழ்வியல் உரிமைகளை மறுத்து அடக்கி ஆண்டு கொண்டிருந்த ஆரியர் மற்றும் அவர்களை இந்த மண்ணில் வரவேற்று, அவர்களோடு கலந்து அந்த ஆரியப் பண்பாட்டை வாழ்வியலாகக் கொண்டு, அதன் மூலம் பேட்டிமை செய்து, பலன்களை குறிப்பிடுகிறோம். அவர்கள் தமிழர்களே என்று வாதம் செய்பவர்களுக்காக தனியாகவே அனுபவித்துக் கொண்டிருந்த பிராமணர், பார்ப்பனர் (பார்ப்பனர் ஆரியர் அல்லர்) ஆகியோரையும் அவர்களின் மேலாண்மையையும் எதிர்த்து உருவானதுதான் திராவிட இயக்கம்.

தமிழின வீழ்ச்சிக்கு திராவிடம் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. 1967க்கு பிந்தைய திராவிட ஓட்டுக் கட்சிகளின் ஊழல் மயமான ஆட்சிகளால் பெரும் பின்னடைவை தமிழகம் சந்தித்தது உண்மை தான். ஆனால் இந்த ஊழல் வாதிகளை வைத்து திராவிடம் என்ற கருத்துருவை ஒட்டு மொத்தமாக மதிப்பிடுவது முற்றிலும் தவறான ஒன்று.

மார்க்சிய கம்யூனிசக் கட்சியின் தமிழின விரோதப் போக்குக்கு காரல் மார்க்சைக் காரணம் கூறுவது எவ்வளவு அபத்தமானதோ அதே போன்றது தான் ஊழல் நிறைந்த திராவிடக் கட்சிகளின் அக்கறையற்ற ஆட்சியை வைத்து திராவிடம் என்ற கருத்துருவை புறந்தள்ளுவது.

திராவிட என்ற பெயரை மட்டும் தாங்கிய இக்கட்சிகள் பெரியாரின் கொள்கைகளுக்கு நேர் எதிர்த் திசையில் பயணித்தவை என்பதை நம் அனைவருக்கும் நன்கு தெரியும். கடவுள் மறுப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, பகுத்தறிவு வழி, மூட நம்பிக்கை ஒழிப்பு, எளிமை, பதவி ஆசையற்று இருத்தல், தன்மை என்பவற்றில் இக்கட்சிகள் பெரியாரை விட்டு எதிர்த்திசையில் நீண்ட தூரம் விலகி விட்டன என்பதே உண்மை நிலவரம்.

பெரியார் தொடங்கிய திராவிடர் கழகம் கூட பெரியாருக்குப் பின் அவர் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் எந்த முனைப்பும் காட்டவில்லை. மாறாக தம் பொருளாதார மேம்பாடு, அதற்காக ஆட்சியாளர்களைத் தாக்கிப்பிடித்தல் என பெரியாரியலுக்கு எதிராகவே நடந்தது.

மேலும் இந்த 40 ஆண்டுகள் மட்டுமே இந்தக் கட்சியினர் தமிழகத்தை ஆண்டு வருகின்றனர். அதற்கு முன் காங்கிரசு தேசியக்கட்சியும், அதற்கு முன் 14ம் நூற்றாண்டுகளாக பார்ப்பனியமுமே தமிழகத்தை ஆண்டு வந்திருக்கின்றன. தமிழினத்திற்குக் கேடு வெறுமனே இந்த 40 ஆண்டுகளால் மட்டுமே வந்ததில்லை.

இந்தப் புள்ளியில் தான் பெரியாரின் பரிணாமம் தொடங்குகிறது. பெரியாரின் அரசியலைப் புரிந்து கொள்ள அவர் வாழ்ந்த காலத்தோடு சேர்த்தே அதை அவதானிக்க வேண்டும். சங்ககாலத்துக்குப்பின் கிட்டத்தட்ட 1500 வருடங்களாக கல்வி மறுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத தமிழர்களுக்கு கி.பி.1850ல் வெள்ளயர் மூலமாக லேசான வெளிச்சம் வந்தது. மெக்காலேயின் கல்வித் திட்டம் மக்களை கல்வியை நோக்கி நகர்த்தியது. அதிலும் அவர்களை மறித்து முன் வரிசையில் நின்றவர்கள் பார்ப்பனரே. நான் காகை;கோடி மக்கள் தொகை கொண்ட சென்னை மாகாணத்தில் கால் கோடிக்கும் குறைவானரே பார்ப்பனர். ஆனால் 1905 வரையிலான 20 ஆண்டுக் காலத்தில் கல்வி பெற்ற ஆட்சிப்பணி, பொறியாளர், உதவி கலெக்டர்கள் ஆகியவற்றில் 90 விழுக்காட்டுக்கும் மேல் இடம்பிடித்திருத்திருந்தவர்கள் பார்ப்பனரே 10 விழுக்காட்டுக்கும் குறைவான பார்ப்பனரல்லாதோர் மனதில் எழுந்த நியாயமான தாக்கம் பார்ப்பனரின் மேட்டிமையைக் கேள்வி கேட்டது.

1912ல் டாக்டர் நடேசன் தலைமையில் சென்னை ஐக்கியக் கழகம் என்ற பெயரில் மீண்டும் ஒரு பிராமணரல்லாதோர் இயக்கம் தொடக்கப்பட்டது. பெரும்பான்னையாயுள்ள நாம் ஏன் எதிர்மறைப் பெயரான பிராமணரல்லாதோர் என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து வழக்கவே அப்பெயர் திராவிடர் சங்கம் என மாற்றப்பட்டது.

திராவிடர் என்பது அன்றைய சென்னை மாகாணத்தில் பார்ப்பனரல்லா தோரைக் குறிக்கப் பயன்பட்ட ஒரு பொதுப்பெயர். அதற்கு மூலமாய் அமைந்தது 1892ல் அயோத்திதாசப் பண்டிதர் தமது இயக்கத்திற்கு வைத்த திராவிட ஜனசபா என்ற பெயர். ஒழுக்கப்பட்ட மக்களுக்கு ஆதி திராவிடர் என்ற பெயரை முதன் முதலில் பரிந்துரைத்தவர் அயோத்தி தாசர்தான்.
1961ல் டாக்டர் நடேசனுடன் பி.டி. தியாகராயரும், டி.எம். நாயரும் கைகோர்க்க தென்னிந்திய நல உரிமைச்சங்கம் தொடங்கப்பட்டது ஜஸ்டிஸ் என்ற இதழும் தொடங்கப்பட்டது. இதழின் பெயரில் அரசு இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) என அழைக்கப்பட்டது.

காங்கிரசில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்ட பெரியாரின் நோக்கமும் ஒழுக்கப்பட்டோ நலனாகவே இருந்தது. அதன் மூலம் அவர்கள் முன்னிறுத்திய அரசியல், 1500 வருடங்களாக கல்வி, பண்பாடு, மரியாதை மறுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தியதாக இருந்தது.

1924ல் வைக்கத்தில் நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்திய பெரியார் பார்ப்பணியத்திற்கு எதிரான தனது சுயமரியாதைப் போரின் முதல் அத்தியாயத்தைத் தொடங்கினார். தன்னுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானத்தை வலியுறுத்திய பெரியார் அது ஏற்கப்படாததால் காங்கிரசிலிருந்து 1925ல் வெளியேறினார். சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.

தன் சுயமரியாதை இயக்கத்தின் வழியாய் பெரியார் ஆற்றிய களப்பணிதான் இன்று நாமிருக்கும் இடத்திற்கு நம்மைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

அவர் கல்வி அறிவு பெறாத கடவுள் பக்தியில் திளைத்து மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடந்த தாழ்வடைந்து கீழே கிடந்த மக்களைத் தேடிச் சென்றார். அவர்களை ஒடுக்கிக் கொண்டிருந்த கடவுள் நம்பிக்கை, மூடநம்பிக்கை, சாதியம், வவர்ணாச்சிரம முறை, பெண்ணடிமை இவற்றின் ஆணிவேரான பார்ப்பனியம் ஆகியவற்றின் மீது தன் தடி கொண்டு பெருந்தாக்குதல் நடத்தினர்.

மரபு என்றோ, பண்பாடு என்றோ, பழக்க வழக்கங்கள் என்றோ எந்த அடக்குமுறையாக இருந்தாலும் அதை எதிர்த்துக் கலகக்குரல் எழுப்பினார். அந்தக் கேள்விக்கான பதிலில் தான் நம் விடியலுக்கான தேடல் இருந்தது.

அப்படிக் கலகம் செய்த ஒரு புரட்சியாளர் நம் காலத்தில் நமக்கு வாய்த்தது தான் நாம் பெற்ற சிறப்பு. நம் மக்களின் முன்னேற்றத்தை பல தலைமுறைகள் முன்கூட்டியே கொணர்ந்தது தான் அவரது புரட்சியின் பலன்.

1929ல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டின் தீர்மானங்களே போதும் அந்த புரட்சித் தீயின் வேகத்தை நம் கண் முன்னர் காட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இந்திய அரசியல் திட்ட அமைப்பில் ஏற்கப்பட வேண்டும்.

பிறப்பின் அடிப்படையிலான நால்வகை வர்ணங்கள் அவற்றைக் கற்பிக்கும் வேதம், புராணம் சாத்திரம் மதம் ஆகியவை புறக்கணிக்கப் படவேண்டும்.

சாதி ரீதியான தடைகள் எங்கும் எவருக்கும் இருக்கக் கூடாது மக்கள் தங்கள் பெயருடன் கூடிய சாதிப்பட்டத்தையும், சாதி மத அடையாளர்களையும் துறக்க வேண்டும். பெண்ணுக்கு திருமணம் செய்ய 16 வயது கடந்திருக்க வேண்டும். விவாகாரத்து உரிமை, விதவை மறுமண உரிமை வழங்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு வேலைகளில் சமஉரிமை, வாரிசு உரிமை வழங்கப்பட வேண்டும். கல்வியில் தாய்மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். கோவில்கள் கடவுளுக்கும், வணங்குபவருக்கும் நடுவில் இடைத்தரகர்களோ, வடமொழியோ இருக்கக்கூடாது.

இவை 1929ல் பெரியார் அறிவித்த கொள்கைகள். அந்தக் கொள்கையின் படி சற்றும் பிறழாமல் கடைசிவரை செயலாற்றியவர் தான் பெரியார். தமிழர்களை மானமும் அறிவும் பெற்ற சமூகமாக மாற உரத்த குரல் கொடுத்தவர் பெரியார்.

திராவிடக் கருத்துருவாக்கம் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானது என்று பொய்யுரைப்பவர்கள், பெரியாரின் உண்மையான திராவிடம் முன்னிறுத்திய மேற்குறிப்பிட்ட தீர்மானங்களில் எவை எதிரானவை என்பதை விளக்க வேண்டும்.

பெரியாரின் கருத்துகள் விவிலிய வசனங்கள் அல்ல. துண்டு துண்டாகப் படித்து பேசப்படுவதற்கு அக்கருத்துகள் அவை கூறப்பட்ட காலப் பிண்ணனி, அதன் பின் உள்ள நுண்ணரசியலோடு சேர்த்துக் கணக்கிடப்பட வேண்டும்.

தந்தை பெரியாரின் சிந்தனைகள் அனைத்துமே ஆரிய பார்ப்பனியத்தின் ஆண்டாண்டு கால ஆதிக்கத்தால் கீழே விழுந்து கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்புபவையாகவே இருந்தன.

பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி எனத் திட்டினார் என்பர் சிலர். தாயை பெண்டாள்பவனையும், மனைவியை சாமியாருக்கு கூட்டிக் கொடுப்பவனையும் திருத் தொண்டர்களாக்கியப் புராணங்கள் செய்து வைத்திருக்கும் ஒரு மொழியை வேறென்ன சொல்வது?

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னேயே செழுமையடைந்த ஒரு மொழியை மதத்தில் முழுக வைத்து மூடநம்பிக்கைகளைப் பரப்பி அதைத் தமது சொந்த சொத்தாக்கி, சாதாரண மக்களைச் சென்றடைவதைத் தடுத்து பண்டிதர்களின் மொழியாக ஆக்கி வைத்தமையை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பெரியார்.

அடிமைப்படுத்துவது சாதியாயிருந்தாலென்ன வர்ணமாயிருந்தாலென்ன, மொழியாயிருந்தாலென்ன கடவுளாகவேயிருந்தாலும் அதன் புனிதத் தன்மையை உடைப்பதற்காகவே பேசியவர் பெரியார் மட்டுமே. சமூக முன்னேற்றத்திற்கு தடையாயிருக்கும் அத்தனை அபிமானங்களையும் உடைத்தவர் பெரியார். இது தான் பெரியாரின் நுண்ணரசியல்.

ஆனால் அவரே தான் இந்தி ஆதிக்க எதிர்ப்புப்போரை முன்னெடுத்தார். திருக்குறள் மாநாடு நடத்தினார். எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். நம் மொழிளை அறிவியல் மொழியாக்க, சமூகத்திற்கு விடிவு தரும் வழியாக்கக குரல் கொடுத்தார்.

வெறும் பண்டிதர்களின் மொழியாயிருந்த தமிழை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்ததில் திராவிட இயக்கங்களின் பங்கை நாம் மறந்து விட முடியாது.

வெறும் சொற்களின் மீது கவனமாகி காட்டு மிராண்டி என்பதற்குக் கோபப்படும் நண்பர்கள் காலங்காலமாக தாசிமகன், வேசி மகன், ஆத்திரன் பஞ்சமன், சண்டாளன் என்று பார்ப்பனியம் நம்மைக் கேவலப்படுத்தியதற்கு ஏன் ரோசப்படுவதில்லை. என்பதை சற்று சிந்திக்க வேண்டும்.

தமிழ்த் தேசியம் எழுச்சி பெற முடியாமற் போனதற்கு திராவிடக் கருத்தியலே காரணம் என்று சிலர் கூறுகின்றனர். இன வழித் தேசியம் அடிமைப்பட்டுக் கிடக்கும் போது அதை எதிர்த்துப் போராடியவர் பெரியார்.

மொழிவழித் தேசியத்தை முன்னிறுத்திய தமிழ்த் தேசியத் தலைவர்கள் அதை இறுதியல் பார்ப்பனியத்திடமும், வாக்கு அரசியல் ஊழல் வாதிகளிலும் அடகு வைத்ததானால் தான் அது வெற்றி பெற முடியாமற் போனது என்பது தான் வரலாற்று உண்மை.

ம.பொ.சி, ஆதித்தனர் சம்பத் போன்று தமிழ்த் தேசியத்தின் ஆரம்ப கால முன்னெடுப்புகள் எங்கே போய் முடிந்தன என்பது நாமனைவரும் அறிந்ததே. தற்போதைய தமிழ்த் தேசிய முன்னெடுப்பகலும் ஈழத் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தியதாக உள்ளதே தவிர தமிழ்நாட்டின் தேசியத்திற்கான அவர்கள் பங்களிப்பு குறைவாக உள்ளது தான் வேதனையாக உண்மை.

இந்திய வரைபடத்தை எரித்த போது கூட தமிழ்நாடு நீர்கலாக எரித்தவர் தான் பெரியார். தமிழ்நாடு தமிழருக்கே என்ற முதல் விடுதலைக் குரலை எழுப்பியவர் பெரியார் தான்.

தமிழ்த் தேசியத்தில் அவ்வளவு பற்றுதலும் கவனத்தோடும் இருந்த பெரியாரை தமிழருக்கு எதிரியாகச் சித்திரிப்பதில் உள்ள நுண்ணரசியிலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சோவும், சுப்பிரமணிய சாமியும் தமிழ்ச் சமூகத்திற்கு எதிரான கருத்துக்களில் ஊரத் திளைப்பதற்கும், இந்தி ராமின் தமிழின எதிர்ப்பு செயல்பாடுகளுக்கும் அடிப்படையான ஆரிய மன நிலையை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்ற பெயர் வருவதற்கு பெருந்தடையாயிருந்த காங்கிரசு பேராயம் அதன் உட்கூறான டில்லி பார்ப்பன, பனியா இந்தியம் ஆகியவற்றை மறந்த விடக் கூடாது.

மொழிவழித் தேசியம் புறந்தள்ளப்படக்கூடிய ஒன்றல்ல. ஆனால் மொழித் தேசியம் பேசுவது மட்டுமே நமக்கு விடுதலையைக் கொண்டுவராது.

மார்க்சீயத்தின் வர்க்க விடுதலையும், டில்லிக்காரர்களின் வடக்கு மட்டும் இந்தி தேசிய மேட்டிமையை அகற்றுதலும், தலித் மக்களுக்கான சாதி இழிவை அகற்றி சமத்துவம் பெறுதலும் மத ரீதியான இந்துத்துவ ஆதிக்கத்தை அகற்றுதல் சமூக ஒடுக்குமுறையின் கருவியாக உள்ள பார்ப்பனியத்தை வெற்றிகொள்வது ஆகிய இவையனைத்தும் ஒன்றுபடுவதில்தான் நம்மக்களின் முழுமையான விடுதலை உள்ளது என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.

எல்லாத் தளங்களிலும் ஒரே அமைப்பு செயல்பட முடியாது என்பதுதான் யதார்த்த நிலை. அவரவர் அமைப்புகள் அவரவர் தளங்களில் வலுவாகச் செயல்பட்டு, இறுதியில் ஒரு புள்ளியில் அனைத்தும் ஒன்றிணையும் போது முழுமையான விடுதலை முகிழ்க்கும்.

ஆனால் இங்கோ நிலைமை அந்த ஒன்றிணைக்கும் புள்ளியை நோக்கிப் பயணிப்பதாக இல்லை. ஒவ்வொருவரும் மற்றவரின் தளங்களைப் புறந்தள்ளியும், மற்றவரின் கொள்கைகளை மறுத்தும், எதிர்த்தும் அரசியல் நடத்தவே விழைகின்றனர். முரண்பாடுகள் உச்சம் பெற்று, விடுதலை நோக்கிய பயணத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைத் தகர்க்க முயல்கின்றனர். அதில் முதன்மையானதொன்றுதான் திராவிடப் பகை.

தமிழர் என்பது மொழிவழித் தேசியம் என்பது எவ்வளவு உறுதியானதோ, அதே போன்றுதான் திராவிடர் என்பது இன நில வழித் தேசியம். ஆரியர், திராவிடர் என்பவை வௌ;வேறு மரபு வழி, நில வழித் தேசிய இனங்கள். திராவிடம் என்ற கருத்துருவாக்கம் தமிழருக்கு எதிரானது அல்ல. அது ஆரியருக்கு மட்டுமே எதிரானது.

திராவிட என்னும் சொல்லை தமது பெயரில் கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளின் ஊழல், மக்கள் அக்கறையற்ற தன்மை, தழிழ்த் துரோகம் ஆகியவற்றைக் கணக்கிட்டு திராவிடம் என்ற கருத்தியலை எதிர்ப்பது அறிவுடையோர் செயல் அல்ல. சில தமிழ்த் தேசியர்கள் இன்று கூறுவது போல் தெலுங்கு, கன்னட, மலையாளிகளின் நலன் கோருவதல்ல திராவிடம். (அதை தெலுங்கு உள்ளிட்ட பிற மொழியார்களே ஒப்புக்கொள்வதில்லை) ஆரிய மேட்டிமைக்கு எதிராக, தமிழர்களின் இனநலம் கோரி உருவானதான் திராவிடக் கருத்தியல். அதை மறுப்பது ஆரிய பார்ப்பனியத்துக்கே நலம் பயப்பதாக முடியும்.

1967-ம் ஆண்டுக்குப் பின்னர் வந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சி எப்படி தமிழர் நலனுக்கான ஒன்றாக அமையவில்லையோ, அதே போன்று அதற்கு முந்தைய காங்கிரசு தேசியக் கட்சியின் ஆட்சியும் நலம் பயப்பதாக இல்லை. அதற்கு முன்னர், 19-ம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட 14 நூற்றாண்டுகளாக ஆரியப் பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தில் நம் சொந்தப் பண்பாடு, மொழி உரிமைகளை இழந்து கிடந்தது நம் இனம். 1927-ல் தொல்காப்பியம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் 2000 ஆண்டுப் பழமையான இலக்கிய வளம் கொண்டது நம் தமிழ்மொழி என்பது நமக்கே தெரிந்தது. இவ்வளவு பெரிய வீழ்ச்சிக்கு நம்மை உள்ளாக்கிய ஆரியப் பார்ப்பனியத்துக்கு எதிரான போர்தான் திராவிடக் கருத்தியல். அக்கருத்தியலை பெருவீச்சீல் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் பெரியார்.

சிந்திக்காத அடிமைப்பட்டுகிடந்த நம்மக்களை மானமுடன், அறிவுடன் வாழ சிந்திக்கவும், மூடத்தனத்தைப் புறந்தள்ளி பகுத்தறிவுடன் வாழ பழகிக் கொடுத்தவர் பெரியார்.

பெரியாரின் கருத்துக்கள் அவை வெளியிடப்பட்ட சூழலோடு இணைந்துதான் பார்க்கப்பட வேண்டுமேயொழிய விவிலியத்தின் வசனங்களைக் கருதப்படக்கூடாது. 14 நூற்றாண்டுகளாக நாம் அறியாதிருந்த அடிமைத்தனத்தை நமக்கு அடையாளம் காட்டி, நம்மை மனிதனாகத் திருத்த, ஆரியத்தின் மீது போர் தொகுத்தவர் பெரியார்.

அந்தப் போரில் அவர் பெற்ற வெற்றியின் விளைவுதான் இன்றைய நம் சமூகப் பங்களிப்பு. சூத்திரரும் பஞ்சமருமாக அடையாளப்படுத்தப்பட்ட நம் தமிழ்ச் சமூகத்தை புரு மானுட சமூகமாக மாற்ற அவர் தொடுத்த போர்தான் திராவிடக் கருத்தியல்.

தமிழ்த் தேசியம் என்ற மொழி வழித் தேசியம் தமிழர்கள் அனைவரின் ஒற்றுமைக்கான ஒரு கருவி. அந்தத் தமிழ்த் தேசியத்தின் உள்ளடக்கம் ஆரிய பார்ப்பனிய ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடும் திராவிடமே. உள்ளுறைப் பொருளைப் புறந்தள்ளிவிட்டு நாம் முழுமையான விடுதலையை வென்றெடுக்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். திராவிடக் கட்சிகள் உண்மையில் பெரியாரின் திராவிடக் கருத்தியலுக்கு நேரெதிர் திசையில் வெதுதூரம் விலகிவிட்டவை. அவைகளை நேரடியாகவே அம்பலப்படுத்துவோம்.

அண்டை மாநிலங்களுடன் ஏற்படும் விரோதததைத் தூண்டிவிட்டு நம் பகைப்புலமாக அவற்றை மாற்றிக் கொண்டிருக்கும் இந்தியமே நமது உண்மையான பகைப்புலம். இந்தியம் வடிவமைத்த தாக்குதலே ஈழப் பேரவலம். இந்தியம் அழித்ததுதான் கச்சத்தீவின் மீதான் நம் உரிமைகள். நம் மீனவரின் நலன்கள். தமிழரின் மீதான அவர்களின் தாக்குதலே கூடங்குளம் அணு உலைகள்.

அந்த இந்தியத்தத்துவத்தை வடிவமைக்கும் ஆரிய, பார்ப்பன, பனியா பகைப் புலங்களை தெளிவாக மக்களுக்கு அடையாளம் காட்டுவோம். நம் வாளின் கூரிய முனை எப்போதும் பகைவநன நோக்கியே இருக்கட்டும். அதைவிடுத்து திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று வெற்றி முழக்கமிட்டு திராவிட என்று பெயர் வைத்துள்ள ஓட்டுப்பொறுக்கி, ஊழல் அரசியல் கட்சிகளின் அயோக்கியத்தனத்தை திராவிடக் கருத்தியலாக மாற்றிச் சொல்வது ஆரியப் பார்ப்பனியத்திற்குத் துணை போகும் செயலாகவே முடியும். மார்க்சிஸ்டு கட்சியின் தமிழினத் துரோகத்தினால் நாம் மார்க்சை வெறுக்கமுடியாது.
தமிழ்த் தேசயிம் நம் அடையாளம். அதன் கூறுகள் ஆரிய பார்ப்பனிய எதிர்ப்பான பகுத்தறிவுத் திராவிடம், முதலாளியத்துக்கு எதிரான வர்க்க சமத்துவம் கூறும் மார்க்சியம், சாதி ஒழிப்பை முன்னிருத்தும் தலித்தியம் ஆகியவைதான்.

மரியாதைக்குரிய தமிழ்த் தேசியர்களே, பெரியாரைப் பகையாகக் கொண்டு மார்க்சை மறுத்து, அம்பேத்காரை கண்டு கொள்ளாமல் கிடைக்கும் ஒரு விடுதலை தமிழனத்தின் முழுமையான விடுதலையாக இருக்க இயலாது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். விடுதலை என்று பேசிக் கொண்டே அதன் கூறுகளை மறுக்கும் தடைக்கற்களாக இருக்காதீர்கள். வரும் தலைமுறை அந்த முழு விடுதலை நோக்கிப் பயணிக்கட்டும்.

Advertisements

தேசிய அரசியலும், தேசிய இன அரசியலும்

 

சாதி அடிப்படையில், நிற அடிப்படையில், மொழி அடிப்படையில், இன அடிப்படையில் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட இந்த மாறுபட்ட சமூகத்தின் ஒரு பிரிவு மற்ற பிரிவுகளை அடக்கி, அதன் மீது ஆதிக்கம் செலுத்தி, அதன் மூலம் அடக்கப்படும் பிரிவுகளின் பொருளாதார, சமூக நலன்களைத் தமதாக்கிக் கொள்ளும் போக்கு உலகெங்கும் விரவிக் கிடப்பதை எவரும் மறுக்க முடியாது. ஆதிக்கம் செலுத்தும் சமூகம் எதனடிப்படையில் அடக்குமுறைகளை உருவாக்குகிறதோ அதைப் பொறுத்தே அடிப்படைச் சமூகத்திலிருந்து உரிமைக் குரல்கள் ஒலிக்கின்றன.

விடுதலைக் குரல்கள்

சாதி அடக்குமுறைகளையும் நிறப்பாகுபட்டு அடக்குமுறைகளையும் எதிர்த்து, சமூக விடுதலைக் குரல்களும், பொருளாதார ஒடுக்குமுறைகளை எதிர்த்து வர்க்க விடுதலைக் குரல்களும் எழுந்தது நாம் ஏற்கனவே அறிந்தவையே. இந்த வகையில், பன்னெடுங்காலமாகப் பல்வேறு வடிவங்களில் அறியப்பட்டு, கடந்த சில நூற்றாண்டுகளாக சரியான வடிவத்தை அடைந்திருக்கும் ஒரு முதன்மையான விடுதலைக் குரல்தான் தேசிய இன விடுதலைக் குரலாகும். அரசர்களின் ஆட்சி அதிகாரத்திற்கான நாற்காலிப் போர்களுக்கு இடையில் மக்களின் உரிமைக்கான கலகக் குரல்கள் வரலாற்றில் எப்போதும் எழுந்தவாறுதான் இருந்திருக்கின்றன.

புதிய விடுதலைக் குரல்கள்

எல்லாவற்றிற்கும் அடிப்படை, உண்மையில் பொருளாதார விடுதலையாகவே இருந்தது. தாங்கொணாத அளவுக்கு நடந்த பொருளாதாரச் சுரண்டலைப் பொறுக்க முடியாத மக்களின் உரிமைக் குரல்கள், வர்க்கப் போராட்டாமாக வடிவெடுத்து இலெனின் காலத்தில் வெற்றியை எட்டிப் பிடித்தது. ஏறக்குறைய அதே காலகட்டத்தில் அரசரின் ஆட்சி முறை அகற்றப்பட்டு, மக்கள் அரசுகளின் ஆட்சி முறை நடைமுறையில் வரத் தொடங்கியது. அந்த அரசுகள் யாரால் அமைக்கப்பட்டன? அவை உண்மையில் மக்கள் அரசுகள்தாமா? அவை, தம் ஆளுகையில் இருந்த மக்கள் அனைவருக்காகவும் செயல்பட்டனவா என்ற கேள்விகளிலிருந்து புதிய விடுதலைக் குரல்கள் எழத் தொடங்கின.

உலகின் அரசியல் வரலாற்றில் இவை போன்ற பல பதிவுகள் இருக்கின்றன. அவற்றுள் நம் கண் முன்னால் நடந்த ஓர் உரிமைப் போராட்டம்தான் இந்திய விடுதலைப் போராட்டம் ஆகும். இங்கிலாந்து உள்ளிட்ட பல மேலை நாடுகளின் காலனிய ஆதிக்கத்தையும், சுரண்டலையும் எதித்து, பல்வேறு நாடுகளில் பல்வேறு காலகட்டங்களில் பல உரிமைக் குரல்கள் எழுந்தன. அனைத்துப் போராட்டங்களும் பெரும்பாலும் இனக்குழுக்களின் அடிப்படையிலேயே நடைபெற்றன. அந்தந்த இனங்களின் தலைவர்களாய் அப்போதிருந்த அரசர்களோ, குறுநில மன்னர்களோ அப்போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினர். அவ்வரசர்களும் மன்னர்களும் வெற்றிகொள்ளப்பட்டு முற்றிலும் அழித்தொழிக்கப்பட்ட பின்னர், மக்கள் தாங்களாகவே அப்போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கினர்.

அரசியல் விடுதலைப் போராட்டம் என்று சொல்லப்பட்ட அப்போராட்டங்கள் அனைத்தும் உண்மையில் தேசிய இன உரிமைப் போராட்டங்களே. இந்தியா என்ற ஒரே நிலப்பரப்பாக இருந்த போதிலும் பல்வேறு இனக்குழுக்கள் வாழ்ந்து வந்த இந்தியாவில், விடுதலைப் போராட்டங்கள் ஆங்காங்ககே அந்தந்த இனக்குழுக்களால் நடத்தப்பட்டு வந்தது.

ஒருங்கிணைந்த இனக்குழுப் போராட்டம்

பெரும்பாலும் மொழி அடிப்படையிலும், சமூகப் பழக்க வழக்கங்கள் அடிப்படையிலும் மிகக் குறைவாக மத அடிப்படையிலும் இனக் குழுக்கள் போராடத் தொடங்கின. ஆங்கிலேயரால் வெற்றி கொள்ளப்பட்ட அரசர்களின் ஆட்சி எல்லை என்ற புவியியல் அடிப்படையிலும் சில குழுக்கள் உரிமைக்குரல் எழுப்பின. மொழி வழி, மத வழி, நில வழித் தேசிய இனங்கள், தத்தமது இனங்களின் மீதான அடக்குமுறையை – சுரண்டலைத் தவிர்க்கத் தமக்கான உரிமைகளை மீட்பது இன்றியமையாததாக இருந்தது. எந்தவழி இனமாக இருந்தாலும் இனத்தின் ஒட்டுமொத்தக் குரல்களும் ஒரே விடுதலைக் குரலாகவே ஒலித்தன.

தமிழர்களின் போராட்டத் தலைவராக வ.உ. சிதம்பரனார்; மராத்தியர்களின் தலைவராகத் திலகர்; வங்காளிகளின் தலைவராக விபின் சந்திரபால்; வடமேற்குப் பகுதியின் தலைவராக லாலா வஜபதிராய்; இவர்களைப் போன்ற மக்கள் குழுக்களின் தலைவர்கள் மதத்தையும் இனத்தையும் பொருத்தமான கருவிகளாகக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்னரே ஹைதர் அலி, திப்புசுல்தான், தமிழகத்தின் பல பாளையக்காரர்கள் நிலவழித் தேசியத்தைக் காக்கப் போராடினர். அந்தப் போர்தான் வெள்ளையர் எதிர்ப்புப் போர். பின்னர் வெற்றிக்கான உத்தியாக மத, இன, நிலவழித் தேசிய இனங்கள் ஒருங்கிணைத்து தங்களது போராட்டத்தைத் தொடர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள்.

அடக்கப்பட்ட இனங்கள் வெவ்வேறானவையாக இருந்த போதும் ஆதிக்கம் செலுத்தியது வெள்ளையர் என்ற ஒரே இனமாக இருந்ததால், அனைவரது போராட்டங்களும் ஒற்றை எதிரியை நோக்கியே இருந்தன. ஒற்றை எதிரியான வெள்ளையனும் மக்களின் போராட்ட வீச்சைக் குறைக்கச் சில உத்திகளை உருவாக்கினான். அதன் விளைவாக ஆங்கிலேயரான ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவரால் காங்கிரசுக் கட்சி தொடங்கப்பட்டது. விடுதலைப் போராட்டத்தின் வீச்சைக் குறைப்பதும் நீர்த்துப் போகச் செய்வதும் அடிமை நிலையிலேயே மக்களை நிலை நிறுத்துவதுமே தொடக்கத்தில் காங்கிரசுக் கட்சியின் நோக்கமாக இருந்தது.

ஆனால் மக்களின் நோக்கமோ வேறு மாதிரியாக இருந்தது. பிரித்தாளும் சூழ்ச்சி செய்து, இனக்குழுக்களிடேயே பகையை மூட்டி அடிமை கொண்ட பழைய வரலாற்றை அறிந்திருந்தால் எல்லா இனக்குழுக்களின் மக்களும் ஒற்றுமையாக வெள்ளையனை எதிர்க்கத் தொடங்கினர்.

காந்தியாருக்குக் கிடைத்த மகாத்மா என்ற சிறப்பால், பிற தலைவர்களின் புகழ் மங்கியது. அவரையும் அவர் சார்ந்த காங்கிரசுக் கட்சியினரையுமே ஒட்டு மொத்தத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நெருக்கடி உருவாகியது.

விடுதலைக்குப் பிறகும் ஒரே இந்தியா

பல்வேறு தேசிய இனங்களை அடிமைப்படுத்தி ஆண்டு வந்த வெள்ளையர் வெளியேறியபின், ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான விடுதலையைப் பெற வாய்ப்பாக, அந்தந்த இனத்தின் விருப்பம் கேட்டறியப்பட்டு அதற்கேற்ப இந்தியா என்ற செயற்கைத் தேசத்தில் பல அரசுகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பல்வேறு தேசிய இனங்களும் தொடர்ந்து, ஒரே இந்தியா என்ற இணைப்பு அரசை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன. தேசப்பற்று, தேச ஒருமைப்பாடு, வேற்றுமையில் ஒற்றுமை முதலிய மயக்குச் சொற்களால் ஒரே இந்தியாவை ஏற்க வேண்டிய நெருக்கடியை மக்களுக்கு ஏற்படுத்தின. இந்திய விடுதலை என்பது, தன் இனத்திற்கான விடுதலையாகவும் இருக்கும் என ஒவ்வொரு தேசிய இனத்தவரும் நம்பினர்.

ஆனாலும், வெள்ளையர் – இந்தியர் ஆட்சிக் கைமாற்றம் நேரு, இராசாசி போன்ற மேல்தட்டுப் பார்ப்பன, பனியா காங்கிரசுத் தலைவர்களிடம் வந்தபோது, அதை ஏற்கப் பல தேசிய இனத் தலைவர்கள் மறுத்தனர். தனித் திராவிட நாட்டுக் கோரிக்கையை முன்வைத்த தந்தை பெரியாரும், பாகிஸ்தான் கோரிய முகமதலி ஜின்னாவும் திருவிதாங்கூர், அய்தராபாத், ஜம்மு – காஷ்மீர், மணிப்பூர் அசாம் முதலான பகுதிகன் தலைவர்களும் ஒரே இந்தியாவை ஏற்க மறுத்தவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.

மக்கள் விரும்பும் வண்ணமே வரலாறு நிகழ்ந்துவிடுவதில்லை. வலுவான ஒற்றை இந்தியா என்ற முழக்கத்தில் தேசிய இனங்களின் உரிமைக்குரல்கள் வலுவிழந்து போயின. காங்கிரசு என்ற பேரமைப்பு எழுப்பிய பெருங்குரலில் மொழிவழி, நிலவழித் தேசியர்களின் குரல்கள் அடங்கிப் போயின. ஆயினும் மதவழித் தேசியக் கோரிக்கை வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. ஜம்மு – காஷ்மீர், மணிப்பூர், இலங்கை ஆகியவை தனித்தனி நாடுகளாகவே இருந்து வந்தன.

இந்தியாவுடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு

கூட்டாட்சித் தத்துவம் கடைப்பிடிக்கப்படும் என்றும் விடுதலைக்குப்பின் நாட்டில் பாலாறும் தேனாறும் பெருக்கெடுத்து ஓடும் என்றும் மயக்கும் உறுதிமொழிகள் ஒருபக்கம் சொல்லப்பட்டன. அதே வேளையில், சூழ்ச்சிகளும் படைத்தாக்குதல்களும் அடக்குமுறைகளும் இன்னொரு பக்கம் மேற்கொள்ளப்பட்டன. அதனால் எதிர்ப்புக் குரல்கள் நசுக்கப்பட்டுப் பல தேசிய இனங்களின் மரபுவழி நிலப் பகுதிகளை இணைத்து ஒற்றை இந்தியா உருவாக்கப்பட்டது.
வெள்ளையர் வருவதற்கு முன் ஒருபோதும் இந்தியாவுடன் இணைந்திராத தமிழ்நாடு, இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவிக்கப்பட்டது. எனவே தான் தந்தை பெரியார், 1947-ஆகஸ்ட்டு 15-ஆம் நாள் தமிழர்களுக்குத் துக்க நாள் என அறிவித்தார்.

இணைந்து வாழ முடியாதா?

பல்வேறு தேசிய இனங்கள் ஒரே நாடாக இணைந்து வாழ முடியாதா என்ற கேள்வி நம்முன் எழுகிறது. வாழ முடியும்: எந்தத் தனிப்பட்ட தேசிய இனமும் பிறதேசிய இனங்களை ஆதிக்கம் செலுத்தும் இனமாகவோ, பெரும்பான்மை என்பதைப் பயன்படுத்திச் சுரண்டுகின்ற – அதிகாரம் செலுத்துகின்ற இனமாகவோ மாறாத வரை இணைந்து வாழ முடியும். ஆனால், இந்தியாவில் நிலைமை அவ்வாறு இல்லை.

இந்திய நிலப்பரப்பை ஒற்றை நாடாகக் காக்க வேண்டும்: அதன் எல்லைகளை விரிவாக்க வேண்டும் என்ற ஆசையுடன், மக்களின் விருப்பமின்றி இந்திய அரசு தன்னுடன் இணைந்துக்கெண்ட காசுமீர், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, அசாம் முதலான நிலப்பரப்புகளில் வாழும் மக்கள் இன்றளவும் இந்தியாவைப் பகை அரசாகவே கருதிப் போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டங்களை ஒடுக்கப் பெரும் இராணுவ நடவடிக்கைகளும் ஆதிக்க அச்சுறுத்தல்களும் இந்திய அரசால் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. போராடும் தேசிய இனங்களின் எளிய, இயல்பான உரிமைகள் கூட வழங்கப்படாமல், வல்லாதிக்கக் கால்களால் மக்கள் நசுக்கப்படுகின்றனர்.

தேசிய இனத்திற்கான உரிமைகளைக் கோருவது தேசத் துரோகக் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. இந்தி மொழி பேசும் தேசிய இனம் அல்லாத பிற தேசிய இனமக்கள் அனைவருமே இந்திய அரசின் அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. குறிப்பாகத் தமிழ்த் தேசிய இனம் கடுமையான அழுத்தங்களுக்கும் புறக்கணிப்பிற்கும் உள்ளாகியிருக்கிறது.

இந்திய நடுவண் அரசு, பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான சட்டங்களை இயற்றியது. ஒரு மொழிவழித் தேசிய இனத்தை அழிப்பதற்கு, அவர்களது மொழியைச் சிதைத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்து, நாடு முழுவதற்குமான முதன்மை மொழி இந்தியே என்ற கொள்கை முடிவை அறிவித்தது: பிற தேசிய மொழிகள் அனைத்தும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இந்தி முதன்மையை எதிர்த்து அறுபதுகளில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த உரிமைப் போராட்டமும் அப்போராட்டத்தில் தமிழ் இளையோரின் உயிர் ஈகங்களும் விடுதலை பெற்ற எந்த நாட்டிலும் நடந்ததில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, நடுவண் அரசும் மாநில அரசும் ஒரே தரமானவையே, ஆயினும் கடந்த அறுபது ஆண்டுகளில் மாநில அரசுகளின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டன: தில்லி அரசிடமிருந்து உதவித்தொகை வாங்கிப் பிழைக்கும் கீழ்நிலை அரசுகளாக மாநில அரசுகள் மாற்றப்பட்டுள்ளன. மாநில சுயாட்சி என்பதைக் கொள்கையாகக் கொண்ட கட்சிகள் மாநிலங்களில் ஆட்சியில் இருந்த போது கூட நடுவண் அரசின் கடுமையான இறுக்கத்திலிருந்து அவை தம்மைக் காத்துக்கொள்ள முடியவில்லை. அதுமட்டுமின்றி நடுவணரசில் பங்கு வகித்த காலத்திலும் கூடத் தம் தேசிய இனத்தின் நலன்களுக்காகக் குரல் கொடுக்க முடியாத அழுத்தத்தை அக்கட்சிகள் எதிர்கொள்ள நேர்ந்தது.

தமிழரைக் கொல்ல உதவிய இந்தியா

இந்தியாவில் வாழும் தமிழ்த் தேசிய இனத்தின் உறவுகளான ஈழத்தமிழர்கள், வெறும் 30கி.மீ. தொலைவில் மிகப் பெரிய வாழ்வியல் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்ட போது, அவர்களுக்கு எந்த உதவியும் இந்திய அரசு செய்யவில்லை. மாறாகத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்களத் தேசிய இன அரசுக்குப் படைக்கருவிகளையும் உளவுத் தகவல்களையும் வேறு உதவிகளையும் இந்திய அரசு செய்தது. ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கதறிய தமிழ்த் தேசிய இனத்தின் கதறலை இந்திய அரசு சிறிதும் பொருட்படுத்தவில்லை. மேலும், ஒட்டுமொத்த மானுட இனமே வெட்கித் தலைகுனியும்படி ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இராசபட்சேவைச் சிறப்பு விருந்தாளியாகத் தில்லிக்கு வரவழைத்து இந்திய அரசு சிறப்புச் செய்து மகிழ்ந்தது.

இராசபட்சே மீதான போர்க்குற்ற விசாரணைக்கான நடவடிக்கைகளைத் தடுத்துப் பன்னாட்டு அரங்கத்தில் சிங்கள இனவெறி ஆதிக்க அரசை இந்தியா பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. இதனால் ஓர் ஆதிக்க இனம் இன்னோர் ஆதிக்க இனத்துக்குத்தான் உதவும் என்ற உண்மை உறுதி செய்யப்பட்டது.

தேசிய இனங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் இந்திய அரசு

மொழி, இன அடிப்படையில் மட்டுமல்லாமல், எல்லைச் சிக்கல்கள், ஆற்றுநீர்ப்பங்கீட்டுச் சிக்கல்கள் ஆகியவற்றில் கூட அருகருகே உள்ள தேசிய இனங்களுக்கு நடுவே பகையை ஏற்படுத்தி, அப்பகை தீராதவாறு இந்திய அரசு பார்த்துக் கொள்கிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாக பாலாறு, காவிரி, முல்லைப் பெரியாறு தொடர்பான சிக்கல்கள் உள்ளது.
இந்திய அரசால் தரப்படும் இத்தகைய அழுத்தங்கள் தமிழ்த் தேசிய இனத்திற்கு மட்டும்தான் உள்ளனவா என்றால் இல்லை. காசுமீரில் இந்தியப் படையினரின் கடும் அடக்குமுறை நடவடிக்கைகளால் அம்மண்ணின் மைந்தர்களில் குறிப்பிட்ட விழுக்காட்டினர் அழிக்கப்பட்டுள்ளனர். அசாம், மணிப்பூர் முதலிய பகுதிகளில் தேசிய இனங்களுக்கும் இதே நிலைதான்.

இந்தியாவில் இந்தித் தேசியம்

காங்கிரசால் மட்டுமின்றிப் பாரதிய ஜனதாக் கட்சியாலும் பொதுவுடைமைக் கட்சிகளாலும் இந்தியத் தேசியம் விரிவாகப் பேசப்படுகிறது. பரப்புரை செய்யப்படுகிறது. இதற்கு எதிராக எழும் குரல்கள் அனைத்தும் தேசத்துரோகம் என்ற ஒற்றைச் சொல்லால் அடக்கப்படுகின்றன. உண்மையில் இந்தியத் தேசியம் என்பது இந்தித் தேசியம் மட்டுமே. பலதேசிய இனங்களின் சிறைக் கூடமே இந்தியா என்பது தான் உண்மை.

இந்தியப்பண்பாடு என்று சிலர் பெருங்குரலெடுத்து முழங்குகின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவுக்கென்று ஒரு பொதுவான பண்பாடு எப்பொழுதும் இருந்ததில்லை. இந்தியாவின் பொதுப்பண்பாடு எனச்சிலர் சொல்வது பார்ப்பனியப் பண்பாடே.

நாம் மேற்கொள்ள வேண்டிய முடிவு

ஒரு தேசிய இனத்தின் மொழி, இன, நலன்கள் பாதிக்கப்படும் போது உரிமைக் குரல் எழுவது இயற்கையே. அவ்வாறு எழுப்பப்படும் குரல்கள், எந்த அளவு உலக மக்களால் பார்க்கப்படுகின்றன, அந்தக் குரல்களுக்கு எவ்வாறு பதிலளிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் உரிமைக்குரல்கள் விடுதலை எழுச்சியாக வீச்சு பெறுகின்றன.

இராசீவ் காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டுச் சிறையில் வாடும் மூன்று தமிழர்களின் உயிரைக் காப்பதற்காக அண்மையில் தமிழ்த் தேசிய இனம் உரிமைக் குரல் எழுப்பியது. அதற்கு இந்தியா எப்படிப் பதிலளித்தது என்பதை நாம் அறிவோம்.

இனி, இந்தியாவில் அனைத்து உரிமையும் பெற்று வாழ முடிகின்ற ஒரே இனம் இந்தித் தேசிய இனம் மட்டுமே. இயல்பாகவே உரிமைக் குரல் எழுப்பும் தமிழ்த் தேசிய இனத்தை, இந்தியா பகையாளியாகவே பார்த்து வருகிறது.

ஒரே ஒரு முடிவுதான்

இந்தியாவின் பொருளாதாரத் கொள்கைகள் நாட்டு மக்களையும் நாட்டின் வளத்தையும் வெளியாருக்கு விற்றுக் கொண்டிருக்கும் சூழலில், முற்று முழுதாகப் பணக்காரர்களுக்கு மட்டுமே இந்நாட்டில் வாழும் தகுதி இருக்கும் சூழலில், இன்றும் முழுதும் முன்னேறாத இனமாக இருக்கும நம் தமிழ்த் தேசிய இனம் தொடர்ந்து உயிர் பிழைத்திருக்கவும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லவும் வேண்டுமானால் ஒரே ஒரு முடிவு தான் இருக்கிறது.

அது, இந்தியத் தேசியச் சிறையிலிருந்து வெளியேறுவது மட்டுமே. நம் இனத்திற்கான உரிமைகளைப் பெறவும், நலன்களை உருவாக்கிக் கொள்ளவும், முன்னேற்றத்தை அடையவும் நமக்கு வேறு வழியில்லை. அவற்றை நாமே உருவாக்கினால் தான் உண்டு. இந்தியத் தேசியம் நமக்குத் தருவதற்கு இனி வாய்ப்பே இல்லை. நம்மைப் பகை இனமாகக் கருதும் இந்தியத் தேசியம் எனப்படும் இந்தித் தேசியம், தமிழ்த் தேசிய இனத்திற்கான உரிமைகளை மதிப்பதற்கு இனி வாய்ப்பே இல்லை.

நமக்கென ஒரு நாடு!
நமக்கென ஓர் அரசு!
நமக்கென ஓர் இறையாண்மை!

இப்படி நடந்தால் தான் தமிழர் வாழ்வில் விடியலைக் காணமுடியும்.

கூடங்குளம் அணுஉலைஆதரிப்பதா? எதிர்ப்பதா? ஒரு நடுநிலைப் பார்வை

 

கூடங்குளம் அணுஉலைஆதரிப்பதா? எதிர்ப்பதா?  
ஒரு நடுநிலைப் பார்வை

Image

1. அணுஉலை என்றால் என்ன? அணு மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது?       

         ImageImageImage

உலகெங்கும் மின்சாரம் என்பது ஒரே ஒரு முறையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.  ஏறக்குறைய நமது மிதி வண்டி(dynamo) ‘டைனமோ’வில் பயன்படுத்தப்படும் மின் காந்தப் புலம் தொழில் நுட்பம் தான்.  இது போன்ற பெரிய டைனமோக்களை சுற்றுவதன் மூலம் மட்டுமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.  அணையில் நீரைத் தேக்கி மேலிருந்து கீழே வரும் நீரின் விசையால் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது நீர் மின்சாரம்.  காற்றின் மூலம் சுற்றச் செய்து தயாரிக்கப்படுவது காற்றாலை மின்சாரம்.  நீரைக் கொதிக்க வைத்து, நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது அனல் மின்சாரம்.  (இதற்கு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது).  டீசல், பெட்ரோல், எரிவாயு மூலமும் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.  இவ்வாறு நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்குவதற்கு நிலக்கரிக்குப் பதிலாக அணுவின் உட்கருவைப் பிளப்பதால் உருவாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவது தான் அணு மின்சாரம். 

            யுரேனியம் போன்ற சில தனிமங்கள் பிளக்கப்படுவதால் அதிக வெப்பமும் ஆற்றலும் கிடைக்கின்றன.  அவற்றை முறைப்படுத்தி அதைத் தொடர் நிகழ்வாக மாற்றி நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழல வைத்துப் பெறப்படுவது தான் அணு மின்சாரம்.

2. சூரிய ஒளி (Solar) மின்சாரமும் இதே போன்றது தானா?

Image

            இல்லை.  சூரிய ஒளியின் ஆற்றல் மூலம் வெப்ப நிலை தூண்டப்படும் பலகைகள் (Panels) சிறிய அளவில் மின்சாரத்தை உருவாக்கின்றன.  அதன் மூலம் மின்கலன்களை (Batteries) மின்னூட்டம் (Charge) செய்ய முடியும்.  அந்த மின்கலன்கள் மூலம் மின்சாரம் பெறப்படுகிறது.

3. கூடங்குளம் அணு உலையின் தொழில் நுட்பம் என்ன?

                        கூடங்குளம் அணு உலை இரசிய நாட்டின் வி.வி.இ.ஆர் 1000 என்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.  யுரேனியம் என்ற தனிமம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.  இதன் அணு பிளக்கப்படும் போது சுமார் 2000 டிகிரி வெப்பம் உருவாகிறது.  இது நீரின் கொதி நிலையான 100 டிகிரி -ஐ விட 20 மடங்கு அதிகம்.  இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி உருவாக்கப்பட்டு, அந்த நீராவி மூலம் டைனமோக்கள் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது.  மிக அதிக வெப்பம் உருவாவதால், இந்த அணு உலையைக் குளிர்விக்க கடலிலிருந்து நீர் பெறப்பட்டு, சுத்திகரித்து உப்பு அகற்றி, நன்னீராக மாற்றி இந்த உலையில் பயன்படுத்தப்படுகிறது.    

            யுரேனியம் அணுவைப் பிளக்கும் போது அது வெப்பத்தை வெளிப்படுத்துவதுடன், புளுட்டோனியமாக மாறுகிறது.  மேலும் கடுமையான கதிரியக்கமும் (Radiation) ஏற்படுகிறது.  இந்த கதிரியக்கத்திலிருந்து பாதுகாப்பதற்குத்தான் கான்கிரீட் சுவர்களும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தேவைப்படுகின்றன.

4. அணு உலைத் தொழிற்நுட்பத்தின் நன்மை மின்சாரம்.  அதனால் தீமைகள் உண்டா? அவை யாவை?

கண்டிப்பாகத் தீமைகள் உண்டு.  அவை 

முதன்மையானது கதிரியக்கம் (Radiation).  இந்த கதிரியக்கம் மிகமிக அபாயகரமானது.  இந்தக் கதிர்வீச்சினால் தைராய்டு பாதிப்பு, காசநோய், நீரிழிவு நோய், மலட்டுத் தன்மை, மூளை வளாச்சிக் குறைவு, புண்கள் என பல்வேறு நோய்கள் மனிதருக்கு ஏற்படும்.

Image

இரண்டாவது- கழிவுகள்.         இந்த பிளக்கப்பட்ட யுரேனியத்தின் கழிவான புளுட்டோனியம் என்பது அணுகுண்டு செய்யப் பயன்படும் மூலப்பொருள்.  அணுகுண்டு ஏற்படுத்திய நாசங்களை நாம் ஏற்கனவே சப்பான் நாட்டின் கிரோசிமா, நாகசாகி நகரங்களில் பார்த்துவிட்டோம்.  இந்த அணுக்கழிவுகளை என்ன செய்வது, எப்படிப் பாதுகாப்பது என்பதை உலக விஞ்ஞானிகள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை.  இந்தக் கழிவுகளின் கதிரியக்கம் கிட்டத்தட்ட 45ஆயிரம் ஆண்டுகளுக்கு வீரியத்துடன் இருக்கும்.

மூன்றாவது – விபத்துக்கள்.    

Image

            மற்ற தொழிற்சாலைகளைப் போல் சிறிய அளவிலான விபத்துக்கள் என இதைக் கருத முடியாது.  அணு உலையின் சிறிய விபத்தே மிகப் பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தும்.  உயிரிழப்பு லட்சக் கணக்கில் இருப்பதுடன் அதன் பாதிப்பு பல தலைமுறைகளுக்கும் தொடரும்.  நாம் கற்பனை செய்வதை விட இழப்புக்கள் மிகமிக அதிகமானதாகவே இருக்கும்.

நான்காவது – சுற்றுப்புற சீர்கேடு.    

            அணு உலை அமையும் இடம் மிக பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.  அதனால் அதைச் சுற்றி வாழும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, தங்கள் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடும்.  கடலிலிருந்து ஒரு நாளைக்கு 32 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, அணு உலைளைக் குளிர்வித்தவுடன் அந்த வெந்நீர் கடலில் மீண்டும் கொட்டப்படுகின்றது.  இதனால் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்பட்டு, உயிர்ப் பெருக்கம் பாதிப்படைவதுடன், அதை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிறது.

ஐந்தாவது – பாதுகாப்பு.   

            ஏறக்குறைய ஒவ்வொரு அணு உலையும் ஒரு அணு குண்டுக்குச் சமமானது.  தீவிரவாதிகளாலோ அல்லது எதிரி நாட்டினராலோ தாக்கப்படும் அபாயம் உள்ளது.  மடியில் அணு குண்டைக் கட்டிக்கொண்டு எப்படி நிம்மதியாக வாழ முடியும்.  அவ்வாறு தாக்கப்பட்டால் அது மிகப் பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கும்.  மேலும் பாதுகாப்புக் கருதி அப்பகுதி ராணுவமயமாக ஆக்கப்படுவதால் பொது மக்கள் சராசரி வாழ்க்கை வாழ முடியாமல் இடர்ப்பட நேரிடும்.

5. தமிழகத்தின் மின் பற்றாக்குறையைப் போக்க அணு மின்சாரம் அவசியம் தானே?

            கண்டிப்பாக இல்லை.  முதலில் தமிழகம் மின் பற்றாக்குறை உள்ள மாநிலமே இல்லை.  தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாட்டின் தேவைகளுக்கு போதுமானது மட்டுமின்றி மிகுதியானதாகும்.  (தமிழ்நாட்டின் மின் தேவை 12,500 மெகாவாட்)    

            பொதுவாக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தமது மின் தேவையில் 65 விழுக்காட்டை தாங்களே உற்பத்தி செய்துகொள்ளும்.  அத்துடன் மிகச் சிறு அளவை தனியாரிடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள்ளும்.  மீதி 35 விழுக்காட்டை மத்திய அரசு தனது மத்திய மின் தொகுப்பிலிருந்து வழங்க வேண்டும்.

            மாநிலங்கள் தாங்கள் சொந்தமாக நடத்தும் மின் உற்பத்தி திட்டங்களின் மூலம் கிடைக்கும் மின்சாரம் தேவைக்கு மேல் மிகுதியாக உள்ள போது அவற்றை வெளியே விற்று லாபம் ஈட்டிக் கொள்ளலாம்.  இவ்வாறு 1992 வரை தமிழ்நாட்டின் மிகுதி மின்சாரத்தில் வருடத்திற்கு 3,500 கோடி ரூபாய் லாபம் கிடைத்துவந்தது.

            ஆனால் 1992-ல் இந்திய நடுவண் அரசு (மன்மோகன் சிங் நிதியமைச்சராகவும், மாண்டேக் சிங் அலுவாலியா நிதித் துறைச் செயலாளராகவும் இருந்த போது) மாநில அரசின் மின் திட்டத்திற்கான அனுமதிகளை முடக்கியது.  ஆனால் தனியார் மின் ஆலைகளுக்கு அனுமதி வழங்கியது.  அந்த தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மாநில அரசுகள் கூடுதல் விலை கொடுத்து வாங்கும்படி நிர்ப்பந்தித்தது.  மேலும் மத்திய மின் தொகுப்பிலிருந்து கொடுக்கும் மின்சாரத்தின் அளவையும் குறைத்தது.

            எடுத்துக்காட்டாக 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் எண்ணூர் மின் உற்பத்தித் திட்டம் தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து பிடுங்கப்பட்டு வீடியோகானுக்குத் தாரைவார்க்கப்பட்டது.  நெய்வேலியில் ST-CMS என்ற அமெரிக்க தனியார் தயாரிக்கும் மின்சாரத்தை யூனிட் ரூ.3.70-க்கு வாங்க வேண்டிய நிர்ப்பந்தம்.  ஆனால் அருகிலுள்ள என்.எல்.சி-யில் மின்சாரம் யூனிட் விலை 1.72 காசு.  இதன் மூலம் பெரும் நட்டத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம்.

            மேலும் தன் பங்குக்கு தமிழ்நாடு அரசும் பொது மக்களுக்கு வழங்கி வந்த மின்சாரத்தை போர்டு, குண்டாய், கணிணி (ஐடி) நிறுவனங்கள் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் முதலாளிகளுக்கும் திருப்பிவிட்டன.  பொது மக்களுக்கு தட்டுப்பாட்டை உருவாக்கி தனியார் முதலாளிகளுக்கு தடையற்ற மலிவான மின்சாரம் தருகின்றனா.

            வீடுகளுக்கு எட்டு மணி நேரம் மின் வெட்டு ஏற்படுத்தும் அரசு தனியார் (ஐடி) நிறுவனங்களுக்கு 2 நிமிடத்திற்கு மேல் மின்சாரம் நிறுத்தப்பட்டால் அதற்கு இழப்பீட்டுத் தொகை கொடுக்கிறது.  மேலும் வீட்டிற்கு யூனிட் ரூ.3.50-க்கு விற்பனை செய்யும் மின் வாரியம் ஐ.டி நிறுவனங்களுக்கு ரூ.2.50-க்குத் தான் கொடுக்கிறது.  தமிழ்நாட்டின் 40% மின்சாரத்தை இந்த நிறுவனங்கள் தான் உபயோகிக்கின்றன. 

            நெய்வேலியிலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றிற்குத் தரும் மின்சாரத்திலிருந்து தலா ஆயிரம் மெகாவாட்டை நமக்குத் தந்தாலே போதும்.  தமிழகத்தின் பற்றாக்குறை வெறும் 2,600 மெகாவாட்டுகள் மட்டுமே.  மின் உற்பத்தியின் படி உபரி மாநிலமாக இருக்கும் தமிழகத்தின் மின்சாரம் இப்படி வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதால் நாம் மின்வெட்டுப் பிரச்சினையில் மாட்டித் தவிக்கிறோம்.  நமக்கு அணு மின்சாரம் தேவையே இல்லை.        

6. இந்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்கிறீர்கள்.  ஆனால் எட்டு மணி நேர மின் வெட்டால் அவதிப்படுவது மக்கள் தானே.  இப்போது கூடங்குளத்திலிருந்து வரும் மின்சாரம் நமக்குக் கிடைத்தால் இந்த மின் தடைப் பிரச்சினை குறையுமே?

            கூடங்குளம் அணு உலையின் மொத்த உற்பத்தித் திறனே 1,000 மெகாவாட் தான்.  இரண்டாவது அணு உலை செயல்படத் துவங்கிய பின்னரே இன்னொரு ஆயிரம் மெகாவாட் கிடைக்கும்.  இதுவரை இந்தியாவின் அணு உலைகள் 100 விழுக்காடு உற்பத்தித் திறனை எட்டியதில்லை.  அணு உலைகளின் உற்பத்தித் திறன் 50 விழுக்காட்டுக்குக் கீழ்தான்.  ஒரு வேளை 1,000 மெகாவாட் உற்பத்தி ஆவதாக எடுத்துக்கொண்டாலும், அதில் தமிழகத்தின் பங்கு வெறும் 280 மெகாவாட் மட்டுமே.  இதில் மின் கடத்தல் பகிர்மானத்தில் இழப்பு (transmission) 30 விழுக்காடு போக 190 மெகாவாட்கள் மட்டுமே கிடைக்கும்.  அதிலும் தொழிற்சாலைகளுக்குப் போக வீட்டுக்கு வந்து சேருவது சொற்பமே.  வெறும் 190 மெகாவாட்டிற்காக அணு உலை என்னும் பேராபத்தை வரவேற்பது கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிவதற்குச் சமம்.  இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்கு வெறும் 3% மட்டுமே.  கூடங்குளம் அணு உலை திறக்கப்பட்டால் பாலாறும், தேனாறும் பெருக்கெடுத்து ஓடும் என்பது காங்கிரசின் வழக்கமான மாய்மாலம்.

7. நீங்களோ அணு உலைகள் பேராபத்து என்கிறீர்கள்.  ஆனால் விஞ்ஞானிகளோ பாதுகாப்பானது என்கிறார்களே இவற்றில் எது உண்மை?

            அணு உலை பாதுகாப்பாக இருக்குமானால் ஒரு வேளை விபத்தை வேண்டுமானால்  தடுக்கலாம்.  ஆனால் அதிலிருந்து தினசரி வரும் கதிரியக்கத்தால் கண்டிப்பாக பாதிப்பு வரும் என விபரமறிந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.  அதனால் தான் அணு உலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அமைக்கப்படுகின்றன.  ஆனால் கூடங்குளம் அதைப் போன்று இல்லை.  அங்கு சுமார் 7 கிலோ மீட்டருக்குள் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.  மேலும் 20 கிலோ மீட்டருக்குள் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.  கண்டிப்பாக கதிரியக்கத்தால் இவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்.

            மேலும் விபத்து ஏற்படாது, இந்த அணு உலை பாதுகாப்பானது என்பதை வாய்மொழியாகச் சொல்கிறார்களே தவிர, அவை அறிவியல் பூர்வமாக இது வரை உறுதி செய்யப்படவில்லை என்பது தான் உண்மை.

8. உண்மையில் உறுதி செய்யப்படவில்லையா? ஆனால் மத்திய அரசின் வல்லுநர் குழு பாதுகாப்பை உறுதி செய்ததே?

            பாதுகாப்பு அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது தான் ஆணித்தரமான உண்மை.  மத்திய அரசின் வல்லுநர் குழு தமக்குக் கொடுக்கப்பட்ட கூடங்குளம் அணு உலை நிர்வாகத்தின் அறிக்கையின்படி, அது  பாதுகாப்பானது என்ற முடிவை எடுத்ததேயொழிய, எந்தவித ஆய்வும் மேற்கொள்ளவில்லை என்பது தான் உண்மை.  அவர்கள் மத்திய அரசுக்கும், கூடங்குளம் அணு உலை நிர்வாகத்திற்கும் ஒருபக்கச் சார்பாகவே நடந்து கொண்டார்கள்.

9. அப்படியானால் எந்த முறைகளில் அணு உலையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்?

            முதலில் அணு உலை அமைந்துள்ள இடம் புவியியல் ரீதியாக பாதுகாப்பானதா என்பது உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

            இரண்டாவதாக இந்த அணு உலைத் தொழில்நுட்பம் வெற்றிகரமானதா என்பதை முன் அனுபவங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

            மூன்றாவதாக இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு வேளை விபத்து ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

10. இந்த மூன்றுமே கூடங்குளம் அணு உலையில் பின்பற்றப்படவில்லை என்கிறீர்களா?

            ஆமாம்.  நிச்சயமாக. முதலில் அடிப்படையாகச் செய்ய வேண்டிய புவியியல் ஆய்வுகளே அணு உலை நிர்வாகத்தால் செய்யப்படவில்லை.  அப்படிச் செய்திருந்தால் இந்த இடம் அணு உலைக்கு ஒரு சதவீதம் கூட ஏற்ற இடமல்ல என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்கும்.  மாறாக எரிமலைப் பாறைகள் மீது இந்த அணு உலையை அமைத்துவிட்டு இப்போது பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்!

11. என்ன இது? இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை சாதாரணமாகக் கூறுகிறீர்கள்!

            ஆமாம்.  அதிர்ச்சியடைய வேண்டாம்.  பொதுவாக அணு உலை அமைந்திருக்கும் தரை கெட்டியான பாறைகளால் உருவானதாக இருக்க வேண்டும்.  ஆனால் கூடங்குளத்தில் தரை அப்படி இல்லை.  அங்கு இருப்பவை ஒழுங்கற்ற எரிமலைப் பிதுக்கப்பாறைகள்.

12. எரிமலைப் பாறைகளா?

Image

            ஆமாம்! கூடங்குளம் அணு உலைக்கு அடித்தளம் தோண்டும் போதுதான் அந்த உண்மை அவர்களுக்குத் தெரிந்தது.  எனவே காங்கிரீட்டைக் கொட்டி அதன் மேல் அடித்தளத்தை அமைத்தனர்.

            மேலும் பூமியின் மேலோடு கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தடிமனாக உள்ள இடங்களில்தான் அணு உலை அமைக்கப்பட வேண்டும்.  ஆனால் கூடங்குளம் அருகிலுள்ள பகுதிகளில் வெறும் 110 மீட்டர்கள் தான் புவியோடு தடிமன் உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

13. இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?

Image

            பூமியின் அடியிலுள்ள மிகச் சூடான மாக்மா என்ற பாறைக் குழம்பு பூமியின் மேலோடு மெலிதாக உள்ள இடங்களில் வெடிப்பை ஏற்படுத்தி எரிமலையாக வெளிக்கிளம்பும்.  அது மேற்பரப்பையும், அதன் மீதுள்ள கட்டுமானங்களையும் குறிப்பாக அணு உலையையும் நிச்சயம் பாதிக்க வாய்ப்புள்ளது.

14. இது தவிர வேறென்ன குறைபாடுகள் உள்ளன? 

Image

            இரண்டாவதாக இயற்கைப் பேரிடர்களான சுனாமி, பூகம்பம் போன்றவை உருவாகும் வாய்ப்பு குறித்த ஆய்வும் நடத்தப்படவில்லை.  அப்படி நடத்தியிருந்தால் கூடங்குளத்திலிருந்து வெறும் 90 கி.மி. தொலைவில் மன்னார் வளைகுடாவில் கடல் தரையில் எரிமலை முகவாய் (volcanic vent) இருப்பதை முன்னரே கண்டுபிடித்திருக்கலாம்.

            மேலும் மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் வண்டல் குவியல்கள் இரண்டு பெரிய அளவில் உள்ளன.  இவற்றின் பெயர் கிழக்குக் குமரி மற்றும் கொழும்பு வண்டல் குவியல்கள்.  இதோடு இந்திராணி நிலப்பிளவு என்னும் நீளமான நிலப்பிளவும் கடலுக்கடியில் காணப்படுகிறது.  இதன் மூலம் கடலுக்கடியில் பூகம்பமும், அதனால் பெரும் சுனாமி அலைகளும் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்பதை ஆராய்ச்சியாளாகள் நிறுவியிருக்கிறார்கள்.

            இதுபோக அவ்வப்போது கடல் அரிப்பு, கடல் உள்வாங்கல் ஆகிய நிகழ்வுகளும் கன்னியாகுமரிக் கடலோரத்தில் நடந்துள்ளது.  இவையும் அணு உலையைப் பாதிக்கும் மிக முதன்மையான காரணிகளாகும்.

15. ஆனால் முன்னால் குடியரசுத் தலைவர் , அணு விஞ்ஞானியான அப்துல்கலாம் பூகம்பம், சுனாமி ஆகியவை வருவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றும், அணு உலை மிகவும் பாதுகாப்பானது என்றும் சொல்லியிருக்கிறாரே?

Image

            ஒரு சிறு திருத்தம்.  திரு. அப்துல்கலாம் அணு விஞ்ஞானி அல்ல.  அவர் வானூர்திக்கான (auronautical) விஞ்ஞானி.  அவருக்கு நிலவியல் (geology), கடலியல் (marine) தொடர்பான ஆராய்ச்சிகளோடு தொடர்பு கிடையாது.  மேலும் அவர் அணுகுண்டுத் தொழிற்நுட்பத்திற்கு ஆதரவான கருத்துடையவா.  பூகம்பம் வரும் என்றோ, சுனாமி வரும் என்றோ இதுவரை எந்த விஞ்ஞானிகள் முன்னறிவிப்புத் தந்திருக்கிறார்கள்.  வந்த பின்னர்  தான் வந்தது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.  இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டி அறிந்து சொல்வதில் நம் அறிவியல் துறை பெரும் தோல்வியையே கண்டுள்ளது.

16. அப்படியானால் அப்துல்கலாம் சமூக அக்கறையுடன் செயல்படவில்லை என்கிறீர்களா?

            நிச்சயமாக.  அணுகுண்டு வெடித்து அதைப் பார்த்து பரவசப்படும் ஒரு மனிதர், எவ்வளவு பெரிய அறிவாளியாக, விஞ்ஞானியாக இருந்தாலும் அவர் மக்கள் விரோதியே.

            இந்தியா நல்லரசாக இருப்பதைவிட அதை வல்லரசாக ஆக்குவதற்காக கனவு கண்டவர் அப்துல்கலாம்.  அணு உலையைத் திறப்பதற்காக உடனடியாக ஓடோடி வந்து பார்வையிட்டு, அது பாதுகாப்பானது என்று கருத்துச் சொன்ன அவர், சொந்த ஊரான இராமேசுவரம் மீனவர்கள் காக்கை குருவியைப் போல சிங்களப் படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டித்து ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கிறாரா?

            சிங்கள அரசின் கலை நிகழ்வுக்கு நடிகை அசின், பாடகர் மனோ முதலானவர்கள் சென்றதற்கே உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் கண்டித்தனர்.  இலங்கை அரசை பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் புறக்கணியுங்கள் என்று தமிழக முதல்வர் தீர்மானமே நிறைவேற்றியுள்ளார்.  ஆனால் கொழும்பில் நடைபெற்ற சிங்கள அரசு விழாவில் அப்துல்கலாம் பங்கேற்று சிறப்பித்துள்ளார்.  நடிகை அசின் செய்தால் தவறு.  அப்துல்கலாம் செய்தால் சரியா?

            இலங்கையில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்ட போது மறந்தும் ஒரு வார்த்தை கண்டிக்காத அப்துல்கலாம், கொழும்பு அரசு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தது என்ன நியாயம்?  இதுதான் அவரது இன உணர்வு, மனித நேயம்.  அவர் உண்மை பேசுவார் என்று இனிமேலும் எப்படி நம்புவது?

17. மற்ற விஞ்ஞானிகள் கூட அணுசக்திக்கு ஆதரவாகத்தானே பேசுகிறார்கள்?

யார் சொன்னது. அணு பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் விஞ்ஞானி  டாக்டர் பரமேசுவரன், மின் தேவைக்கு அணுசக்தி சரியான வழி கிடையாது என்று சொல்லி பாபா அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து விலகினார்.

அணு மின் நிலையங்கள் ஆபத்தானவை.  இந்திய அணு மின் நிலையங்களின் உண்மைத் தன்மை குறித்த தகவல்கள் மறைக்கப் படுகின்றன என்பது இவரது  குற்றச் சாட்டு.

18. சரி! புவியியல் ரீதியாக கூடங்குளம் இடம் தவறான தேர்வு என்கிறீர்கள்.  ஆனாலும் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

            முதலில் இந்த அணு உலை ஆந்திராவில் நாகார்சுன சாகரில் தான் அமைவதாக இருந்தது.  ஆந்திர அரசு ஒப்புக்கொள்ளவில்லை.  பின்னர்  கர்நாடகாவில் கைக்கா என்ற இடத்தை முடிவு செய்தனர் .  இதற்கு கர்நாடக அரசும் ஒப்புக்கொள்ளவில்லை.  பின் கேரளாவில் பூதகான்கெட்டு என்ற இடம் தேர்வு செய்யப்பட்டது.  அங்கு மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக கடைசியில் தமிழ்நாட்டுக்குத் தள்ளிவிடப்பட்டது.

19. ஆக ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் ஒப்புக்கொள்ள மறுத்த ஒரு திட்டத்தை தமிழ்நாட்டு மக்களின் தலையில் கட்டியிருக்கிறார்கள் என்கிறீர்களா?

            ஆமாம்.  தமிழர்கள்தானே எந்த பாதிப்பு வந்தாலும் பொறுமையாக இருக்கும் இளிச்சவாயர்கள்.

            ஆனால் கூடங்குளத்திலிருந்து கிடைக்கும் மின்சாரத்தில் சமபங்கு ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களுக்குக் கொடுக்கப்படும்.  தமிழகத்திற்கு பாலாறை, காவிரியை, முல்லைபெரியாறு நீரைக் கொடுக்க மறுக்கும் அந்த மாநிலங்களுக்கும் இங்கிருந்து மின்சாரம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

            இதைவிடப் பெரிய கொடுமை.  இலங்கையின் கொழும்பு நகரத்திற்கு மின்சாரம் கொடுப்பதற்காக கடலுக்கடியில் மின் கேபிள்கள் போடப்பட்டு தயாராக உள்ளன.  சிங்கள சகோதரர்களுக்கு எத்தனை மெகாவாட் கொடுக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

20. சரி!  இந்த அணு உலைத் தொழில்நுட்பத்தில் ஏதாவது குறைபாடுகள் உள்ளனவா?

            நிறைய உள்ளன.  இந்த வி.வி.இ.ஆர். 1000 என்ற இரசியாவின் தொழில்நுட்பம் நிறைய குறைபாடுகளைக் கொண்டது.  இதை நாம் சொல்லவில்லை.  சப்பானில் புகுசிமா அணு உலை வெடித்தற்குப் பின் இரசிய அதிபர் தம் நாட்டு விஞ்ஞானிகளிடம் இரசிய அணு உலைகள் பற்றி ஒரு ஆய்வு நடத்த ஆணையிட்டார்.  அதன்படி ஆய்வு செய்த இரசிய விஞ்ஞானிகள் இந்த வி.வி.இ.ஆர் 1000 அணு உலைத் தொழிற்நுட்பம் குறித்த 31 குறைபாடுகளை பட்டியலிட்டுள்ளனர்.

            குறிப்பாக இந்த கூடங்குளம் அணு உலையைப் பொறுத்தமட்டில் குளிர்விக்கும் தொழிற்நுட்பம் மிகவும் பலவீனமாக உள்ளது.  கடல் நீரை உப்பகற்றி நன்னீராக்கி குளிர்விக்கப் பயன்படுத்துகிறார்கள்.  அவ்வாறு  உப்பகற்றும் இயந்திரங்கள் இசுரேல் நாட்டிலிருந்து டாட்டா நிறுவனத்தின் மூலம் தருவிக்கப்பட்டவை.  இதைத் தவிர வேறு எந்த நீராதாரமும் இல்லை.

            1989ம் ஆண்டு இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பு எந்தக் காரணங்களைக் கொண்டும் அணு உலைகளைக் குளிர்விக்க ஒரே ஒரு நீராதாரத்தை மட்டும் நம்பியிருக்கக்கூடாதென்று வலியுறுத்திய போதும், கூடங்குளம் அணுஉலை  நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளைச் செய்யவில்லை.

            ஒரு வேளை உப்பகற்றும் தொழிற்நுட்பத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் இசுரேல் நாட்டிலிருந்து தான் தொழில்நுட்ப நிபுணர்கள் வரவேண்டும்.  அணுஉலை வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நீர் வெறும் இரண்டரை நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும்.  இந்த நீரின் அளவு 6 கோடி லிட்டராக இருக்கவேண்டும் என இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்திய போதும் கூட அங்கு வெறும் 1.2 கோடி லிட்டர் நீர் மட்டுமே சேமித்து வைக்கப்பட்டுள்ளது.  இது அணு உலை நிர்வாகத்தின் அசிரத்தையைக் காட்டுகிறது.

            சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர் வரும் காலங்களில் கூட உலையின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அப்துல்கலாம் போன்றவர்கள் திரும்பத்திரும்பச் சொன்னாலும் கூட ஒரு உண்மையை அவர்கள் தாங்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.  பேரிடர் காலங்களில் சமாளிக்கத் தேவையான ஜெனரேட்டர் முதலான உபகரணங்கள் கடல்மட்டத்திலிருந்து வெறும் 13 மீட்டர் உயரத்தில்தான் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.  எனவே சுனாமி அலைகள் 13 மீட்டருக்குமேல் உயரமாக வந்தால் என்ன செய்வது என்ற கேள்விக்கு அவர்களிடத்தில் பதில் இல்லை.

            அதுபோன்று 5.2 ரிக்டர் வரையிலும் வரும் பூகம்பத்தால் பாதிப்பு இல்லை என்று சொல்கின்றனர்.  சமீபத்தில் குஜராத்தில் வந்த பூகம்பத்தின் அளவு 8 ரிக்டர்.  அப்படி கூடங்குளத்தில் ஏற்பட்டால் என்ன விளைவு என்பதையும் கூற மறுக்கின்றனர்.

21. கூடங்குளம் அணு உலை பற்றி இவ்வளவு குறைபாடுகள் சொல்கிறீர்கள்.  இவற்றை அரசாங்கத்திடமோ, நீதிமன்றத்திடமோ தெரிவித்தால் அவர்களே இத்திட்டத்தை நிறுத்திவிடமாட்டார்களா?

            அதுதான் வேதனையான செய்தி.  இந்தக் குறைபாடுகளை இந்திய அணுசக்தித் துறை கண்டு கொள்ளவோ, இது குறித்துப் பேசவோ தயாராக இல்லை.  இதற்காக மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களோடு 2002 மே 20ல் உச்சநீதிமன்றத்தை நாடிய போது, வாதத்தை மறுக்க முடியாத தலைமை நீதிபதி  பி.என். கிர்பால், மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் தாம் தலையிட முடியாதென்றும், மக்கள் சார்பின் வழக்குத் தொடர்ந்த காந்திகிராமப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் மார்க்கண்டனுக்கும், நாகர்கோவில் விஞ்ஞானி டாக்டர் லால் மோகனுக்கும் அபராதமும் விதித்தார்.  இதுதான் அரசின், நீதிமன்றங்களின் நிலைப்பாடு.

22. விபத்துக்கள் ஏற்படும் என்பதற்காக விமானம், இரயில் பயணங்களைத் தவிர்க்க முடியாது.  ஒருவேளை விபத்து ஏற்பட்டாலும் கூட ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக சிலர் தியாகம் செய்வது தவிர்க்க முடியாது என்கிறார்களே?

            விமான விபத்துக்களையோ, இரயில் விபத்துக்களையோ, அணு உலை விபத்துடன் ஒப்பிடக் கூடாது.  விமானம், இரயில் விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகள் வெறும் நூற்றுக்கணக்கில்தான் இருக்கும்.  விபத்தின் பாதிப்புகள் தொடராது.  ஆனால் அணு உலை விபத்தில் உயிரிழப்பு லட்சக்கணக்கில் ஏற்படும்.  பல லட்சம் பேர் கதிரியக்கத்தால் நோய்வாய்ப்பட நேரிடும்.   மேலும் அந்தக் கதிரியக்கப் பாதிப்புகள் பல தலைமுறைகளுக்குத் தொடரும்.  கண்ணிழந்து, உறுப்புகளை இழந்து குழந்தைகள் பிறக்க நேரிடும்.  மொத்தத்தில் அணு விபத்து என்பது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும்.

            விபத்து ஏற்பட்டால் கூடங்குளத்திலிருந்து குறைந்த பட்சம் 140கி.மீட்டருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.  விபத்திற்குப்பின் 77கி.மீ. வரை 20 ஆண்டுகளுக்கும், 115கி.மீ. வரை 5 ஆண்டுகளுக்கும், 140கி.மீ. வரை ஓராண்டு காலத்திற்கும் அங்கு வசித்த மக்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிப் போக முடியாது.  மொத்தத்தில் தென்தமிழகம் மக்கள் குடியிருக்க இயலாத நஞ்சுக்காடாகிவிடும்.

            கூடங்குளம் மக்கள் போராடுவது தங்கள் சொந்த நலனுக்காக மட்டுமில்லை.  நமக்கும், நம் பிள்ளைகளுக்கும் சேர்த்துதான்.

23. ஆனால் உலகெங்கும் அணு உலைகள் பாதுகாப்பாகத்தானே இயங்கி வருகின்றன.  விபத்துகள் ஏதும் பெரிய அளவில் நடக்கவில்லையே?

            யார் சொன்னது?  இரசியாவில் 1986ம் ஆண்டில் செர்நோபில் என்ற இடத்தில் ஒரு அணு உலை விபத்து ஏற்பட்டது.  இவ்வளவுக்கும் அப்போது அந்த அணுஉலை இயங்கிக் கொண்டிருக்கவில்லை.  மூடப்பட்டிருந்தது.  ஆனால் அந்த விபத்தின் காரணமாக 2004 வரை கிட்டத்தட்ட 9,85,000 போ புற்றுநோய் கண்டு உயிரிழந்ததாக இரசிய அரசே உறுதி செய்துள்ளது.

            மேலும் செர்நோபில் உலையிலிருந்து 2700 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இங்கிலாந்தில் அந்த அணுக்கதிர்வீச்சு உணரப்பட்டு 2,26,500 கால்நடைகளை உடனடியாகக் கொன்று புதைக்க இங்கிலாந்து அரசு உத்தரவிட்டது.  மீன்கள், மிருகங்கள், மரங்கள் தண்ணீர் என ஒரு நொடிப்பொழுதில் அனைத்தும் நஞ்சாக மாறிப் போயின.

            சொனோபிலில் நடந்ததை ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது.  இது மொத்த உலகத்தையே பாதித்த ஒரு விசயம் என்பதை இரசிய அதிபர் கோர்ப்பசேவ் நேர்மையாக ஒத்துக்கொண்டார்.

            ஆனால் இந்த விபத்து நடந்த மறு ஆண்டுதான் அதாவது 1987ல்தான் இந்தியாவில் அணுஉலைகள் அமைக்க இரசியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

            இதற்கு முன் 1979ல் அமெரிக்காவில் மூன்றுமைல் தீவு என்னுமிடத்தில் அணுஉலை ஒன்று வெடித்துச் சிதறியது.  இந்த விபத்திலும் கணிசமான எண்ணிக்கையில் மக்கள் உயிரிழந்ததோடு அந்தப்பகுதி மீண்டும் பயன்படுத்தமுடியாத அளவிற்கு நஞ்சாக மாறியது.

            சமீபத்தில் சப்பானில் புகுசிமாவில் நடந்த அணுஉலை விபத்தில் ஏற்பட்ட சேதங்களை தொலைக்காட்சியில் நாம் நேரடியாகவே பார்த்தோம்.  இவ்வளவுக்கும் அது அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தின் நேரடி மேற்பார்வையில் இருந்தது.  இந்த புகுசிமா அணுஉலையை மூடுவதற்கு கிட்டத்தட்ட 75ஆயிரம் கோடி செலவாகும் என்றும் 45 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

24. ஒன்றிரண்டு விபத்துக்கள் நடக்கின்றன என்பதற்காக அணுஉலைகளே வேண்டாம் என்று சொல்லமுடியுமா?  மற்ற நாடுகளில் அணு உலைகள் இயங்கத்தானே செய்கின்றன? 

            மூன்றுமைல் தீவு அணு உலை விபத்துக்குப் பின்னர்  1977க்குப் பின் அமெரிக்காவும், 1986ல் செர்நோபில் விபத்துக்குப் பின் இரசியாவும் இது நாள் வரை தன் நாட்டில் ஒரு அணுஉலை கூட புதிதாகத் திறக்கவில்லை.

            எல்லா நாடுகளுக்கும் யுரேனியம் விற்பதில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு அணுஉலை கூட கட்டப்படவில்லை. 

சுவிட்சர்லாந்து வரும் 2034ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட முடிவு செய்துள்ளது.

சப்பானில் புகுசிமா விபத்திற்குப் பின் 28 அணுஉலைகள் உடனடியாக மூடப்பட்டு விட்டன.  கட்டப்பட்டுக்கொண்டிருந்த 10 அணு உலைகளின் வேலைகள் நிறுத்தப்பட்டு விட்டன.

            செர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட உள்ளதாக அறித்துள்ளது.  ஆஸ்திரியா, அயர்லாந்து, கிரேக்கம் போன்ற நாடுகள் அணு உலையின் ஆபத்தை உணர்ந்து அதை மூடும் முடிவில் உள்ளன.

25. மற்ற நாடுகளை விடுங்கள்.  இந்தியாவில் உள்ள அணு உலைகள் நன்றாகத்தானே உள்ளன.  குறிப்பாக கல்பாக்கம் அணுஉலை நன்கு செயல்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது?

            கல்பாக்கம் அணுஉலை ஒன்றும் பிரமாதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கவில்லை.  அதன் திறன் வெறும் 170 மெகாவாட்தான்.  1987 மே 4ம் தேதி அதன் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகாலம் மூடப்பட்டுக்கிடந்தது.  300 மில்லியன் டாலர்  செலவு செய்து அது சீரமைக்கப்பட்டது.  2002ம் ஆண்டு அக்டோபா 22ல் சோடியம் கதிர்வீச்சு ஏற்பட்டு அதைச் சரிசெய்ய 30 மில்லியன் டாலர்  செலவு செய்யப்பட்டது.  1999 மார்ச் 26ல் 40 டன் எடையுள்ள கன நீர் கொட்டி அதைச் சுத்தம் செய்த தொழிலாளி உயிரிழந்தார்.  2000 சனவரி 24 அன்று பெரும் கதிரியக்கக் கசிவு ஏற்பட்டு அதை இந்திய விஞ்ஞானிகளால் சரிசெய்ய இயலாமல் வெளிநாட்டிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

            கல்பாக்கம் அணு உலைக்கும் ஆபத்துக்கள் எந்த நேரமும் வரலாம்.  அதன் தென்கிழக்கே 104கி.மீல் 03051 என்ற எண் கொண்ட எரிமலை ஒன்று கடலுக்கடியில் குமுறிக்கொண்டிருக்கிறது.  அது வெடிக்கும்போது பெரும் சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

            இவை ஒருபுறம் இருக்க கல்பாக்கம் உலையின் கழிவு நீர் கடலில் கொட்டப்படுவதால் கடல் வெப்பம் 8 டிகிரி வரை அதிகரித்து மீன் வளம் குறைந்தது.  மீனவர்கள் இடம் பெயர்ந்தனர்.  அங்கு வசிக்கும் மக்கள் நோயால் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அப்பகுதி மருத்துவர்கள் ஆதாரங்களுடன் விளக்குகிறார்கள்.

            அதே போல் தாராப்பூர் அணு உலை கட்டப்படும் போது அங்கு இருந்த மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை 700.  இப்போதோ வெறும் 20 மட்டுமே.  அப்பகுதியில் பிடிபடும் மீன்களில் கதிரியக்கம் இருப்பதை மும்பை உயர்நீதிமன்றமே உறுதி செய்துள்ளது.  1989 செப்டம்பர் 10-ல் அங்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 700 மடங்கு கதிர்வீச்சு ஏற்பட்டது.  அதை சரிசெய்ய ஆன செலவு 78 மில்லியன் டாலர் . 

1995 பிப்ரவரி 3ம் தேதி ராஜஸ்தான் கோட்டா அணு உலையில் ஹீலியம் கன நீர் கசிவு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் உலை மூடப்பட்டது.  சரி செய்ய ஆன செலவு 280 மில்லியன் டாலர் .  எனவே அணு உலைகளால் பாதிப்புகள் இல்லை என்பது அப்பட்டமான பொய்.

26. ஒருவேளை விபத்துக்கள் நடந்தால் நம் அரசுகள் நம்மைக் காப்பாற்றாது என்று கூறுகிறீர்களா?

Image

            நிச்சயமாக, இந்த அரசுகள் போன 2004 சுனாமியின் போது எப்படி நம்மைப் பாதுகாத்தன என்பதைக் கண் முன்னால் பார்த்தோம்.  சுனாமி இந்தோனேசியாவைத் தாக்கி 5 மணி நேரம் கழித்தே இந்தியக் கடலைத் தொட்டது.  இதை மக்களுக்கு எச்சரிக்கை செய்யாமல் விட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வெளிநாட்டு நிறுவனங்களை நம்பி இருந்ததுதான் இந்தியாவின் நிலை.  இந்தியாவின் பேரிடர் மேலாண்மை உலகறிந்த செய்தி.

            இந்திய அரசின் மக்கள் மீதான அக்கறைக்கு ஒரு எடுத்துக்காட்டு போபால் சம்பவம்.  போபாலில் கடந்த 1984ம் ஆண்டு டிசம்பர் 2,3 ஆகிய தேதிகளில் யூனியன் கார்பைடு (எவெரெடி) நிறவனத்திலிருந்து மீதைல் ஐசோ சயனைடு என்ற விசவாயு கசிவு ஏற்பட்டது.  இதை சுவாசித்த 5000க்கு மேற்பட்ட மக்கள் உடனடியாக இறந்து போனார்கள்.  பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 20,000 பேர் இறந்து போனார்கள்.

            காங்கிரசு தலைமையிலான அரசு உடனே என்ன செய்தது தெரியுமா,  அந்த அமெரிக்க நிறுவனத்தின் தலைவர்  அண்டர்சனை தனி விமானத்தில் ஏற்றி டெல்லி வழியாக அமெரிக்காவிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.  26 வருடங்கள் நடத்திய வழக்கில் அண்டர்சன் ஆஜராகவே இல்லை.  இத்தனை ஆண்டுகள் கழித்த பின்னரும் குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு முழுமையாக வழங்கப்படவில்லை.  இதுதான் இந்திய அரசு மக்களைக் காக்கும் லட்சணம். 

            இன்னும் தமிழர்கள் பிரச்சினை என்று வந்துவிட்டால் இந்தியாவிற்கு கொண்டாட்டமாகிவிடும்.  கேரள மீனவர்கள் சுடப்பட்டதால் இத்தாலி கப்பல் கேப்டனை கைது செய்பவர்கள், கப்பலை சிறைபிடிப்பவர்கள் இராமேசுவரம் மீனவர்கள் சுடப்படும் பொழுது எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது நமக்குத் தெரிந்ததுதானே.

27. இப்போது சமீபத்தில் விபத்து நட்டஈடு சட்டமெல்லாம் நிறைவேற்றினார்களே!  அதில் கூட நியாயம் கிடைக்காதா?

            அந்த சட்டமே அவர்களாகப் போட்ட சட்டமில்லை.  வெளிநாட்டு நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக அவர்களைக் காப்பாற்றுவதற்காக அரசு நிறைவேற்றிய சட்டம்.  இதன் மூலம் இழப்பீட்டுத் தொகையின் உச்சவரம்பு 2500 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  எவ்வளவு பெரிய விபத்து நடந்தாலும் அதிகபட்சமாக 2500 கோடியைக் கொடுத்துவிட்டு அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் ஒதுக்கிக் கொள்ளும். மீதியை நாம்தான் சுமக்க வேண்டும்.

            கூடங்குளம் அணுஉலை விசயத்திலோ இன்னும் கொடுமை.  விபத்து நடந்தால் அந்த இரசிய நிறுவனம் எந்தப் பொறுப்பும் ஏற்காது.  எல்லாம் இந்திய அரசுதான் ஏற்கவேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. 

            அது சரி! விபத்தே நடக்காது என்றால் நட்ட ஈடு சட்டம் எதற்கு என்பதுதான் விளங்கவில்லை.

28. இப்படியெல்லாம் பயந்தால் வரலாறு படைக்க முடியுமா?  நாடு முன்னேறுவது எப்படி?

            அஞ்சுவது அஞ்சாமை பேதமை. கண்டிப்பாக பெரு விபத்துக்கள் நடக்கும், பேரழிவுகள் ஏற்படும் என்று தெரிந்த பின்னரும் அதைத் தொடர்வது முட்டாள்தனம்.

            நாட்டு முன்னேற்றத்திற்கு மின்சாரம் அவசியம்.  இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.  ஆனால் மின்சாரம் தயாரிக்க பல நல்ல வழிகள் உள்ள போது அணு உலை மூலமாகத்தான் மின்சாரம் தயாரிப்போம் என்று பிடிவாதம் பிடிப்பதற்குக் காரணம் நாட்டு முன்னேற்றம்  அல்ல.

மேலும் இந்தியாவில் அணு சக்தி மின்சாரம் என்பது வெறும் 3% மட்டுமே. இதை வைத்து வரலாறு படைக்கப் போவதாகச் சொல்வது காதில் பூச் சுற்றும் வேலை.

29. அப்படியானால் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைச் சமாளிக்க என்னதான் வழி என்று கேட்கிறார்களே?

            அன்னியச் சந்தைக்காக உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், அவர்களுக்கான தடையற்ற மலிவு விலை மின்சாரம், உலக மயம் தோற்றுவிக்கும் நுகர்பொருள் கலாச்சாரம், கேளிக்கை விடுதிகள், முழுக்கக் குளிரூட்டப்பட்ட மால்கள், நகரிய வேடிக்கைகள் என்று பெரும்பான்மை மக்களாகிய நம்மைச் சுரண்டும், புறந்தள்ளும் ஒரு பாதையை வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள், அதற்கு மின் வினியோகம் செய்வதற்கு மட்டும் ஆலோசனையை நம்மிடமே கேட்பது அயோக்கியத்தனம்.  காற்றாலை, சூரிய ஒளி என மாற்றுவழிகள் குறித்து நாம் அவர்களுக்கு விளக்கிக் கொண்டிருப்பது இளிச்சவாய்த்தனம்.

30. பிற வழிகளில் மின்சாரம் தயாரித்தால் அதிக செலவாகும்.  அணுமின்சாரம்தான் மலிவானது.  சுத்தமானது என்று சொல்கிறார்களே?

            மின்சாரம் தயாரிப்பில் அதற்கான மொத்த செலவுகளையும் கணக்கிடவேண்டும்.  அணுஉலை கட்டுவதற்கான செலவு, அதை இயக்குவதற்கான செலவு, பிறகு அதை மூடுவதற்கான செலவு என எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்.  இந்த உலைக்காக அரசு வழக்கும் 200 விழுக்காடு மானியத்தையும் கணக்கிட்டோமானால் அணு மின்சாரத்தின் விலை மிகவும் அதிகம்.

            மேலும் இந்த அணு உலைகள் மற்ற திட்டங்களைப் போல் காலங்காலமாக பலன்தரக் கூடியவை அல்ல.  இவற்றின் ஆயுள் வெறும் 30 ஆண்டுகள் மட்டுமே.  பின் இந்த உலைகளை மூடுவதற்கு பல ஆயிரம் கோடி செலவாகும்.

            அணு மின்சாரம் சுத்தமானது என்று சொல்வது கேலிக்குரியது.  கடல்நீரை ஒரு நாளைக்கு 32லட்சம் லிட்டர் உறிஞ்சி அதை உப்பு அகற்றி உலையைக் குளிர்விக்கப் பயன்படுத்துகிறார்கள்.   அந்த உப்புக் கழிவுகளை மீண்டும் கடலில்தான் கொட்டுவார்கள்.  குளிர்வித்த நீர் வெந்நீராக திருப்பி கடலில்தான் கொட்டப்படுகிறது.  கடலில் கொட்டப்படும் வெந்நீரால் அப்பகுதி மீன்வளம் பாதிக்கப்படும்.  சுமார் 4 டிகிரி வெப்பம் உயர்ந்தாலே நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து மீன்கள் இறக்க நேரிடும்.  அணு உலையின் கதிரியக்கச் செயல்பாடுகளால் சுற்றுப்புறமும் சீர்கெடும்.  மக்கள் நோய்க்கு உள்ளாவார்கள்.   இவை எல்லாவற்றையும் விட மிக ஆபத்தானது அணுக்கழிவுகள்.  அணுக்கழிவுகளை என்ன செய்யப்போகிறோம் என்பதை அணுஉலை நிர்வாகம் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

31. அணுஉலையின் விஞ்ஞானி சிரிகுமார் பானர்ஜி பேசுகையில் அணுக்கழிவு சிறிய அளவில் தான் இருக்கும்.  அதை மறுசுழற்சி செய்து ஆபத்தில்லாத சிறிய பந்தாக  மாற்றி எங்கள் வீட்டு வரவேற்பறையில் வைத்துக்கொள்வோம் என்று கூறினாரே?

            இதுதான் அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்டம்.  அவர் சொன்ன சிறிய அளவு என்பது எவ்வளவு தெரியுமா?  சுமார் 30 முதல் 50 டன்கள். 30 ஆண்டுகளில் 1500 டன்கள் வரை இந்த அணுக்கழிவுகள் உருவாகும்.  உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் இந்த அணுக்கழிவுகளை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இரகசியமாக வேற்று நாட்டு கடலுக்குள்ளும், மலைகளுக்குள்ளும் புதைத்து வருகிறார்கள்.

            அணுக்கழிவுகளை ஆபத்தில்லாததாக மாற்றுவதற்கு எந்த தொழில்நுட்பமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.  அவற்றை ஈயப் பெட்டகங்களில் இட்டு பூமிக்குள் புதைப்பதுதான் இதுவரை நடைமுறையாக உள்ளது.

            கூடங்குளம் அணுஉலையின் கழிவுகள் முதலில் இரசியாவிற்கு எடுத்துச் செல்லப்படும் என்று கூறினார்கள்.  பின் கல்பாக்கம் எடுத்துச் செல்வோம் என்று கூறினார்கள்.  இப்போது கூடங்குளத்திலேயே புதைப்போம் என்கிறார்கள்.  மிகப்பெரிய கதிரியக்கத்தை உருவாக்கும் அணுக்கழிவுகளை நம் நிலத்தில் புதைத்து நஞ்சாக்குவதை நாம் எப்படி அனுமதிப்பது.  பானர்ஜி சொன்னது மாதிரி புளுட்டோனியத்தை ஒரு உருண்டை உருட்டி அவர் வீட்டில் வரவேற்பறையில் வைக்கட்டும்.  பிறகு நாமே அணுஉலைகளை வரவேற்போம்.

32. அப்படியானால் 13,500 கோடி செலவில் கட்டப்பட்ட அணு உலையை மூடுவதுதான் தீர்வா?  இத்தனை கோடி ரூபாய்களை வீணாக்குவதா?

            அணு உலையை அனல்மின் உலையாக மாற்றலாம்.  அணுவிற்குப் பதிலாக இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம்.  அவ்வாறு மாற்றிய முன்னுதாரணங்கள் பல வெளிநாட்டில் உண்டு.  அப்படி முடியாவிட்டால் உலையை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை.

            ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு 1,78,000 கோடி.  சேதுசமுத்திரத் திட்டத்தில் கடலில் தூர்வாரி பின் அதை மதவாத சக்திகளுக்குப் பணிந்து பாதியிலேயே கைவிட்டதில் வீணானது பல ஆயிரம் கோடி.  காமன்வெல்த் விளையாட்டு அரங்கம் நிர்மாணித்ததில் செய்த ஊழல் பல ஆயிரம் கோடி.  இந்திய அரசியல்வாதிகள் கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் பல லட்சம் கோடிகளை ஒப்பிடும்போது இது வெறும் கொசு.

33. நீங்கள் இந்த விபரங்களை அணுஉலை கட்டுமுன்னரே வெளிப்படுத்தியிருக்கலாமே? கட்டும் வரை பேசாமல் இருந்துவிட்டு இப்போது போராட்டம் நடத்துவது என்ன நியாயம்?

            கட்டும்வரை பேசாமல் இருந்ததாக அரசியல்வாதிகள் கூறுவது முழுப்பொய்.  ஊடகங்கள் பெரிதாக பேசவில்லை அல்லது நமக்குத் தெரியவில்லை என்பதற்காக போராட்டம் நடக்கவில்லை என்று கருதக்கூடாது.

            1987லிருந்து தொடர்ந்து போராட்டம் அங்கு நடந்து கொண்டிருக்கிறது.  1987 செப்டம்பர் 22ல் இடிந்தகரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  1988ல் இந்தியாவுக்கு வந்த இரசிய அதிபர் கார்ப்பசேவுக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது.  1989-ல் நெல்லையில் ஒரு பெரிய பேரணி நடத்தப்பட்டது.  1989 மார்ச் 20 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற பெரிய பேரணியில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கலந்து கொண்டார். 

            1989 மே 1ம் தேதி தேசிய மீனவர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கன்னியாகுமரி பேரணியில் தடியடியும், துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது.

            இந்த கூடங்குளம் அணுஉலையின் அடிக்கல் நாட்டு விழா தொடர் எதிர்ப்பின் காரணமாக மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டது.  ராஜீவ் காந்தி, ஆர். வெங்கட்ராமன், கருணாநிதி ஆகியோர் அதில் கலந்து கொள்ள முடியாத அளவிற்குப் போராட்டம் நடைபெற்றது.

            ஒருமுறை இசையமைப்பாளர் இளையராசா அணு உலை எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்டபோது உடனடியாக அவரது வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றது.

            2002ல் அணுஉலையை நிலவியல் ரீதியாக ஆய்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டு வழக்குத் தொடர்ந்த காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தின் முன்னால் துணைவேந்தருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

            இப்படி அரசின் கடுமையான அடக்குமுறைகளை மீறி தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  ஊடகங்கள் வழக்கம்போல் மக்கள் போராட்டங்களை இருட்டடிப்புச் செய்கின்றன.

            இடையில் சோவியத் இரசியா உடைந்த காரணத்தால் 10 ஆண்டுகளுக்கு அணுஉலை கட்டும் பணி நிறுத்தப்பட்டது.  2001-ல் இருந்துதான் மீண்டும் கட்டத்தொடங்கினார்கள்.  அணுமின் நிலையத்தைப் போலவே படிப்படியாக போராட்டமும் வளர்ந்து நிற்கிறது.  புகுசிமா விபத்திற்குப்பிறகு மக்களிடையே அணுஉலையின் நாசங்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகவே இப்போராட்டங்கள் வலுப்பெற்றன. 

34. அந்நிய நாட்டின் சதி காரணமாகவே எதிர்ப்புப் போராட்டம் நடப்பதாகவும், அதற்கு வெளிநாட்டுப் பணம் வருவதாகவும் மத்திய அமைச்சர் நாராயணசாமியும் பிரதமர் மன்மோகன்சிங்கும் குற்றம் சாட்டுகிறார்களே?

            கூடங்குளம் அணுஉலை இரசிய தொழிற்நுட்பம் என்பதால் அமெரிக்க சதி பின்னணியில் இருப்பதாக குற்றம் சுமத்துகிறார்கள்.  ஆனால், அமெரிக்க தொழிற்நுட்பத்துடன் நடக்கும் தாராப்பூர் அணு உலையையும் எதிர்த்து இதே போன்று போராட்டங்கள் நடக்கிறதே.  அங்கு எந்த நாட்டு சதி பின்னணியில் இருக்கிறது?  இன்னும் சொல்லப்போனால் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திரு. உதயகுமாரை அமெரிக்கக் கைக்கூலி என்றே விமர்சிக்கிறார்கள்.  ஆனால் இதே போன்று மேற்கு வங்கத்தில் ஹரிப்பூரில் ஒரு அணுஉலையை மூடினாரே அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.  அவர் பின்னால் எந்த அந்நிய நாடு உள்ளது?  அவர் எந்த நாட்டு கைக்கூலி?  அவர் எந்த நாட்டிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு அதை மூடினார்.

            கூடங்குளம் மட்டுமல்ல, மகாராசுடிராவின் ஜெய்தாபூரிலும் ஏன் ஆந்திரா, கர்நாடகாவிலும் அணுஉலை எதிர்ப்புப் போராட்டங்கள் நடக்கின்றனவே.  அங்கு எந்த அன்னிய சதி உள்ளது.  தைரியமிருந்தால் இதே காங்கிரசுக் கட்சி தான் ஆட்சி செய்யும் கேரளாவில் வேண்டுமனால் ஒரு அணுஉலை திறந்து பார்க்கட்டுமே.

            வெறும் காசுக்காக வேலை செய்வது அரசியல்வாதிகள் மட்டுமே. மக்களுக்காக உழைக்கும் போராளிகளை கொச்சைப் படுத்துவதிலும் மூன்றாந்தர அரசியல் பாணியில் இழிவுபடுத்திப் பேசுவதிலும் மன்மோகன், நாராயணசாமியின்  தரம் நமக்குப் புரிகிறது.

            இவ்வளவுக்கும் மன்மோகன், நாராயணசாமியின் கைகளில்  ஆட்சி உள்ளது. அதிகாரம் உள்ளது. காவல்துறை உள்ளது.  ஏதாவது தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்.  அதை விட்டு மக்கள் போராட்டத்தை இழிவுபடுத்துவது மிகவும் கேவலமான ஒரு செயல்.

35. சில தொண்டு நிறுவனங்கள் தான் இந்தப் போராட்டத்தை நடத்துவதாக குற்றம் சுமத்துகிறார்களே?

            மக்கள் பங்களிப்பு இல்லாமல் வெறும் தொண்டு நிறுவனங்கள் மட்டுமே ஒரு போராட்டத்தை நடத்திவிடமுடியாது.  அல்லது காசு கொடுத்து மட்டும் ஒரு எழுச்சியை உருவாக்கிவிட முடியாது.  180 நாட்களுக்கு மேல் நடக்கும் இந்தப் போராட்டத்தை மக்கள் அர்ப்பணிப்பு இல்லாமல் யாராலும் நடத்திவிட முடியாது. மேலும் நியாயமான மக்கள் போராட்டத்தில் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்கக்கூடாதா என்ன? 

36. கூடங்குளம் பகுதி மக்கள் அணு உலையை தீவிரமாக எதிர்க்கிறார்கள்.  ஆனால் வெளி மாவட்ட மக்களோ அணு உலையை ஆதரிக்கிறார்களே?

            உண்மைகளை அறிந்த, அறிவியலை அறிந்த எல்லோருமே அணு உலையை எதிர்க்கத்தான் செய்கிறார்கள்.  மத்திய அரசு, காங்கிரசு கட்சி, பிஜேபி, இந்து முன்னணி போன்ற சிலர் தம் கட்சிக்காரர்களை விட்டு ஆதரவுப் போராட்டம் நடத்துகிறார்கள்.  உண்மைகளை அப்பாவி மக்கள் தெரிந்து கொள்ளா வண்ணம் தடுக்கிறார்கள்.  மின்வெட்டை அதிகப்படுத்தி, கூடங்குளம் அணு உலை வந்தால்தான் மின்வெட்டுத் தீரும் என்று பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள்.  உண்மையில் மின்வெட்டுப்பிரச்சினை வேறு, அணுஉலைப் பிரச்சினை வேறு.  இரண்டையும் தொடர்புப்படுத்திப் பார்க்கக்கூடாது.  மின் பற்றாக்குறைக்கு அணு உலை தீர்வு ஆகாது. 

            மின்சாரம் தயாரிப்பதற்கு பல மாற்று வழிகள் இருந்தாலும் அணு உலை மூலமாகத்தான் நாங்கள் மின்சாரம் தயாரிப்போம்.  அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் மின்தடைதான் என்று மிரட்டுவது அரசின் பிடிவாதத்தைக் காட்டுகிறது.

            கூடங்குளம் பகுதி மக்கள் கேட்பது எங்களின் பிணக் குவியலிலிருந்துதான் மின்சாரம் பெறப்பட வேண்டுமா?  எங்கள் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் அழித்துத்தான் மின்சாரம் தயாரிக்க வேண்டுமா?  என்பதுதான்.

            நீங்கள் எக்கேடும் கெட்டுப்போங்கள், எங்களுக்குத்தேவை 2 விளக்கு, ஒரு மின்விசிறி என்று பதிலளித்தால் அது சுயநலத்தின் உச்சம்.

37. மக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொள்ளாமல் அரசு ஏன் அணுஉலை வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறது?

            அதில்தான் அவர்கள் மக்களுக்குச் சொல்லாத உள்குத்து அரசியல் இருக்கிறது.  இந்த அணுஉலை மட்டுமல்ல.  இது போன்று 80 அணுஉலைகளை வாங்குவதற்கு வெளிநாடுகளோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறது இந்திய அரசு.  இதில் கைமாறும் இந்திய பணம் எவ்வளவு தெரியுமா?  மொத்தம் 8 லட்சம் கோடி.  இப்போது தெரிகிறதா இந்த அரசியல்வாதிகள் ஏன் இதில் வெகு ஆர்வமாயிருக்கிறார்கள் என்பது. நம் வரிப்பணம் 8 லட்சம் கோடியைத் தூக்கி அந்நிய நாட்டு முதலாளிகளுக்குக் கொடுத்துவிட்டு பதிலாக எமனாய் அணுஉலையை நம் தலையில் கட்டுகிறார்கள்.  இதுதான் இவர்களின் தேசபக்தியின் கதை.  அணுஉலை மூடப்பட்டால் அணு வியாபாரிகளுக்கும், அரசியல்வாதி களுக்கும்தான் இழப்பேயொழிய மக்களுக்கு அல்ல.

            இரசிய, அமெரிக்க தனியார் முதலாளிகளின் இலாபம் முக்கியமா அல்லது மக்களின் உயிரும், சந்ததியின் எதிர்காலமும் முக்கியமா.

38. இது கிறித்தவ மக்களின் போராட்டம் என்றும், சர்ச் பாதிரியார்கள் பின்னணியில் இருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்களே?

            அந்தப்பகுதி கிராமங்கள் பெரும்பாலும் மீனவ கிராமங்கள்.  அங்கு அதிக எண்ணிக்கையில் கிறித்தவர்கள் வாழ்கிறார்கள் என்பது உண்மை.  அவர்கள் கிறித்தவர்களாயிருப்பதால் தம் வாழ்வை அழிக்கும் அணு உலையை எதிர்த்துப் போராடக் கூடாது என்கிறீர்களா?

            கிறித்தவப் பாதிரியார்கள் பின்னணியில் இல்லை.  நேரடியாகவே மக்கள் போராட்டங்களில் பங்கேற்கிறார்கள்.  அதிலென்ன தவறு.  இன்னும் கணிசமான அளவில் இந்துக்களும், இசுலாமியாகளும் ஏன் கேரள மீனவ மக்கள் கூட இப்போராட்டத்தில் இருக்கிறார்கள்.

39. இந்து முன்னணி, பிஜேபி ஆகியோர் அணு உலையை ஆதரிப்பதன் மர்மம் இதுதானா?

            சரியாகப் புரிந்து கொண்டீர்கள்.  சேது சமுத்திரத் திட்டத்தை ராமர்பாலம் கடலுக்குள் இருப்பதாகக் கூறி நிறுத்திய கட்சி பிஜேபி. அவர்களுக்கு அணுஉலையைத் திறக்கச் சொல்லிக் கேட்பதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது.

40. அணு உலையை உடனே திறக்க வேண்டும் என்று காங்கிரசுக் கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்களே?

            ஆமாம்.  இந்த நாட்டை ஏறத்தாழ 50 ஆண்டுக்காலம் மத்தியில் ஆட்சி செய்த கட்சி காங்கிரசுதான்.  இத்தனை ஆண்டுகளில் காங்கிரசு, மக்களுக்கான ஒரு போராட்டத்தையாவது நடத்தியிருக்கிறதா?  சத்தியமூர்த்தி பவனில் வேட்டி கிழிய சண்டையிடுவதைத் தவிர வேறென்ன செய்திருக்கிறார்கள் தமிழக காங்கிரசார்.  மக்களைப்பற்றி இப்போதென்ன புதிதாக அக்கறை!          புகுசிமா விபத்துக்குப் பிறகு உலகிலேயே அணு உலை வேண்டும் எனக் கேட்கும் ஒரே குழு காங்கிரசுக் கட்சியினர் மட்டும்தான்.

41. சி.பி.எம் முதலான கட்சிகள் கூட அணுஉலையை ஆதரிக்கின்றனவே?

            ஈழப்பிரச்சினை நடந்தபோது சி.பி.எம். என்ன செய்தது என்பது நாமெல்லோரும் அறிந்ததுதான்.  ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் சி.பி.எம்.மின் புத்ததேவ் பட்டாச்சார்யா நந்திகிராம், சிங்கூரில் முதலாளி டாடாவிற்கு அனுசரணையாக மக்களை எப்படி இரும்புக்கரம் கொண்டு அடக்கினார் என்பதெல்லாம் நாடறிந்த செய்தி.  சி.பி.எம். கட்சி மார்க்சியக் கொள்கைக்கு ஒரு தேசிய அவமானம். 

42. அணு உலை எதிர்ப்பாளர்கள் தேசத்துரோகிகள்.  நாட்டின் வளர்ச்சிக்கு, தொழில் முன்னேற்றத்திற்கு தடை செய்பவர்கள் என்று சொல்கிறார்களே?

            இந்த நாட்டை கொள்ளையடித்து, சுரண்டி, இயற்கை வளத்தை வெளிநாட்டினருக்கும், தனியாருக்கும் தாரை வார்த்து அதில் கமிசன், லஞ்சம் பெற்று, அந்தப் பணத்தை சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்புப் பணமாகப் பதுக்கி வைத்திருக்கும் இந்த அரசியல்வாதிகள், தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், தம் சந்ததியரின் நலம் காக்கவும், தம் சொந்த நிலத்தைக் காக்கவும் போராடும் மக்களைப் பார்த்து தேசத் துரோகிகள் என்று சொல்வது மகா அயோக்கியத்தனம்.

            அரசியல்வாதிகளில் யோக்கியர் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே.  நாட்டின் நீர்வளத்தை கொக்கோகோலா, பெப்சி நிறுவனத்திற்கு விற்றவர்கள், அரசு நிறுவனங்களை தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்தவர்கள், சுதேசி உள்நாட்டு நிறுவனங்களை கொன்றவர்கள், மான்சான்டோ விதைகளை அனுமதித்து நிலத்தை மலடாக்கியவர்கள் தான் இந்த புதிய உலகப் பொருளாதார மேதைகள்.  இவர்கள்  நாட்டின் தொழில்வளத்தைப் பற்றி கவலைப்படுவதாக கூறுவது, ஆடு நனைகிறதே என்று அழுத ஓநாயின் கதைதான்.

            ஏற்கனவே 1,82,000 மெகாவாட் தயாரிக்கப்படும் இந்த நாட்டில் 42% கிராமங்களுக்க மின் இணைப்பு இல்லை.  சென்னையின் வெறும் 500 நிறுவனங்கள் மட்டுமே தமிழக மின் உபயோகத்தின் 40%-ஐ செலவு செய்கின்றன.  சிறு குறு தொழில்கள், விவசாயத்திற்கு 8 மணி நேர மின் வெட்டு.  ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம்.  இதுதான் இந்தியாவின் தொழிற்கொள்கை. 

43. இறுதியாக என்னதான் சொல்கிறீர்கள்?

            மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அவர்கள் மீது திணிக்கக்கூடாது.  அது அராஜகம்.  சென்ற தலைமுறை நமக்கு விட்டுச் சென்ற இயற்கையை வரும் தலைமுறைக்கு பாதுகாப்பாக விட்டுச் செல்ல  வேண்டிய தார்மீகக் கடமை நமக்கு உண்டு.  இயற்கையை நஞ்சாக்க யாருக்கும் உரிமை இல்லை.  மக்கள் நலனை மறுக்கின்ற அறிவியல் அறிவியலே அல்ல.  மக்களுக்காகத்தான் எல்லாமே, அவர்களை அழித்து அல்ல.

            மக்களின் நியாயமான சந்தேகங்களுக்கு அரசுகள் பதில் சொல்லட்டும்.  ஒரு திறந்த விவாதத்திற்கு அரசுகள் வரட்டும்.  அதை விட்டுவிட்டு வெளிநாட்டு பணம் என்றும், தேசத் துரோகம் என்றும், அந்நிய சதி என்றும் மூன்றாந்தரக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவது மக்கள் பக்கமிருக்கும் நேர்மையை கொச்சைப்படுத்துவதாகும்.

            மின்சாரத் தேவைக்கும் அணுஉலைக்கும் சம்பந்தம் இல்லை.  இரண்டும் வேறுவேறு பிரச்சினைகள்.  தவறான மின் பகிர்மானக் கொள்கையாலும், தனியாருக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டதாலும் தான் மின்தடைப் பிரச்சினையேயொழிய அணுஉலை திறக்கப்படாமலிருப்பது அதற்குக் காரணம் அல்ல. மக்களுக்கு இதைத் தெளிவாக்க வேண்டியது நம் கடமை.

            மின் தடையை நீக்கக் கோரி மக்களோடு இணைந்து நாமும் போராடுவோம்.  ஆனால் அதற்காக கொலைகார அணுஉலையை அனுமதிக்க முடியாது.  வேண்டுமானால் மக்கள் நடமாட்டம் இல்லாத ராஜஸ்தான் பாலைவனங்களில் அவர்களது அணு சோதனைகளை நடத்திக்கொள்ளட்டும்  அல்லது பாதுகாப்பானது என்ற தைரியமான நம்பிக்கை இருந்தால் டெல்லியில் கொண்டுபோய் வைத்துக்கொள்ளட்டும்.

ImageImage

அணுமின்சாரம் புனிதமானது

Imageஅணுஉலை விவகாரம் ஆரம்பித்தாலும் ஆரம்பித்தது இந்த அறிவாளிகளின் கொசுத்தொல்லை தாங்கலைடா சாமி.

                ஏதோ நிரோத் ஆணுறை விளம்பரம் மாதிரி அணுஉலை நூறு சதவீதம் பாதுகாப்பானது.  ஒன்றும் ஆகாது.  எதுவுமே நடக்காதுன்னு கற்பூரம் ஏத்தி ஆத்தா சத்தியமான்னு அடிச்சுச் சொல்லும் அறிவாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிப் போச்சு.  ஆளுக்காளு அட்வைஸ் போட ஆரம்பிச்சுட்டாங்கப்பா.

                இதுல இடையில நம்ம அப்துல்கலாம் ஐயர் வேற.  நானும் இரண்டாவது தடவையா நேர போயிப் பாத்தேன். அரை மணி நேரம் சுத்திப் பாத்தேன்.  பாதுகாப்பு ரொம்ப நல்லா இருக்கு.  6 ரிக்டர் வரையிலும் உள்ள நிலநடுக்கத்தால பாதிப்பில்லை.  13 மீட்டர் உயரத்தில் அணுஉலை இருக்கிறதால சுனாமியால கூட பாதிப்பு இல்லைனு சகட்டுமேனிக்கு சர்டிபிகேட் கொடுக்க, உண்மையிலே அப்படித்தானோனு நமக்கே சந்தேகமாகிப் போச்சு.

                அய்யா விஞ்ஞானிகளே..

                வர்ர பூகம்பம் 6 ரிக்டருக்குக் கீழே தான் வரும்னு யாராவது மை போட்டுப் பாத்தாங்களா?  இல்லை சுனாமி தான், இங்க அணுஉலை இருக்கு.  நம்ம 13 மீட்டர் உயரத்துக்கு கீழதான் வரணும்னு கட்டுப்படாவா வரும்.  வர்ர கழுதைகளுக்கு இந்த டெக்னிகல் விபரம் எல்லாம் புரியவா போகுது.  அப்படி மீறி விபரம் கெட்ட தனமா வந்துருச்சுன்னா என்னங்கய்யா பண்றது?

                ஒரு நாள் ரெண்டு நாள் வந்து பாத்திட்டு எல்லாம் நல்லாயிருக்குன்னுட்டு நீங்க போயிருவீங்க.  இங்க காலமெல்லாம் கதிரியக்கத்தோட கட்டி மாரடிக்கப் போறது நாங்கதான. 

அணு உலை நல்லதுன்னு சொல்றதுக்கு ஓடோடி வந்த முன்னாள் சனாதிபதி அவர்களே, நீங்க இதுவரையும் வேற எதுக்காவது முனங்கியாவது இருக்கீங்களா? மக்களுக்குப் பிரச்சினையா இல்லை? ஒன்றரை லட்சம் மக்களை ராச பட்சே கொன்று குவித்துக் கொண்டிருந்த போது இந்தியாவைப் போல் நீங்களும் வாயை இறுக்கி மூடிக் கொண்டுதானே இருந்தீர்கள். ஏன், உங்கள் ஊர் மீனவ சொந்தங்கள் சுடப்பட்டு, அடித்து விரட்டப்பட்டு அழும் பொழுது நீங்க சந்திரனுக்கு எங்கயும் போகலையே? இங்கதான இருந்தீங்க? முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு, எதைப் பத்தியும் நீங்க  மூச்சுக் கூட விட்டதில்லையே? இப்ப மட்டும் என்ன வேர்த்து வடியுது? 200 கோடிக்கு உடனே கூடங்குளம் மக்களுக்கு நிறைவேற்றித் தரணும்னு சொல்றீங்க? லஞ்சத்தை சட்டபூர்வமா கொடுக்க ஏற்பாடு பன்றீங்களா? அரசியல்வாதிகளே தோத்தாங்க போங்க. அய்யா, இந்தியா 2020குள்ள வல்லரசு ஆகணுமேன்கிற உங்க அவசரம் எங்களுக்குப் புரியுது. ஆனா அணு ஆயுதங்கள் உள்ள வல்லரசை விட மக்கள் நலம் பேணும் நல்லரசுதான் முக்கியம்னு உங்களுக்குப் புரியாதா என்ன? நல்ல மனுசன்னு பேர் வாங்கின உங்களுக்கே இந்த புத்தின்னா மத்தவங்களைப் பத்திக் கேக்கவே வேணாம்.

                நாங்கதான் சொல்றோம்ல.  பூகம்பம் வராது, சுனாமி வராது.  வராதுன்னா, வராதுதான் அப்டீன்றாங்க.  வரவர கடவுள் மேல இருக்கிற பயம் தான் கொறஞ்சு போச்சுனா பஞ்ச பூதங்கள் மேல இருக்கிற பயமும் கொறஞ்சு போச்சு.  இதெல்லாம் நாட்டு ஷேமத்துக்கு நல்லதில்லை.  உங்க பிஜேபி காரங்ககிட்ட சொல்லி வைங்க.

                ஏன் தான் பேர் வைச்சாங்களோ ‘இடிந்த கரை’ன்னு.  உண்மையிலேயே இடிச்சுத் தரை மட்டம் ஆக்கியே புடுவீங்க போல இருக்கு.  பொண்டாட்டி பிள்ளைங்க குஞ்சு குளுவானோட எங்க எதிர்கால பாதுகாப்புக்கு வழி சொல்லுங்க.  விபத்து வராதுன்னு சொல்லாதீங்க.  விபத்து வந்தா எப்படி எங்களைப் பாதுகாப்பீங்கனு மாசக்கணக்கா பட்டினியாகி கிடந்து கேட்டா அவங்க கேள்விக்கு பதிலைச் சொல்றதை விட்டுப்புட்டு, அவங்களுக்கு வெளிநாட்டுப் பணம் வருது, கிறித்துவர்களின் போராட்டம் இதுன்னு எதுக்குய்யா மக்களை அசிங்கப்படுத்துறீங்க.  உங்களை மாதிரி வருமா?  நாம வேணா வெளிநாட்டில கொண்டுபோய் பணத்தைப் பதுக்கி வைக்கலாம்.  வெளிநாட்டிலிருந்து பணம் இங்க வரலாமா? பட்டினியாக்கிடந்து கத்துறதுக்கு காசு எதுக்குய்யா? இது என்ன காங்கிரசுக்காரன் நடத்துற தண்டியாத்திரையா? இல்லை அத்வானியோட ரத யாத்திரையா!  கோடி கோடியா செலவாக! மக்கள் கேக்கிற கேள்விக்குப் பதிலைச் சொல்லுங்க.  இல்லை தெரியாதுன்னு சொல்லிட்டுப் போங்க.  அணு உலை வெடிச்சா உங்களுக்கெல்லாம் சங்குதான்னு ஓப்பனா ஓத்துக்குங்க.

                அதெல்லாம் சரி, 13,000 கோடி செலவு பண்ணி அணு உலை கட்டினீங்களே, விபத்து நடந்தால் மக்களைப் பாதுகாக்கிறதுக்கு ஒரு பதுங்குகுழியாவது வெட்டினீர்களா.  30 கி.மீ. மூக்கையும் வாயையும் பொத்திக்கிட்டு ஓடணும்கிறீங்களே.  மூக்கையும் வாயையும் பொத்திக்கிட்டு எப்படி மூச்சுவிடுறது.  விபத்து நடந்தா 1500 கோடிக்கு மேல இழப்பீடு கொடுக்க வேண்டாம்னு,  கம்பெனிகளுக்குப் பாதுகாப்பா விபத்து நட்ட ஈடு மசோதா ஒண்ணு உருவாக்கி வச்சிருக்கீங்க.  அதனால விபத்து நடந்தாலும், அவங்களுக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை உங்களுக்கும் ஒண்ணும் பிரச்சனையில்லை.  அடுத்த விமானத்தில வெளிநாடு பறந்திருவீங்க.  சாகுறது மக்கள் தான.  ஏற்கனவே போபால் விசவாயு விபத்தில் நீங்க செயல்பட்டதும், சுனாமிப் பேரழிவின்போது உங்க வேகமும் எப்படினு நாடே அறியும்.  இதுல புதுசா பலப்பல வாக்குறுதிகள் வேற.

                உங்க ஊரே பயங்கரமா வளர்ந்திடும், டவுணாயிடும்.  நீங்களெல்லாம் பெரிய பணக்காரணாயிருவீங்க.  உங்களில் குடும்பத்தில் ஒருத்தருக்கு வேலைனு நீங்க வீட்ட பீலாவை நம்பி ஏமாந்த சனத்துக்கு இப்பத்தான் உண்மையே புரிஞ்சுருக்கு.  உடனே உண்ணாவிரதத்தில உக்காந்திட்டாங்க.  இதுதான உண்மை.  ஆனா கிறித்தவ பாதிரிகள் தூண்டிவிடுறாங்கனு நீங்க சொன்னதைக் கேட்டா வேற எதாலயாவது சிரிக்கலாம்னு தோணுது.  அனுஉலை வராமப் போனா கிறித்தவ மதத்துக்கு என்னய்யா லாபம்?

                மக்கள் போராட்டம் அன்னிய நாடுகளின் சதியா?  உங்க பாஷையே தனி தான் போங்க.  காஷ்மீரின் மண்ணின் மைந்தர்களின் போராட்டம் இசுலாமியத் தீவிரவாதம், நிர்வாணத்தையே ஆயதமாக்கிப் போராடிய மணிப்பூர் மக்களின் போராட்டம் பயங்கரவாதம், இரோம் சர்மிளாவின் நீண்ட பட்டினிப் போர் தற்கொலை முயற்சி கனிம, மலை வளங்களைக் கொள்ளையடிக்கும் பன்னாட்டு, தனியாருக்கு எதிரான மலைவாழ் மக்கள் போராட்டம் மாவோயிஸ்ட்டுகள் தீவிரவாதம், தெலுங்கானா மாநிலம் கேட்கும் மக்களின் போராட்டம் பிரிவினை வாதம், ஈழ மக்கள் உயிர் காக்கக் கோரி  தமிழகத்தில் நடந்த மக்கள் போராட்டம் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத ஆதரவு. 

                உங்க அகராதியில சத்தியமூர்த்தி பவனில் வேட்டியைக் கிழிச்சுக்கிற நாற்காலிச் சண்டை மட்டும் தான் போராட்டமா.

                அதெல்லாம் இருக்கட்டும்.  நீங்க டெக்னிக்கலா பேசுறதால நாமளும் டெக்னிக்கலாவே சில சந்தேகங்களைக் கேக்கலாம்.  இந்த யுரேனியத்தில வர்ர கழிவான புளுட்டோனியத்த என்ன பண்ணப் போறீங்கன்னு கொஞ்சம் சொல்றீங்களா?  ஆனானப்பட்ட பணக்கார நாடுகளே இதை என்ன செய்யிறதுன்னு தெரியாம திருட்டுத்தனமா கடலுக்குள்ளும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் அனுப்பிக்கிட்டு இருக்கையில நீங்க மட்டும் இங்கயே புதைப்போம்கிறீங்களே.  ஒரு வருசத்துக்கு எத்தனை டன்,  30 வருசம் அணு உலை இயங்கினா மொத்த அணுக்கழிவை இங்கயே புதைச்சு எங்க நிலத்தை, நிலத்தடி நீரை, காத்தை விசமாக்குற ஒரு வேலையை ரெம்ப சாதாரணமா ஒண்ணுமே ஆகாதுன்னு சொல்றீங்க.  அணுக்கழிவை தாங்கிற மண் என்ன ஆகும்னு தெரிஞ்சுக்க அணு விஞ்ஞானம் படிக்கணும்னு அவசியமில்லை.  ஒரு சாதாரண பாமரனுக்குக் கூட சொல்லாமலேயே தெரியும்.  ரசியா 1987 செர்நோபில் விபத்துக்கு பிறகு புது அணு உலை கட்டவேயில்லை. புகுசிமா விபத்துக்குப் பிறகு ஆனானப்பட்ட சப்பான், அமெரிக்கா, ஜெர்மன், இத்தாலியெல்லாம் அணு உலையே வேண்டாம்னு அடிச்சுப்பிடிச்சுக்கிட்டு மூடும் போது நீங்க மட்டும் அணு உலைதான் எதிர்கால வளம்ங்றீங்களே.  கொய்யால.. வாங்கின காசுக்கு மேல கூவுறீங்களேப்பா.

                அணு உலையோட வெப்பம் 2000 டிகிரி  வரையும் போகும்.  அதைக் குளிர்விக்க கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்திட்டு திருப்பி அந்த கொதி தண்ணீரை கடலுக்குள்ளேயே விடப்போறிங்க.  நீங்களே சொல்றீங்க 10வது கிலோ மீட்டரில் சுமார் 7 டிகிரி சூடு அதிகமாயிருக்கும்னு.  அப்ப அது ஆறி சாதாரண வெப்ப நிலைக்கு வர்றதுக்கு 15 கிலோமீட்டர் ஆகும்.  இந்த 15 கிலோ மீட்டர் கடலில் வெண்ணீர்ல வாழ்றதுக்கு மீனுக்கு ஏதும் டெக்னாலஜி கத்துக்கொடுக்கப் போறீங்களா?   கதிரியக்கம் உள்ள கனநீர் அது அப்படீங்கிறதெல்லாம் இருக்கட்டும் வெறும் சூடு தாங்காமலேயே இந்த கடல் உயிரினமெல்லாம் செத்துப்போச்சுனா அதை நம்பி உயிர் வாழந்துக்கிட்டிருக்கிற இந்த அப்பாவி மீனவன் கதி எல்லாம் என்ன? இதில கலாமோட “அறிவியல் ஆலோசகர்” (வெறும் பி.ஏவுக்கு எப்பிடி எல்லாம் பேரு பாருங்க) பொன்ராஜ் சுடு தண்ணீர்லதான் மீன் நல்லா வளரும்னு சொன்னதைக் கேட்கும்போது, ஒரு பழமொழி நெனைப்பு வருதுங்க. கேக்குறவன் கேனையனா இருந்தா.   

                அவங்களுக்கெல்லாம் மாற்றுத்தொழில் கற்றுத்தரலாம்.  கூடை முடைவது, கைத்தறி நெசவு மாதிரிங்கிறீங்களா?  என்னமோ ஏற்கனவே கூடை முடைஞ்சவனெல்லாம் கோடீஸ்வரனா இருக்கிறது மாதிரி. பழைய கைத்தறி நெசவாளியே கஞ்சித் தொட்டி தேடி அலையுற காலத்தில.

                இந்த விவிஇஆர் 1000 என்ற அணு உலை டெக்னாலஜி ரெம்ப பாதுகாப்பானது.  விபத்தே  வராதுன்னு நீங்க அடிச்சு சொல்றீங்க.  ஆனா இதை கண்டுபிடிச்ச ரசியாவிலேயே இத டெக்னாலஜியின் உண்மை சிரிப்பா சிரிக்குதே.  31 காரணங்களைச் சொல்லி ரசிய அணு விஞ்ஞானிகளே இந்த விவிஇஆர் 1000 அணுஉலை பாதுகாப்பற்றதுன்னு சொல்லியிருக்கிற அறிக்கையை தயவு செய்து இன்டர்நெட்டில் பாருங்க.  நீங்க என்ன சொன்னாலும் நம்பிக்கிட்டு போற முட்டாள் மந்தைகளா மக்களை நினைக்காதீங்க. நான் சொன்னதை நம்ப முடியலைனா இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கோபால கிருஷ;ணனைக் கேட்டுப் பாருங்க. 

                13,000 கோடி செலவு பண்ணியாச்சு இறுதிக்கட்டத்தில இப்ப நிப்பாட்டினா எவ்வளவு பணம் வேஸ்ட்னு ரெம்ப மாய்மாலம் காட்டாதீங்க.  வெறும் பதிமூணாயிரம் கோடியை பெரிசா சொல்ற நீங்கதான் 1,78,000 கோடி வருமானத்தை அரசுக்கு வரவிடாம ஸ்பெக்ட்ரம் ஊழல் பண்ணினது.  75லட்சம் கோடியை கறுப்புப் பணமா சுவிஸ் வங்கியில போட்டு வச்சிருக்கிறது.  அந்தப் பணத்தோட ஒப்பிட்டுப் பார்த்தா இதெல்லாம் கொசு.  12 லட்சம் மக்கள் உயிருக்கு முன்னாடி 13,000 கோடி பெரிசா?

                இதை நிப்பாட்டச் சொல்லி மக்கள் போராடுறாங்க.  நிறுத்தமாட்டேன்கிறீங்க.  ஆனா சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தாதிங்கனு மக்கள் கேட்டப்போ  யாரைக்கேட்டு நிறுத்தினீங்க?  அதில போட்ட அத்தனை ஆயிரம் கோடி என்னாச்சு?  நீங்க எதையும் வீணாக்கினதே இல்லையா யார்ட்ட விடுறீங்க கதை.

                ஒண்ணு நல்லாப் புரிஞ்சுபோச்சு சாமிகளா,  சுதந்திர இந்தியாவில் இந்த நடுத்தரவர்க்கம் எவ்வளவு மோசமா வளர்க்கப்பட்டிருக்குன்னு இந்த விசயத்தில நல்லாத் தெரிஞ்சுபோச்சு.  எவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.  எங்களுக்குக் கரண்டு வேணும்னு தெளிவா இருக்கீங்க.  12 லட்சம் மக்களைப் பலி கொடுத்தாவது ஒங்க வீட்டில லைட்டு மின்னாம எரியனும்னு நினைக்கிறீங்க.  அதைப் புரிஞ்சுக்கிட்டுதான் இந்த மன்மோகன் மின்சாரப் பற்றாக்குறையால் தமிழக தொழில்வள முன்னேற்றம் பாதிக்கப்படும்னு முதலைக்கண்ணீர் வடிக்கிறாரு. தமிழகத்தில ஏதுய்யா சொந்தத் தொழில். எல்லாமே மார்வாடியும் பன்னாட்டு நிறுவனங்களும்தானே.

                முதல்ல இப்போதுள்ள மின்சாரப் பற்றாக்குறையே செயற்கையான ஒண்ணுங்கிறதை தெளிவாப் புரிஞ்சுக்குங்க.  நெய்வேலிலேருந்து மட்டும் ஒரு நாளைக்கு 2600 மெகாவாட் கர்நாடகாவுக்கும், ஆந்திராவுக்கும், கேரளாவுக்கும் போகுது.  தமிழ்நாட்டின் மின்சாரப் பற்றாக்குறை 2200 மெகாவாட்தான்.  இருக்கிறதை எடுத்துத் தானம் பண்ணிட்டு உள்ளூரில நம்மை ஓட்டாண்டி ஆக்குது மத்திய அரசு.  அதைப் புரிஞ்சுக்குங்க.

                மேலும் இந்தக் கூடங்குளம் அணுமின் திட்டத்தில் 925 மெகாவாட்தான் தமிழ்நாட்டுக்கு அதுவும் ஒவ்வொரு யூனிட்டையும் ரூ.3.50 காசுக்கு விலை கொடுத்து வாங்கினாத்தான்.  மீதி 1075  மெகாவாட்டில் 1 ½ லட்சம் தமிழர்களைக் கொலை செய்த சிங்கள இலங்கை அரசுக்கு 500 மெகாவாட் கொடுக்கப் போறாங்க.  மீதியை கேரளாவும், கர்நாடகாவும் வாங்கிக்கப் போகுது.  இந்த அணு உலை முதலில் கர்நாடகாவிலும், கேரளாவிலும்தான் கட்டுறதா இருந்தது.  அவர்களோட சொந்த மக்களின் பாதுகாப்புக் கருதி  அதை தமிழ்நாட்டுக்குத் தள்ளி விட்டுட்டாங்க.  சாகுறதுனா தமிழன் சாகட்டும்.  மின்சாரம் மட்டும் எல்லாருக்கும். என்ன நியாயம் இது?

                இது புரியாம இந்தியா, ஒருமைப்பாடு, அணு விஞ்ஞான முன்னேற்றம்னு லூசுத்தனமா ஏதோ பிதற்றிக்கிட்டு இருக்கிற பேர்வழிகளைப் பார்த்தா பாவமாயிருக்கு.  கோபமா வருது.

                கூடங்குளம் மக்கள் போராடுவது அவர்கள் வயிற்றுப்பாட்டுக்கா?  நம் சந்ததி, எதிர்காலத்துக்காகவும் தான் அதைப் புரிஞ்சுக்குங்க முதல்ல. அங்க ஒரு உலை, ரெண்டு உலைனு மட்டுமில்லாம மொத்தம் 5 கட்டப் போறாங்களாம்.  ஒண்ணு வெடிச்சா அணுகுண்டு.  5 வெடிச்சா சரவெடியா?  இது என்ன தீபாவளிப் பட்டாசா?

                அடக்கழுதை, அணு உலை வேணாம்னு மூடினாக்கூட 20,000 கோடி செலவு செய்யனும்னா இது என்ன சிக்கனமான மின்சாரம்?  1000 ரூபாய் செலவுக்கு 2000 ரூபாய் மானியம் கொடுத்துட்டு என்னய்யா கணக்கு இது?  உங்க பெட்ரோல் கணக்கு மாதிரியா?  300 சதவீதம் வரிப்போட்டாலும் எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்திலேயே இயங்குவதால் வேறு வழியின்றி விலையை உயர்த்துகிறோம் அப்பிடிங்கிறீங்களே!  அது மாதிரியா!

                பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டு முதலாளிகளுக்கும் மின்சாரம் எடுப்பதற்காக மக்கள் லட்சக் கணக்கில் கதிரியக்கத்தால் பாதிப்படைய வேண்டுமா?  12 லட்சம் மக்களைப் பலி கொடுத்து வெறும் 2000 மெகாவாட் மின்சாரம் அவசியமா?

                இதில் ஏகப்பட்ட ஸ்லோகன்கள் வேறு.  அணு மின்சாரம் தூய்மையானது.  அப்படின்னா தயவு செய்து டெல்லியில உங்க பாராளுமன்றம் பக்கத்தில கூட கொண்டுபோய் கூட வச்சுக்கங்க.  எங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணையில்லை. 

அணு மின்சாரம் புனிதமானது.  அப்படீன்னா காசியில கொண்டு போய் வச்சுக்கங்க.  ஏன்… அயோத்தியில ராமருக்குப் பக்கத்தில கூட கொண்டு போய் வச்சுக்கங்க.  எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. 

எங்களுக்கு இந்த அணு மின்சாரம் வேண்டாம். 

அது எப்படிய்யா.  காங்கிரசு, பிஜேபி, சுப்பிரமணியம் சுவாமி, தினமலர், எஸ். குருமூர்த்தி, அவாள், இவாள், எல்லாவாளும் ஒரே மாதிரியே யோசிக்கிறீங்க.. மக்கள் விரோதமாவே.

தேய்ந்தே போனவை

தேய்த்துத் தேய்த்துத் தேய்ந்தே போனது

தலைமுறைகள்;

 

அழுத்தித் தேய்டா சுருக்கம் போகணும்

ஆணையிட்டார் ஆண்டை;

எதைக்கொண்டு தேய்க்க

உங்க மனசை;

 

 

அரிசி இல்லையே வீட்டில்

ஆனாலும்

அடுப்புப் பற்றவை

வெள்ளாவி;

 

கஞ்சி  பத்தலையே

குறைப் பட்டுக் கொண்டது நானல்ல

சட்டை வாங்கிய பெரிய மனுசன்;

 

கழுதை போனது

மோட்டார் வண்டி வந்தது

முன்னேற்றம்

அதே அழுக்கு மூட்டை;

 

இசுதிரிக் கடை

உருப்படிக்கு காசு

தொவைக்கிறது மட்டும் நானேதான்;

 

நாகரிக உலகத்தில் எல்லாமே மாறியாச்சு

அய்யா செத்துப்போனார்

கூப்புடுடா அம்மாசியை

அம்மாசி செத்துப்போனான்

கூப்புடுடா அய்யாவை;

என்னடா மாறிச்சு

 

ஆண்டாண்டாய் வெளுத்தாலும்

அழுக்குப் போகலையே

சமூகம்;

 

அடித்துத் தொவைத்தால்தானே

அழுக்குப் போகும்

எல்லா அழுக்கும் அப்படித்தான்.

Srilanka’s Killing Fields – தமிழ் & English Draft Full

இலங்கையின் கொலைக்களங்கள்

 

தொகுப்பாளர் ஜான் சுனோ:

நீங்கள் காணப் போகும் இந்த காணொளி உங்கள் மனத்தை மிகவும் பாதிக்கக் கூடிய காட்சிகளைக் கொண்டுள்ளது. இறப்புகள், காயங்கள், பாலியல் வன்முறைகள், திட்டமிட்ட கொலைகள். மற்றும் அவற்றுக்கான ஆதாரங்கள். இவற்றுள் பெரும்பாலானவை அலைபேசியிலும், சிறிய ரக காமிராவிலும் படம் பிடிக்கப் பட்டவை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற இலங்கையின் இரத்தம் தோய்ந்த உள்நாட்டுப் போரின் காட்சிகள் இவை. இந்தப் போரில் கிட்டத் தட்ட 40,000க்கும் மேற்பட்டோர், குறிப்பாக அப்பாவிப் பொதுமக்கள் இறந்து போயினர்.

அண்மையில் ஐ.நா. வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையும், இந்தப் போரில் இரு தரப்பிலும் மிக மோசமான போர்க் குற்றங்கள் நடந்திருப்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளதாக உறுதிசெய்துள்ளது.

ஆனால் இது தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் இந்த நிமிடம் வரை ஒப்புக்கொள்ளப் படவில்லை என்ப்து இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பாக பல படக்காட்சி ஆதாரங்களை சானல் 4 வெளியிட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். அதே போன்று மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் அடங்கிய இந்தக் காட்சிப்படமும் நீதியை வெளிக்கொணரும் ஒரு சக்தி வாய்ந்த ஆதாரமாக இருக்கும் என நம்புகிறோம்.

இலங்கை ஒரு அழகான பூமி. அந்த பிம்பம் மட்டும் தான் உங்கள் நினைவில் இருக்க வேண்டும் என்று இலங்கை அரசு விரும்புகிறது. கால் நூற்றாண்டாக நடைபெற்ற ஒரு கொடுமையான உள்நாட்டுப் போருக்குப் பின், இப்போது இலங்கை சுற்றுலாவும் வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் உலகக் கோப்பை கிரிக்கட்டின் கால்இறுதி ஆட்டத்தை இங்கிலாந்து, இலங்கை அணிகள இங்குதான் விளையாடின.

ஆனால் இலங்கையின் உண்மை முகம் இதிலிருந்து மிகவும் மாறுபட்டது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் LTTE எனறு அழைக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள், வடக்கு கிழக்கு பகுதிகளில் தனி நாடு கோரி போராடிக் கொண்டிருக்கின்றனர். தமிழருக்கு எதிராகவும், பெரும்பான்மை சிங்கள இனத்தின் சார்பாகவும் செயல்படும் அரசாங்கத்திலிருந்து விடுபடுவதற்கு தனிநாடு ஒன்றுதான் வழி என்பதே அவர்களின் தீர்வு.

புலிகள் தமக்கென தற்கொலை படையினர் உள்ளிட்ட ஒரு சொந்த ராணுவத்தையே உருவாகியுள்ளனர். பெருவாரியான தமிழ்மக்களின் ஆதரவை பெற்றுள்ள இப்படையைக் கண்டு இலங்கை ராணுவமே அஞ்சியது.

புலிகள் கிளிநொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஒரு தனி அரசாங்கமே நடத்தி வந்தனர். தனி வங்கிகள், பள்ளிகள், காவல்துறை ஏன் ஒரு தொலைக்காட்சி நிலையம் கூட. இங்குதான் இசைப்ப்ரியா என்ற பெண் தொகுப்பாளாராகப் பணியாற்றி வந்தார்.

ஆனால் 2008 ஆம் ஆண்டு இந்தக் காட்சி மாறத் தொடங்கியது. அரசாங்க படைகள் புலிகளை முற்றிலும் அழித்து ஒழிப்பதற்கான ஒரு வலிமையான திட்டம் ஒன்றை உருவாக்கினர். இலங்கை அதிபர் மகிந்த ராசபட்சே இது இறுதி முடிவுக்கான போர் என்பதில் தெளிவாக இருந்தார்.

செப்டம்பர் 2008ல் அரசு ராணுவம், புலிகளின் தலைநகர் கிளிநொச்சியை தாக்க ஆரம்பித்தது. 8,9 தேதிகளில் ஐ.நா மன்றத்தின் இலங்கை அலுவலக அதிகாரிகள் தாங்கள் அங்கு தொடர்ந்து இருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து இலங்கையை விட்டு வெளியேறினர்.

பெஞ்சமின் :

அப்போது மிக அதிகமாக வான் வழித்தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருந்தன. அவற்றில்        பெரும்பான்மையானவை இரவில்தான் நடந்தன.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

ஐ.நா. அலுவலர்களின் உயிர் பாதுகாப்பிற்கு நாங்கள் உத்தரவாதமில்லை என்று இலங்கை அரசு அறிவித்தது. அவர்களை கிளிநொச்சிசியிலிருந்தும், புலிகள் கட்டுபாட்டுப் பகுதியிலிருந்தும் வெளியேற உத்தரவிட்டது.

அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் ஐ.நா.அதிகாரியாக இருந்தவர் கார்டன் வெய்ஸ். அவர் சொல்கிறார்

கார்டன் வெய்ஸ் :

ஐ.நா. அதிகாரிகளின் பாதுகாப்பை இலங்கை அரசு பொருட்படுத்தவில்லை. புலிகள் மீதான தம்        தாக்குதலுக்கு ஐ.நா.தடையாக இருக்கும் என நம்பினர். ஐ.நா.வை அங்கிருந்து அகற்றுவதன் மூலம்        தமது நடவடிக்கைகள் குறித்த சர்வதேச சாட்சியங்களை அப்புறப்படுத்துவதே அவர்களின்      நோக்கமாக இருந்தது.

பேட்டியாளர் :

இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு.எனினும் ஐ.நா.அங்கு இருந்தால் மட்டும் அவர்கள் செய்ய        நினைத்ததை எதை தடுக்க முடிந்திருக்கும்.

கார்டன் வெய்ஸ் :

ஐ.நா.வின் தனிப்பட்ட சாட்சியத்தை அப்புறப்படுத்துவதே அவர்களின் நோக்கம்.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

ஐ,நா,வின் அலுவலர்கள் வெளியேறப் போகிறார்கள் என்ற செய்தி தமிழ் மக்களிடையே வேகமாகப் பரவியது. பயந்துபோன அவர்கள் அலைஅலையாக ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பெஞ்சமின்

பெஞ்சமின் :

தயவுசெய்து வெளியேறாதீர்கள் என்று அவர்கள் எங்களைப் பார்த்துக் கெஞ்சினார்கள்.

       அந்தக் காட்சி எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. வாயிற் கதவு வழியாக பலர் கைகளை        நீட்டி எங்களை போகவேண்டாம் என்று கெஞ்சிய காட்சி அது.

       என்னுடைய பட்ப்பதிவின் கடைசியில் ஒரு சிறுமி இருப்பாள். மிக அழகான சிறுமி. அவள்     முகத்தில் அந்த அழகையும் மீறி ஒரு பயம் தெளிவாகத் தெரிந்தது. அவளிடம் ஒரு உண்மையான      வேதனையும் நன்றாகத் தெரிந்தது.

       அப்போது நான் மிகவும் உணர்ச்சி வயப்படிருந்தேன். இரக்கப் படவும் வெறுமனே பார்த்துக்        கொண்டிருக்கவும் மட்டுந்தான் அப்போது என்னால் முடிந்தது.

`               இந்த பெரியவர் எங்களிடம் மன்றாடினார். எங்களின் பாதுகாப்பு, விடுதலை இவையெல்லாம்   குறித்து எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இங்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பதை உலகிற்கு சொல்லும் பார்வையாளராகவாவது இருங்கள். 

தொகுப்பாளர் ஜான் சுனோ:

ஆனால் ஐ,நா,வின் செவிட்டுக் காதுகளில் இந்தக் கதறல்கள் உறைக்கவேயில்லை.

கார்டன் வெய்ஸ் :

       எங்களுடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று தெரிவித்த இலங்கை அரசின்        முடிவை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.

பேட்டியாளர் :

      தனிப்பட்ட முறையில் நீங்கள என்ன நினைக்கிறீர்கள்?

கார்டன் வெய்ஸ் :

       என் தனிப்பட்ட கருத்து என்னவென்றால் அது ஒரு மாபெரும் தவறுதான்.

பெஞ்சமின் :

       என்னைப் பொருத்தவரை என் வாழ்க்கையின் மோசமான தருணங்களில் அது ஒன்று.பிரச்சினைகள்        பெரிதாகிக் கொண்டிருக்கும் போது, ராணுவம் வாசற்படியில் நின்று கொண்டிருக்கும் போது,    நாங்கள் வெளியேற்றப் பட்டது எங்களுக்கு மிகவும் கடினமான அனுபவம். உண்மையில் அந்த மக்கள் கைவிடப் பட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சாட்சியங்களே இல்லாமல் தாக்குதல் நடத்துவதற்கு நாங்கள் வெளியேறியது அரசு ராணுவத்திற்கு வசதியாகி விட்டது என்பதை ஐ,நா, சமீபத்தில் ஒத்துக் கொண்டுள்ளது.

சனவரி 2009ல் புலிகளின் வலிமையான தலைநகரான கிளிநொச்சி விழுந்தது.

கார்டன் வெய்ஸ் :

முன்னணியில் சாதாரண பொதுமக்களே இருக்குமாறு புலிகள் பார்த்துக் கொண்டனர். அத்தாக்குதலின் போது பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் வெளியேறத் தொடங்கினர்.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

போராளிகள் யார், பொதுமக்கள் யார், எனப் பிரித்தறிய முடியாத சிங்கள ராணுவம் அனைத்து மக்களையும் தங்கள் வாழ்விடங்களிலிருந்து விரட்டியடித்தது.

ஆனால் புலிகளோ மனிதக் கேடயங்களாகவும் பகடைக் காய்களாகவும் இம்மக்களைப் பயன்படுத்திக் கொண்ட போதும்கூட, இறுதிவரை இம்மக்களை அனுசரணையுடன் பாதுகாத்தனர்.

அடுத்த நான்கு மாதங்களில் இம்மக்கள் ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் குண்டு வீசி கொல்லப்பட்டனர்.

இந்தக் கொலைக் களங்களில்தான் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை வேண்டுமென்றே குறிவைத்து தாக்கிக் கொன்றழித்தது சிங்கள ராணுவம்.

பேரா.வில்லியம் :

ஒரு போரில் ராணுவம், எதிரிராணுவம் தொடர்பான இலக்குகளை மட்டுமே தாக்கவேண்டுமேயோழிய அதற்கு அப்பாலுள்ள அப்பாவிப் பொதுமக்களை அல்ல. ஆனால் இங்கு அவர்கள் சட்டவிரோதமாகவே செயல்பட்டிருக்கிறார்கள்.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

ஆம். அங்கு உண்மையில் அதுதான் நடந்தது.

பயந்து தப்பியோடிய தமிழ் மக்களை சிங்கள ராணுவம் தொடர்ந்து விரட்டியது. அரசுத் துருப்புகளின் இடைவிடாத தாக்குதலில் இது போன்ற அப்பாவி மக்கள் மேலும்மேலும் பலியாயினர்.

இரு படையினரிடையே நடந்த சமமான போர் இல்லை இது.

இலங்கைக்கு பெரும்பாலான வல்லரசு நாடுகளின் மறைமுக ஆதரவு இருந்தது. சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து பெற்ற கனரக ஆயதங்களும் பீரங்கிகளும் இருந்தன.

இஸ்ரேலிய கபீர் விமானங்களை கொண்ட ஒரு கடற்படையும் அதற்கு இருந்தது.

இது இலங்கை அரசு வெளியிட்ட ஒரு விமானத் தாக்குதல் காட்சி.

தரையில் தமிழர்களும் இதைப் படமாக்கியிருதனர். இதை புலிகளோ, சாதாரண மக்களோ, யார்  படம் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. என்ன நடந்தது என்று இந்த உலகம் அறிவதற்கான ஆவணமாகவே இதை படம் பிடித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

அவசரமாய் தோண்டப்பட்ட சிறிய பதுங்குகுழிகள் அப்போதைக்கு அவர்களைப் பாதுகாத்தன. ஆனால் அந்த மரணபயத்திலிருந்து குழந்தைகளை யாராலும் காப்பாற்ற முடியவில்லை.

வாணி: இராணுவம் முன்னேறி வரும் ஒவ்வொருமுறையும் குண்டுகள் அருகில் வந்து விழுந்து வெடித்தன. துப்பாக்கிச் சத்தங்களும், வெடிகுண்டு சத்தங்களும், சண்டைச் சத்தங்களும் மிக அருகில் கேட்கத் துவங்கும். அப்போது ராணுவம் அருகில் வந்து விட்டது என்று தெரிந்து கொண்ட நாங்கள் அவ்விடத்தை விட்டு நகரத் தொடங்குவோம்.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

வாணிகுமார். இலங்கையிலுள்ள தம் உறவினர்களுடன் ஆறு மாதங்கள்  தங்கியிருப்பதற்காக லண்டனிலருந்து சென்ற பிரிட்டன்வாழ் தமிழ்ப் பெண். ஆனால் அவர் போர் நடந்த பகுதியில் இடம்பெயர்ந்திருந்த பத்தாயிரக்கணக்கான பொதுமக்களோடு தானும் சிக்கி கொண்டார்.

அவர்கள் வெளியேறிப் போவதற்கு இடமே இல்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் இவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும். அவ்வளவுதான்.

கிளிநொச்சி விழ்ந்து 3 வாரங்களுக்குப் பிறகு “பாதுகாப்பு வளையப் பகுதி” என்ற ஒரு பகுதியை இலங்கை அரசு அறிவித்தது. இப்பகுதியில் மக்கள் மீது எவ்விதத் தாக்குதலும் நடத்தப்பட மாட்டாது என அரசு உறுதியளித்தது.

போரில் அழிக்கப்பட்ட மருத்துமனைகளிலிருந்த நோயாளிகள், மருந்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஆயிரக் கணக்கான பொதுமக்கள் அரசின் இந்த உறுதிமொழியை நம்பி பாதுகாப்பு வளையப் பகுதிக்குச் சென்றனர்.

பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் அவசர அவரமாக இந்த மருத்துமனையை அமைத்தனர். மூடப்பட்டிருந்த ஒரு ஆரம்பப் பள்ளியை தற்காலிக மருத்துவமனையாக மாற்றினர். சர்வதேச சட்டத்தின்படி பாதுகாப்பு அளிக்கும்படியான செஞ்சிலுவைக் குறியீட்டை தெளிவாக மேற்கூறையில் பொறித்தனர்.

பேரா.வில்லியம் :

 இது எல்லாருக்கும் தெரிந்ததுதான் நீங்கள் மருத்துவமனைகளை தாக்கக் கூடாது. மருத்துவமனைகள் ராணுவப் பணிகளுக்கு பயன்படுத்தப் பட்டிருதால் ஒழிய அவைகளை தாக்குதலுக்கு உட்படுத்தக் கூடாது. இந்த மருத்துவமனை ஒரு ராணுவ முகாம் இல்லை. அதை எப்படித் தாக்கலாம்?

தொகுப்பாளர் ஜான் சுனோ:

ஆனால் சிங்கள ராணுவம் அதன்மீதும் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் முடிந்த உடன் அப்பகுதியின் கோரக் காட்சியைக் கண்ணால் கண்ட சாட்சி இவர். பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் இவரது உறவினர்கள் இன்னமும் இலங்கையில் வாழ்வதாலும் இவரது முகம் மறைக்கப்பட்டுள்ளது.

இது விபத்து என்று நீங்கள் கருதுகிறீர்களா?

இந்த இளம்பெண் வாணியும் குண்டு விழுந்த சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார். அவர் இலங்கை வருவதற்கு முன் லண்டனில் மருத்துவ உதவியாளருக்கான கல்வி கற்றவர். அவர் அங்கு கண்ட காட்சி மிகவும் பயங்கரமானது.

வாணி :

அந்த இடம் ஒரு மருத்துவமனை போல் இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் அது ஒரு சாதாரண வீடு. ஒரு சில உபகரணங்கள் மட்டுமே அங்கு இருந்தன. எல்லா மருத்துவமும் வெட்டவெளியில் தான் நடந்தது. உயிரற்ற உடல்கள் வெறும் தரையில் கிடத்தப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து வெளியேறிய இரத்தம் மழை நீருடன் கலந்து ஓடிக் கொண்டிருந்தது.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

இப்போது 3 லட்சம் முதல் 4 லட்சம் மக்கள் பாதுகாப்பு வளையப் பகுதிகளுள் இருந்தார்கள். அதைப் பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் என்னென்ன கொடுமையான அட்டூழியங்கள் நடந்தன என்பதை செயற்கைக்கோள் மூலமும், தரையிலிருந்தும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஐநாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் தெரியப் படுத்தின. தன்னுடைய கொழும்பு தலைமையகத்திலிருந்து ஐ.நாவும் இதைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தது.

பேட்டி : பாதுகாப்பு வளையப் பகுதியில் மக்கள் பாதுகாப்பாய் இருந்தார்களா.

கார்டன் வெய்ஸ் :

இல்லை.  அது பாதுகாப்பு வளையப் பகுதியே இல்லை.  அங்கு ராணுவத்தால் கணிசமான அளவில் குண்டு வீச்சுகள் நிகழ்த்தப்பட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

பாதுகாப்பு வளையப் பகுதியில் கரைக பீரங்கிகளால் தொடர்ந்து கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை கடந்த ஏப்ரலில் ஐ.நா. குழு வெளியிட்ட அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால் இலங்கை அரசாங்கமோ ஒரு உயிரும் பலியாகாத மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளிலேயே தாம் ஈடுபட்டதாக இன்னும்கூட தொடர்ந்து சாதித்து வருகிறது.

அங்கோ அடுத்த சில வாரங்களில் பயங்கரமான பேரழிவு ஒன்று காத்திருந்தது.

2009 சனவரி இறுதியில் மீதமுள்ள புலிகளும் 4 லட்சம் பொதுமக்களும் இலங்கை ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டனர்.

புலிகளின் கையில் கடைசியாக இருந்த பகுதியான புதுக்குடியிருப்பு தாக்கப்பட்டது.

இதுதான் புதுக்குடியிருப்பு மருத்துவமனை.  இங்கு மறுபடியும் போர்ச்சட்டங்கள் மீறப்பட்டன.  சிங்கள அரசு வெடிகுண்டுகள் வீசி இந்த மருத்துவமனையையும் தாக்கியது.

அந்தத் தாக்குதல் நடந்து சிறிது நேரத்தில் அங்கு வந்தவர் இவர்.  பாதுகாப்பு கருதி இவரது முகம் மறைக்கப்பட்டுள்ளது.

பேட்டி : இந்தத் தாக்குதலில் மக்கள் கொல்லப்பட்டனரா?  மருத்துவனை தாக்கப்பட்டது விபத்து என்று கருதுகிறீர்களா?

தொகுப்பாளர் ஜான் சுனோ:

அடுத்த சில தினங்களில் மருத்துவமனை மீதான ராணுவத் தாக்குதல் தீவிரமடைந்தது.

கடைசியில் மருத்துவர்கள் அம்மருத்துவமனையை முற்றிலும் கைவிட வேண்டியதாயிற்று.  ஆனால் தாக்குதல் இந்த ஒரு பகுதியில் மட்டும் நடக்கவில்லை.  பாதுகாப்பு வளையங்கள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளும், பொதுமக்கள் தங்கியிருந்த முகாம்களும் சிங்களப் படையினரின் கடுமையான குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாயின.

வாணி: ராணுவம் வருகிறது.  ஓடு ஓடு என்று மக்கள் சிதறி ஓடினார்கள்.  எங்கு பார்த்தாலும் ஒரே அலறல் சத்தமாக இருந்தது.  குண்டுகள் தலையைக் குறி வைத்தே பறந்து வந்தன.  நீங்கள் நிமிர்ந்திருந்தீர்கள் என்றால் தலையில் குண்டு அடிபட்டு சாவது உறுதி.  இப்படித்தான் அந்த சண்டை இருந்தது.  அந்த நேரத்தில்தான் முதன்முறையாக பயமடைந்தேன்.  இனி நாம் நீண்ட காலம் உயிரோடிருப்பது கடினம் என்ற எண்ணம் எனக்கு வந்தது.

ஸ்டீவ்: போரின் அடிப்படையான கோட்பாடுகளில் ஒன்று அப்பாவிப் பொதுமக்களைப் பாதுகாப்பது அவர்கள் பொதுமக்களை குறிவைத்துத் தாக்கக் கூடாது.  வான்வழித் தாக்குதல் கூடாது.  மக்கள் சாவதற்க்கான வாய்ப்பே இருக்கக்கூடாது.

பேரா. வில்லியம்:

            மக்களை நெருக்கமான ஒரு இடத்தில் தக்க வைப்பது பாதுகாப்பதற்கான வழி.  ஆனால் இலங்கையில் மக்களை நெரிசலில் நெருக்கி ஒரு சிறிய இடத்தில் குடியேற்றியது அவர்களை எளிதாகக் கொலை செய்வதற்கே.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

தாங்களாகவே பாதுகாப்பு வளையப் பகுதிக்கு வந்தடைந்த ஆயிரமாயிரம் பொதுமக்கள் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

அவர்களில் ஒருவர் இந்த ராஜேஸ்வர். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரது முகம் மறைக்கப்பட்டுள்ளது.  அவரும் அவரது மகனும் அங்கு மிக மோசமான தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

மருத்துவமனையில் இறந்து போன அவரது மகனின் படம் இது.

காயம்பட்டிருந்த உங்கள் மகன் மீது மீண்டும் குண்டு வீசப்பட்டதா?

அதை உங்களால் காண முடிகிறதா?

தொகுப்பாளர் ஜான் சுனோ:

பொதுமக்களைப் பயமுறுத்த, அவர்களை அதிக அளவில் கொலை செய்ய  சிங்கள ராணுவம் முடிவு செய்தது.  அதற்குரிய ஒரு உபாயமாக, முதல் குண்டு வீச்சைத் தொடர்ந்து சற்று தாமதமாக அடுத்த குண்டை வீசியது.  முதல் குண்டு வீச்சில் காயமடைந்தவர்களை, காப்பாற்றப் போனவர்களும் தொடர்ந்த இரண்டாவது குண்டு வீச்சில் கொல்லப்பட்டனர்.

உறவுகள் கண்முன்னேயே குண்டடிபட்டு இறக்கும்போது ஒன்றுமே செய்யமுடியாமல் பதுங்கு குழிக்குள்ளே பரிதவிக்கும் இச்சிறுமிகளின் துயரம் தாளமுடியாதது.

இவர்களோ தம்மைத் தொடரும் இரண்டாவது வீச்சுப் பயங்கரத்தை உணர்ந்தார்களில்லை.

அரசு ராணுவம் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றழித்தது போதாதென்று, பிப்ரவரி 9ம் தேதி ஒரு பெண் புலியின் தற்கொலைத் தாக்குதலில் பெருவாரியான சிங்களப் படையினரும், மக்களும் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு வளையங்களிலும் போர்ச்சட்டங்கள் மறுபடி மறுபடி மீறப்பட்டன.

கார்டன் வெய்ஸ் :

இந்த மக்களை மனிதக்கேடயமாக பயன்படுத்தியதற்கு புலிகளே பொறுப்புதாரிகள்.  மக்கள் வெளியேறுவதைத் தடுப்பதற்காக புலிகள் அவர்களைக் கொன்றதாக எங்களுக்குக் கிடைத்த ஆதாரங்கள் கூறுகின்றன.

20.33

தொகுப்பாளர் ஜான் சுனோ:

ஆனால் போரில் இழப்புகளோ தாக்குதல்களோ இருபுறரும் சமமான அளவில் இல்லை.

ஸ்டீவ்: ஒரு தரப்பினர் புரியும் குற்றங்கள் அவர்களின் எதிர்தரப்பும் விதிகளை மீறச்செய்யும்படி அவர்கள் மீது ஒரு வகையினை அழுத்தத்தைக் கொடுக்கின்றன.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

பிப்ரவரி 12 வாக்கில், பழைய பாதுகாப்பு வளையப்பகுதி கிட்டத்தட்ட  அழிக்கப்பட்டு விட்டது.  இப்போது ஏழு மைல் நீளமுள்ள ஒரு குறுகிய மணல் படுகையை புதிய பாதுகாப்பு வளையமாக அரசு அறிவித்தது.  அந்தக் குறுகிய நிலப்பரப்பில் சிக்கிக் கொண்ட நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்த வண்ணம் இருந்தது.  அடுத்த சில வாரங்களில் அவர்கள் பசியாலும், தாகத்தாலும், பயத்தாலும் மரண வேதனையடைந்தனர்.

ஸ்டீவ்: ஒரு ராணுவத்தாக்குதலின் போது பொதுமக்கள் பசியால் துன்புறாத வண்ணம் பாதுகாக்கப்பட வேண்டும்.  அவர்களுக்கு உணவு, குடிநீர், மருந்துகள் தடையின்றிக் கிடைக்கும்போது பார்த்துக் கொள்ளவேண்டும்.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

ஆயினும் ஐ.நா. வெளியிட்ட அறிக்கையின்படி உணவு, மற்றும் மருத்துவ மனிதாபிமான உதவிகளை இலங்கை அரசு திட்டமிட்டுத் தடுத்தது.  உணவு, மருந்து விநியோக வழிகளை முற்றிலும் அடைத்திருந்தது.

பொதுமக்களும், புலிகளும் இப்போது ஒரு சிறிய பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் நெருக்கப்பட்டிருந்தனர்.

ஏப்ரல் மாதத்தில் ராணுவம் ஒரு புதிய தாக்குதல் உத்தியை கையிலெடுத்தது.  புதுமாத்தளத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனை அருகில் கடுமையான குண்டு வீச்சு நடத்தி அப்பாதுகாப்பு வளையப் பகுதியை இரண்டாகப் பிரித்தது.

கார்டன் வெய்ஸ் :

            ராணவம் அந்த மணல் பகுதியை பாதிப்பாதியாகப் பிரித்துத் தாக்கியது.  அப்போது வெள்ளத்தால் சூழப்பட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டு அரசு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

ராணுவத்தால் கைது செய்யப்படுமுன், தப்பி ஓட முயற்சித்த மக்களின் காட்சி இது.  இக்காணொளி இலங்கை அரசால் வெளியிடப்பட்டது.

ஆனால் இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது யாருக்கும் தெரியாது.

22:32

தொகுப்பாளர் ஜான் சுனோ:

ஏப்ரல் மாத இறுதியில்  அந்தப் பகுதியில் சிக்கியிருப்பது வெறும் 10000 பேர்  மட்டுமே என அரசு கணக்குச் சொன்னது. ஆனால் உண்மையில் அந்தப் பகுதியில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் சிக்கியிருந்தனர்.  அரசாங்கம் அப்படி ஒரு பொய்யான கணக்கை தெரிவித்ததன் காரணம் என்ன?

கார்டன் வெய்ஸ் :

            அவர்கள் வேண்டுமென்றே தவறான எண்ணிக்கையை தெரிவித்தனர். பாதுகாப்பு வலையப் பகுதிக்குள் கொல்லப்பட்ட மக்களை அவர்கள் கணக்குக்கு கொண்டு வர விரும்பவில்லை.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

புதுமாத்தளம் மருத்துவமனைத் தாக்குதலில் உயிர்தப்பிய மக்கள் ராணுவத் தாக்குதலிருந்து தப்ப பாதுகாப்பு வளையத்தில் சற்றே தள்ளியிருந்த முள்ளிவாய்க்கால் மேல்நிலைப்பள்ளிக்கு நகர்ந்தனர்.

அங்கு நிலைமைகள் மிகக் கடினமாக இருந்தன. மருத்துவத்தைப் பற்றி சிறிதளவு தெரிந்திருந்தால் கூட அவர்கள் உதவிக்கு அழைக்கப்பட்டனர். இங்கு இளஞ்சிவப்பு உடையில் காணப்படும் வாணிகுமாரும் அப்போது உதவியாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

அவர் லண்டனில் மருத்துவ உதவியாளராகப் படித்திருந்த போதும், இதற்கு முன் நோயாளிகளுக்கு நேரடி மருத்துவத்தில் ஈடுபட்டதில்லை. இப்போதோ அங்கு மருத்துவம் செய்து கொண்டிருந்த மருத்துவர் சண்முகராஜாவுக்கு அறுவைச் சிகிச்சைகளில் முதன்மை உதவியாளராக செயலாற்ற ஆரம்பித்தார்.

வாணி :

            அவர் ஒரு உயர்ந்த மனிதர். ஒரு மருத்துவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் தான் உதாரணம். அவர் ஓய்வெடுத்தோ, இல்லை தன்னைப் பாதுகாத்துக் கொள்ள பதுங்கு குழிக்குள் சென்றோ நான் பார்த்ததில்லை.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

ஆனால் அங்கு நிலைமைகள் மிக மோசமாக இருந்தன.

வாணி :

            ஒருமுறை பணியாளர் ஒருவர்  காயம் பட்டவருக்கு ஏற்ற வேண்டிய ரத்தத்தை ஒரு பாட்டிலில் துணியில் வடிகட்டி எடுத்து வந்தார்.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

ஒரு நாள் அம்மருத்துவமனைக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் பார்வையிட வந்தார்.

வாணி :

            ஒரு நாள் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் அங்கு வந்து என்ன நடக்கிறது என்று எல்லா இடங்களிலும் சுற்றிப் பார்த்தார். அவரை மருத்துவர் சண்முகராஜா காயம்பட்டோர் உள்ள எல்லா இடங்களையும் காண்பித்துக் கொண்டிருந்தார்.

கார்டன் வெய்ஸ் :

            இதுபோன்ற போர்க்களங்களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சில வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மனிதாபிமானச் சட்டங்களின் அடிப்படையில் அவர்கள் பல வசதிகளை அங்கு செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இதுபோன்று மருத்துவமனைகள் தாக்கப்படுவதிலிருந்து காப்பாற்றி இருக்கலாம்.

வாணி :

            அவர் வெளியேறிச் சென்று ஒரு அரை அல்லது ஒரு மணி நேரத்தில் மருத்துவமனைக்கு உள்ளேயே ஒரு குண்டு வந்து விழுந்தது.

            எங்கு பார்த்தாலும் இரத்தம். இறந்தவர்களின் சதைத் துண்டுகள் சுவர்களில் ஒட்டிக் கொண்டிருந்தன. அந்த இடம் முற்றிலும் அழிக்கப்பட்டிருந்தது. அங்கு இருந்த ஒரு சிலரை மட்டுமே அந்தக் குண்டு வீச்சிலிருந்து காப்பாற்ற முடிந்தது.

பேட்டி :

அங்கு வேண்டுமென்றே குண்டு வீசப்பட்டது எனக் கருதுகிறீர்களா?

வாணி :

            ஆம். அந்த மருத்துவமனை வேண்டுமென்றே குறி வைக்கப்பட்டது. குறி வைத்து தான் குண்டு வீசப்பட்டது.

கார்டன் வெய்ஸ் :

            தமிழ் மக்கள் இருந்த மருத்துவமனைகள் மீதான தாக்குதல் உறுதியாக வேண்டுமென்றே நடத்தப்பட்டதாகவே தெரிகின்றன. மருத்துவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம், அரசு ராணுவத்தின் தாக்குதலை நிறுத்தச் செய்யும்படிக் கேட்டிருந்தனர். ஆனால் கடந்த மே 2009-ல் மட்டும் பொது மக்களைக் குறி வைத்து மருத்துவமனைகள் மீது சுமார் 65 முறை குண்டு வீசப்பட்டது.

பேட்டி :

போர்க்குற்றம் நடந்திருப்பதற்கு இது ஒரு ஆதாரமா?

கார்டன் வெய்ஸ் :

கண்டிப்பாக. பெரும்பாலும் இது ஒரு போர்க்குற்றம் தான்.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

அந்தப் போர் ஒரு கொடுமையான முடிவை நெருங்கிக் கொண்டிருந்தது. சிங்கள ராணுவம் பாதுகாப்பு வளையப் பகுதியை இன்னும் நெருங்கியது. தப்பிக்க முயலும் பொது மக்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சில செய்திகள் வந்தன. இலங்கை அரசு வெளியிட்ட ஒரு காணொளி இதோ. இதன்படி தப்பிக்க முயலும் பொது மக்களைத் தடுக்க புலிகள் தரையில் சுடுவதாக இலங்கை அரசுத் தரப்பு தெரிவித்தது.

ஆனால் இன்னமும் ஒரு லட்சத்து முப்பதாயிரம் மக்கள் அந்தப் பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் முடக்கப் பட்டிருந்தனர். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நிலைமைகள் இன்னும் மோசமாயின. மே 2-ஆம் தேதி காலை மருத்துவமனைக்கு வந்த வாணிகுமார் ஒரு மிகக் கொடுமையான படுகொலைக் காட்சியைக் காண நேர்ந்தது.

வாணி :

            நான் செல்லும் வழியிலேயே மருத்துவர் சண்முகராஜா நின்றிருந்தார். மருத்துவமனையில் இரண்டாவது முறையாக மீண்டும் ஒரு குண்டு வீசப்பட்டதாகவும் காயமடைந்தவர்களை மருத்துவத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

இப்போது பாதுகாப்பு வளையத்தின் பெரும்பாலான பகுதி இராணுத்தால் அழிக்கப்பட்டிருந்தது. மே 8-ஆம் தேதி ஒரு சதுர மைல் பரப்பளவுள்ள இன்னொரு பகுதி பாதுகாப்பு வளையப் பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்டது.

1,30,000 மக்கள் இந்தக் குறுகிய நிலப் பரப்பில் தப்பிக்க வழியின்றி சிக்கிக் கொண்டனர்.

உயிர் தப்பிய மக்களும் மருத்துவர்களும் ஒரு கை விடப்பட்ட ஆரம்பப் பள்ளியில் மறுபடியும் ஒரு மருத்துவமனையை உருவாக்கினர். ஆனால் அங்கு எந்த வசதியும் இல்லை. அந்த நிலைமையை மருத்துவமனை அதிகாரி  இதோ விளக்குகிறார்.

நான்கு நாட்கள் கழித்து அவரும் ஒரு குண்டு வீச்சில் கொல்லப்பட்டார்.

சிங்கள ராணுவம் நடத்திய மற்றொரு குண்டு வீச்சுத் தாக்குதலில் உணவுக்காக வரிசையில் நின்ற பல குழந்தைகள் கொல்லப்பட்டனர். மேலும் பெரும்பான்மையினர் காயமடைந்தனர்.

வாணி :

            ஒரு பையன். 6 அல்லது 7 வயதிருக்கும். குண்டு வீச்சில் அவனது இடது கால் முற்றிலும் சேதமடைந்திருந்தது. நாம் ஏதாவது செய்ய வேண்டும். மருத்துவர் சண்முகராஜா நம் முன்னர் இரண்டே வழிகள். ஒன்று அந்தப் பையனைக் காப்பாற்றுவது அல்லது சாக விடுவது என்றார். எனவே கையில் இருக்கும் பொருள்களை வைத்து அவனுக்கு மருத்துவம் பார்ப்பதென்று முடிவெடுத்தோம்.

எங்கள் கையில் வீட்டில் உபயோகப்படுத்தும் ஒரு சாதாரண கத்தி மட்டுமே இருந்தது. ஒருவர் அவன் வாயைப் பொத்திக் கொள்ளுங்கள். ஒருவர் கைகளைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஒருவர் இன்னொரு காலைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அவனது காலை மருத்துவர் வெட்டப் போனார்.

            மயக்க மருந்தே கொடுக்காமல் ஒரு ஆறு வயது சிறுவனின் காலை அறுவைச் சிகிச்சை செய்வது எப்படிச் சாத்தியம் என்று அவரிடம் கேட்டேன்.

            அவரோ நாம் அவனைக் காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் அவன் இறந்து போவான். இப்படிச் செய்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை என்று பதில் சொன்னார்.

நான் தான் அவன் வாயை என் கைளினால் பொத்தியிருந்தேன். அந்தப் பையன் கதறித் துடித்தான். நான் மயங்கி விட்டேன். அரை மணி நேரம் கழித்து நான் கண் விழித்தபோது என்னால் சாதாரணமாயிருக்க முடியவில்லை.

            பின்னர் என்ன நடக்குமோ, ஆனால் நாங்கள் அப்போதைக்கு அவனைக் காப்பாற்றி விட்டோம்.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

மருத்துவமனை மீதான ராணுவத் தாக்குதல் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

மே 12-ஆம் தேதி மருத்துவமனை மீது மறுபடியும் குண்டு வீசப்பட்டது.

வாணி :

            அவர்கள் மறுபடியும் குண்டு வீச ஆரம்பித்தனர். நான் வெளியே வந்த பிறகு அங்கு குண்டு விழுந்து வெடித்தது. எங்கு பார்த்தாலும் பிணங்கள், துண்டு துண்டாக மனித உடல்கள்.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

சண்முக ராஜாவுக்கு நிலைமை தெளிவாகத் தெரிந்து போனது. இனி ஒன்றும் செய்ய முடியாது.

வாணி :

            மருத்துவர்  சண்முகராஜா அவசரமாக எல்லோரையும் அழைத்துப் பேசினார்.  இந்த மருத்துவமனை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. நம்மிடம் மருந்துகளோ, உபகரணங்களோ எதுவுமே இல்லை. நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. மருத்துவமனையைக் கைவிடுவதைத்  தவிர நமக்கு வேறு வழியில்லை.

            எனவே மருத்துவமனையைக் கைவிட்டு நாங்கள் வெளியேறினோம். காயம்பட்ட நூற்றுக்கணக்கான மக்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாத குற்ற உணர்ச்சி எங்களைக் கொன்றது.

31.43

தொகுப்பாளர் ஜான் சுனோ:

அடுத்த சில நாட்களில் எத்தனைபேர்  இறந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது.  இத்துடன் ஒரு தமிழ் இணையம் வெளியிட்ட இக்காட்சி முடிந்து போகிறது.

இலங்கையின் அதிகாரப் பூர்வ புகைப்படங்களின் படி காட்டப்பட்ட இந்த ராணுவ முகாமில்தான், இரு நாட்களுக்கு முன் மீட்கப்பட்ட 1,30,000 பொதுமக்கள் தங்கியிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை அமைச்சர்:

            பாதுகாப்பு வளையத்தில் இருந்த அனைத்து பொது மக்களும், அரசு ராணுவத்தில் மீட்கப்பட்டனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

இந்த அறிக்கைக்கும் உண்மைக்கும் வெகுதூரம் என்பது தெளிவானது.  இப்போது ஐ.நா.குழு 40,000க்கும் மேற்பட்ட மக்கள் கடைசி சில வாரங்களில் கொல்லப்பட்டனர் என உறுதி செய்துள்ளது.  நமது ஆதாரங்கள் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்  எனக் கூறுகின்றன.

மே 2009 தாக்குதலில் உயிர்தப்பிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிங்கள ராணுவத்திடம் தஞ்சமடைந்தனர்.  வெற்றியடைந்த அரசு ராணுவம் சர்வதேச பார்வையாளர்கள் யாரையும் அருகில் அனுமதிக்கவில்லை.  அதன் காரணம் தெளிவானது.  சிங்கள ராணுவத்தின் ஒரு பிரிவு தங்கள் வெற்றியை கடற்கரையில் கொண்டாடிக் கொண்டிருந்த அதே நேரத்தில், மற்றொரு ராணுவப் பிரிவு தொடர்ந்து கொடூரமான போர்க்குற்றங்களை நகருக்குள் நடத்திக் கொண்டிருந்தது.

சிங்கள ராணுவத்தினர் தமது வெற்றியின் நினைவுப் பரிசுகளாக அலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்த சில காட்சிகள் இக்குற்றங்களை நமக்கு வெளிப்படுத்துகின்றன.

போரில் கைது செய்யப்பட்டவர்களை, திட்டமிட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கியதும், பின் கொலை செய்வதுமான பின்வரும் காட்சிகள் நமக்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கக்  கூடியதாயுள்ளன.

ஆனாலும் இவற்றை வெளியிடுவது மிக முக்கியமானதாகும்.  இவை முறையான விசாரணை தேவைப்படுகின்ற சக்தி வாய்ந்த போர்க்குற்ற ஆதாரங்களாகும்.

சிங்களக் குரல் : நிமிர்த்து …….. fuck you

சிங்களக் குரல் : அவன் பார்த்த மாதிரி  இருந்துச்சு. அவன் பார்த்தான்

                                    பாத்தபடியே போயிட்டான்.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

விடுதலைப் புலிப் போராளிகள் நிர்வாணப் படுத்தப்பட்டு, கைகள் பின்புறம் கட்டப்பட்டு, பின்புறமிருந்து சுடப்படும் காட்சி.

சானல் 4 இந்தக் காட்சிகளின் நம்பகத் தன்மையை உறுதி செய்து சென்ற ஆண்டின் கடைசியில் ஒளிபரப்பியது. ஆனால் இக்காட்சிகளை போலியானவை என்று இலங்கை அரசு கண்டனம் செய்தது. ஐ.நா.கூட இது உண்மையானதென்று அங்கீகரித்த பின்னரும், இலங்கை அரசு அதை ஒப்புக் கொள்ள இதுவரை மறுத்தே வருகிறது.

சிங்களக் குரல் : சுடு, சுடு, நானும் நல்லா சுட்டேன், சுடு

சிங்களக் குரல் : இவையெல்லாம் நம்ம சொத்து சுடுவோம்.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

இப்போது இலங்கை அரசு இன்னும் இக்கட்டில் சிக்கிக் கொண்டுள்ளது.

சிங்களக் குரல் : ஒரு பயங்கரவாதியைக் சொல்ல தைரியமானவன் யாரும் இல்லையா?

எல்லாம் இருக்கிறோம்.  வாயை மூடு.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

இதுவரை நாம் பார்த்திராத அதிர வைக்கும் புதிய காணொளி ஆதாரங்கள் இப்போது நமக்குக் கிடைத்திருக்கின்றன.

ஒரு பெண் உட்பட மூன்று போர்க்கைதிகள் கொலை செய்யப்படும் மற்றொரு காட்சி ஒரு அலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிங்களக் குரல் : ஏய் பெண்குறி!  பலவீனமாய் இருக்காதே!

நான் சொன்னவுடன் சுடு! எழுந்திரு

சிங்களக் குரல் : குறிபார்.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

தலைவன் போல் தெரிந்த ஒருவன் கைதிகளாய் இருந்த புலிகளை எப்படிக் கொல்வது என்று உத்தரவிட்டுக் கொண்டிருந்தான்.

சிங்களக் குரல் : இந்த முட்டாள் ஆயுதம் வைத்திருக்கிறான்.

இன்னமும் அவர்களிடம் பயப்படுகிறான்.

தலைக்கு நேராகக் குறிவை.  தயாராகு

தொகுப்பாளர் ஜான் சுனோ:

இப்பதிவு தடயவியல் வல்லுநர்களால் பரிசோதிக்கப்பட்டு இதில் எந்த போலித்தனமும் இல்லையென்றும், முழுக்க முழுக்க உண்மையான காட்சியென்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

போரின் கடைசி நாட்களான மே 15இ 2009 அன்று இது பதிவு செய்யப்பட்டதாக காமிரா குறியீடுகள்  கூறுகின்றன.

பேரா.  வில்லியம் சாபாஸ்  (பன்னாட்டு மனித உரிமை வழக்கறிஞர்) :

போரில் கைது செய்யப்பட்ட வீரர்களைக் கொல்வதென்பது, அது எந்த வடிவத்திலிருந்தாலும், இலங்கை உட்பட எந்த நாடாயிருந்தாலும் சர்வதேச சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட ஒன்று.  தேசியச் சட்டங்கள் படியும் அது தடைசெய்யப்பட்டது.  இது அப்பட்டமான கொலை அவ்வளவுதான்.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

இப்போது சில தனித்தனியான பதிவுகளைக் காண்போம்.

இளம் வயதில் புலிகள் ராணுவத்தில் சேர்ந்த ரவி போரில் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.  சிங்கள ராணுவத்தினரே எடுத்த ஒரு காணொளி  ஆதாரம் ஒன்று மீண்டும் நமக்குக் கிடைத்திருக்கிறது.  அதில் கண்டுள்ள அவர்களின் செயல் ஒதுக்கிவிடக் கூடியதல்ல.  கைது செய்யப்பட்ட மற்றொருவர் தென்னை மரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள காட்சி இது.  இக்காட்சியைத் தொடர்ந்த புகைப்படங்கள் நமக்குக் காட்டுவதெல்லாம் அவர் உயிருடனிருப்பது, கத்தி முனையில் மிரட்டப்படுவது, இறுதியில் கொல்லப்படுவது.

பேரா.வில்லியம் :

அவர் மரத்தில் கட்டப்பட்டிருக்கும் காட்சியைப் பார்க்கும்போதும், பின்னர் புதை குழியில் இடப்பட்ட அவரது உயிரற்ற உடலைப்பார்க்கும் போது, இது கண்டிப்பாக சித்திரவதை, கொலை, போன்ற போர்க் குற்றங்கள் நடந்திருப்பதற்கான  ஒரு வலுவான ஆதாரமாகும்.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

சிங்களப் படையினர் தமிழர்களுக்கு எதிராக எடுத்த ஆயதங்கள் கொலை, சித்திரவதை ஆகியவை மட்டுமல்ல.

போர் முடிவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயிர்தப்பிய சிலர் சிங்கள ராணுவத்திடம் சரணடைந்தனர்.  அவர்களில் தான் இந்தப் பெண்ணும் அவர் மகளும் இருந்தனர்.  இவர்களின் வேதனை கொடுமையானது.  தாம் கற்பழிக்கப்பட்டோம் என்பதை வெளியே சொல்வதற்குக்கூட அவர்களுக்கு வார்த்தைகளே வரவில்லை.

–           நான் இப்படிக் கேட்பதற்காக மன்னியுங்கள். அங்கிருந்த எல்லாப் பெண்களும் கற்பழிக்கப்பட்டார்களா?

–           ஆம்

அவர்களை ராணுவத்தினர் தூக்கிச் சென்றார்கள்.  பிறகு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.

ஆம்

–           பின் யாருமே திரும்பி வரவில்லை அப்படித்தானே?.

ஆம்

–           நீங்களும் உங்கள் மகளும் கற்பழிக்கப்பட்டீர்களா?

ஆம்.

பின்னணியில் வலியால் முனங்கும் குரல் கேட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காட்சியும் சிங்கள ராணுவத்தினர்  தாங்களே எடுத்திருந்த ஒரு காணொளிப் பதிவுதான்.

நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட பெண்களின் சில உடல்களை இங்கு நீங்கள் காணலாம்.

இங்கு இறந்துகிடப்பவர்களால் ஒருவர்தான் தமிழ் தேசிய தொலைக்காட்சியின் தொகுப்பாளர் இசைப்பிரியா.

இறந்தோரின் உடல்களை சிங்கள ராணுவத்தினர் அப்புறப்படுத்தும் இன்னொரு காட்சி இதோ.

சிங்களக் குரல் : தாயைப் புணரும் புலிகளே. துப்பாக்கியைத் தயாராக்கு.

                        உன் முகத்தைக் காட்டு.       ஏய் உடல்களோடு சரியாக நில்லு.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

இந்த புதைகுழியில் இறந்து கிடக்கும் உடல்களும் புலிப் போராளிகளே.

சிங்களக் குரல் : ஏய். இங்க பார்.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் உடல்களை வண்டியில் அள்ளிப் போடும் இக்காட்சி, நடந்த குற்றங்களை தெள்ளத் தெளிவாக நமக்கு வெளிப்படுத்துகின்றது.

சிங்களக் குரல் : அந்தப் பிணத்தைக் கொண்டு வா. இன்னொன்று

               ஏய்….   அவ முனங்குறா

               உன் தலையிலயா முனங்குறா

               இன்னமுமா முனங்குறா

               அந்தா அதைக் கொண்டா

               இதுதாண்டா நல்ல கட்டை

               ஏய்

               இதுதாண்டா நல்ல கட்டை.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

திட்டமிட்ட படுகொலைகளும், பாலியல் வன்முறைகளும் இடம்பெற்ற நிறைய காணொளிப்பதிவுகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

சிங்களக் குரல் : இவ புதுசா சேர்ந்தவ மாதிரி தெரியுது.

பாரு எவ்வளவு பேனா பென்சில் வச்சிருக்கா. இவ யாருக்கோ 

                உதவியாளர் போலிருக்கு)

யாரும் பக்கத்தில் இல்லையினா அவளோட காம்புகளை வெட்டணும்னு தான் உண்மையில நினைச்சேன்.

(40:18) வரை

தொகுப்பாளர் ஜான் சுனோ:

இந்த மோசமான காட்சிகள் இலங்கை அரசை கடுமையான கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கின்றன.

பேரா.வில்லியம் :

இந்த சில உதாரணங்களை கருத்தில் கொண்டாலே இது ஒரு மிகப்பெரிய கைதிகள் படுகொலை என்பது புலனாகிறது.  இலங்கை அரசின் உயர் ராணுவத் தலைமையே, இந்த திட்டமிட்ட படுகொலைகள், சித்திரவதைகள், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பு என்பதே இவற்றின் மூலமாக நாம் வரக்கூடிய முடிவு.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

மேலும் இலங்கையில் ராணுவக் கட்டளைகள் அரசின் உயர் அதிகாரிகளிடமிருந்துதான் செல்கின்றன.  அதாவது இந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பு இலங்கை ஜனாதிபதி ராஜபட்சே மற்றும் அவரை இங்கு வணங்கிக் கொண்டிருக்கும் ராணுவ அமைச்சரான அவரது சகோதரர்  கோத்தபயே ஆகியோரே.

இன்னும் பல ஆதாரங்கள் இலங்கை அதிபரை மேலும் சிக்கலில் ஆழ்த்துகின்றன.  போரின் கடைசி நாளான மே 18 அன்று,  புலிகளின் மூத்த தளபதியான கேனல் ரமேசு சண்டையில் கொல்லப்பட்டார் என அரசு அறிவித்தது.  ஆனால் உண்மையில் சிங்கள ராணுவத்தினரின் படத்தொகுப்பின்படி கேனல் ரமேசு உயிருடன் பிடிபட்டது தெளிவாகிறது.  அந்தப் படங்களில் காட்டப்பட்டிருப்பது கேனல் ரமேசுதான் என்பதை அவரது மனைவி நமக்கு உறுதி செய்துள்ளார்.

இது உயிருடன் கைது செய்யப்பட்ட ரமேசு சில தினங்களுக்குப் பின்னரே கொல்லப்பட்டார் என்பதைப் புலனாக்குகிறது. இலங்கையில் சில சிங்கள அரசியல் விமர்சகர்களை நாம் சந்தித்த போது, இப்போரில் கொலை செய்யப்பட்டு இறந்த தமிழர்களின்  பல புகைப்படங்களை அவர்கள் நமக்கு அளித்தனர்.

போரின் கடைசி இரு நாட்களில் இந்த இருவருக்கும் தொடர்பான பல சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.  பாலசிங்கம் நடேசன், சிவரத்தினம் புலித்தேவன்.  புலிகளின் மூத்த அரசியல் பிரிவு தலைவர்களாக இருந்த இருவரும் நிபந்தனையின்றி சரணடைவதாக ஐ.நா.விடம் அறிவித்திருந்தனர்.

இந்தச் செய்தி ராஜபட்சேயிடமும், அவரது ஆலோசகரும் சகோதரருமான பசில் ராசபட்சேயிடமும் நேரடியாகத் தெரிவிக்கப்பட்டதாக ஐ.நா. உறுதி செய்தது.  இதைத் தொடர்ந்து மே 18 அன்று நடேசனும் புலித்தேவனும் வெள்ளைக்கொடியுடன் சென்று சரணடைந்தனர்.  ஆனால் இலங்கையிலிருந்து கிடைத்த புகைப்படங்கள் நடேசன் மற்றும் புலித்தேவனின் உயிரற்ற உடல்களைத்தான் நமக்கு அடையாளம் காட்டுகின்றன.

ஒரு உண்மையான சரணடையும் முயற்சி எடுத்தவர்களின் கதி இதுதான்.

இவ்வளவுக்கும் ஜனாதிபதி மகிந்த ராசபட்சே தானே இந்த சரணடைதலுக்கு ஒப்புக் கொண்டிருந்தார்.

இந்த புகைப்படங்களை நன்கு பரிசோதித்த தடயவியல் நிபுணர்கள் நடேசனின் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் நிறைய உள்ளன எனக் கூறுகின்றனர். சரணடைய வந்தவர்களின் தலையில் அருகிலிருந்து சுட்ட துப்பாக்கிக் குண்டு காயங்கள் இருப்பது மிகவும் சந்தேகத்திற்குரியது.

மேலும் திட்டமிட்ட படுகொலைகள், பெண் கைதிகளை கொலை செய்வதற்கு முன் பாலியல் வன்முறைக்கு ஆளாக்குதல் போன்றவற்றிற்கான உறுதியான ஆதாரங்கள் இப்படங்களில் இருப்பதாக தடயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தப் காணொளிப் பதிவுகள் நீதி கேட்டு இப்போது சர்வதேச சமூகத்தின் முன்னரும், குறிப்பாக ஐ.நா.விடமும் வந்துள்ளன.  ஆனால் ஐ.நா.வோ இதுவரை மௌனமாகவே இருந்து வருகிறது.

கார்டன் வெய்ஸ் :

பத்தாயிரக்கணக்கான மக்கள் தவிர்க்க இயலாமல் மடிந்தபோது நாங்கள் அந்த நேரத்தில் எடுத்த நடவடிக்கைகள் போதாதா என்ற கேள்விகள் எழும்புகின்றன.

            ஆம். அவை போதாது.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

போர் முடிந்து 5 நாட்களுக்குப் பிறகு ஐ.நா.வின் செயலர் பான்கிமூன் போர்ப் பகுதிகளை இலங்கை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.  போர்ப்பகுதிகளுக்கு போகவில்லை.  மாறாக போரால் இடம் பெயர்ந்த லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இருந்த அரசு முகாம்களைத்தான் பார்வையிட்டார்.

இந்த தற்காலிக முகாம்களிலோ உணவு, தண்ணீர், மருந்து பற்றாக்குறைகளும் கற்பழிப்பு, வன்முறை, காணாமல் போதல் போன்ற கொடுமைகளும் நிறைந்திருந்தன.  இந்நிலையில் பான்கிமூனின் வருகை, வாணி குமார் போன்ற பொதுமக்களுக்கு நம்பிக்கை ஊட்டக் கூடியதாயிருந்தது.

வாணி: அவர் வெளிநாட்டவர்க்கு தாம் பார்வையிட்டதாகக் காட்டிக் கொள்வதற்காக மட்டுமே அப்பகுதிக்கு வந்தார்ஒரு 10 அல்லது 15 நிமிடம் மட்டுமே அங்கு இருந்திருப்பார்அவர் முகாமை சுற்றிப்பார்க்கவோ அங்கிருந்த மக்களிடம் பேசவோ இல்லை.  வெறுமனே பார்த்துவிட்டு முகாமை விட்டு வெளியேறினார்இது எல்லாமே மொத்தம் 15 அல்லது 20 நிமிடங்களில் முடிந்தது என நினைக்கிறேன்.

            மக்கள் ஐ.நா. மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்தனர்சர்வதேச சமூகத்தின்  மீதிருந்த நம்பிக்கையையும் இழந்தனர்இவர்கள் நமக்காக எதுவும் செய்யப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிந்துபோனது.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

ஏப்ரலில் ஐ.நா. அமைத்த குழு போரின் இறுதிக்கட்டத்தில் என்ன நடந்தது என்று விசாரணை நடத்தியது.  ஒரு பெரிய மனிதப் பேரழிவு நடந்திருக்கிறது என்பதை அது உறுதி செய்தது.  மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும், போர்க்குற்றங்களும் அங்கு நடந்திருப்பது நம்பத்தகுந்த ஒன்றே என்பதை ஐ.நாவின் குழுவின் அறிக்கையும் நமது விசாரணைகளும் உறுதிப்படுத்தின.

ஆனால் இலங்கை அரசு நேரடியாகவே அந்த அறிக்கையை நிராகரித்தது.  அது தனது சொந்த விசாரணைக் குழுவை அமைப்பதாய் அறிவித்துள்ளது.  போரின் படிப்பிணைகள் மற்றும் சமரசத் தீர்வுக்கான வழி இதுதான் எனக் கூறுகிறது.  நாம் இலங்கை அரசின் மீது கூறிய தெளிவான குற்றச்சாட்டுகளுக்கு இதுதான் பதிலாக நமக்குக் கிடைத்தது.

ஒரு தொலைக்காட்சி ஊடக நிறுவனத்திடம் எதிர்பார்க்கப்படும் நேர்மை, பொறுப்புணர்ச்சி ஆகியவற்றை தொடர்ந்து உறுதியாகக் கடைப்பிடித்துவரும் நம் சானல் 4 தொலைக்காட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க இலங்கை அரசு எந்த நேரத்திலும் விரும்பவில்லை.  மாறாக நாம் அரசுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்றே அது கருதுகிறது.

இதற்கிடையில் பான்கி மூன் என்ன நடந்தது என்று அறிய தான் நியமித்த ஐ.நா.வின் சர்வதேச விசாரணைக் குழுவின் பரிந்துரைகளைத் தானே நிராகரித்தார்.  அவ்வறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதற்கு அவர் தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்கிறார்.  இது உண்மையென்றால் ஐ.நா. பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடுகளை நாம் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.

ஸ்டீவ்:

            மிக அண்மையில் லிபியா வழக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஐ.நா. பாதுகாப்புக் குழுவினர் ஒரு மனதாக வாக்களித்திருந்தனர்.

            ஆனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட இலங்கை வியத்தில் ஐ.நா. முழுக்க முழுக்க செயல்பாடு அற்று மௌனமாக உள்ளது.

            இது மிகப்பெரிய மாறுபாடான ஒரு வியம்.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

இன்று இலங்கை அமைதியாக உள்ளது போல் தோற்றமளிக்கிறது.  ஆனால் கைது செய்யப்பட்ட தமிழ் மக்களில் பெரும்பான்மையோர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.  வடக்குப்பகுதி ராணுவத்தின் மிருகத் தனமான பிடிக்குள் உறைந்திருக்கிறது.

அப்பாவிப் பொதுமக்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதும், கற்பழிக்கப்படுவதும் சாதாரணமாக நிகழ்வாய் உள்ளது.  எதிர்ப்பவர்கள் இரக்கமற்ற முறையில் அடக்கப்படுவதும், வாழ்வுரிமைகள் நசுக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

போர் முடிந்து 2 ஆண்டுகளுக்குப்  பின்னரும் பொதுமக்களின் வீடுகளில் ராணுவம் ஆக்கிரமித்துள்ளதையும், மக்கள் இன்னமும் கூடாரங்களில் வாழ்வதையும் நாம் ரகசியமாய் எடுத்த இந்தப் படப்பதிவு நமக்கு உணர்த்துகிறது.

ஸ்டீவ்:

இதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என ஊகிப்பது மிகவும் கடினமான ஒன்று.  உண்மையையும், கொடுமைகளையும் எதிர்கொள்வதில் இந்த உலகம் எப்போதும் தோல்வியையே சந்தித்து வந்திருக்கிறது.  அதுதான் இப்போது இலங்கை விசயத்திலும் நடந்திருக்கிறது.

பேரா. வில்லியம் :  தண்டணை அளிக்கப்படாத குற்றங்கள் மனித சமூகம் தனது காயங்களிலிருந்து ஆறுவதைத் தடுக்கின்றது.

தொகுப்பாளர் ஜான் சுனோ:

இரண்டு வருடங்களுக்கு முன்பாக தாங்கள் துயர்கட்கு சாட்சிகளாக இருக்கச்சொல்லி ஐ.நா.வையும் சர்வதேச சமூகத்தையும் இந்த தமிழ் மக்கள் கெஞ்சி முற்றுகையிட்டனர்.  ஆனால் அதில் அவர்கள் தோற்றுப் போனார்கள்.  அவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர்.  மீறி உயிர் தப்பியவர்கள் இப்போது சர்வதேச சமூகத்திடம் தங்கள் நீதிக்காக முறையிடுகிறார்கள்.  அவர்கள் மறுபடியுமா தோற்றுப் போவார்கள்?

Srilanka’s Killing Fields – English Draft Full

 Now in 4 a disturbing investigation with John Snow about the blue four conclusions of the Sri lankan civil war with disturbing and distressing descriptions and seven of execution and atrocities.

This is Srilanka’s Killing Fields.

Jon Snow : This  Film contains very disturbing images – Depicting  Death, Injury, Execution and Evidence of Sexual abuse and Murder. Much of it filmed on mobile phones and small cameras.

The images come from Srilanka’s Bloody Civil war which ended 2 years ago with deaths of as many as 40,000 people possibly formal. The UN recently published a report which passes credible evidence that  the both government and Tamil Tiger Rebels committed serious war crimes. The report called for an international enquiry. So far that call had been rejected.

But for the last 2 years Channel 4 has been compiling our own sources of video evidence and I were on these accounts. We believe this footage represents devastating evidence of War crimes and crimes against humanity and a powerful case for bringing well guilty of these crimes to justice.

SRILANKAN KILLING FIELDS

Sri Lanka is a  very beautiful place and that is the image which the government would like you to remember. Its tourism industry  is recovering from a quarter of century, a brutal civil war. And in March the triumph deployed host  the cricket world cup quarter final between England and its own  Sri Lankan National team.

But this public face hides a very different reality… For more than 25 years the LTTE or Tamil tigers fought for the creation of an Independence state in Northern and Eastern Sri Lanka. They saw it is the only answer  to  decades for sometimes violent anti Tamil discrimination by governments sympathetic to Sinhalese majority.

The Tigers themselves have a brutal army of 10 conscripting Child Soldiers and pioneering the youths to suicide bombing. But they retained the reluctant support of much of the population which feared the Sri Lankan army even more. The tigers also established something which looked very much like a functioning military state. With administrative capital Kilinochi – and the Banks, Schools, Police and even a television station with a staff represented known as Isai Priya.

But in 2008 it all  began to change. Government forces seen here on their effective parade had a massive offensive designed to crush the tigers  once and for all. As Sri Lanka’s increasing the repressive president Mahinda Rajapakshe made clear that this must be a war to the bloody end. By September 2008 Govt. forces were threatening the tiger’s capital Kilinochi. For 8 or 9 international UN workers left in the time lives was becoming dangerous.

BENJAMIN, UN Staff, Kilinochi  : There were a number of Air raids pretty much every time  and quite often in the night times.

Jon Snow : As the pressure mounted the SL govt tell the united nation that they could no longer guarantee their safety. “They must leave Kilinochi and the tiger held areas”.

The UN official spokesman in SL is at the time Gordon weiss. He believed the Government’s real motive was not the safety of UN personals.

Gordon weiss :  The govt regard the UN as an impediment to their conquest of the tamil tigers. By moving our organization there will be no longer international witnesses to watch what’s coming.

Interviewer :  “That’s a very serious charge, in fact because what you are saying is if they did not wanted to have witness  there can be they are to do things could not forward to see things… there is no intention to do that

Gordon Weiss : “I think they  intended to move independent witnesses to what was coming”

Jon Snow : News that UN international staffs were leaving spread quickly and the crowds are frightened tamil civilians besieged UN base. ]

BENJAMIN  : “They were really pleading with us, as the UN is the international community, PLEASE DON’T LEAVE. I just remembered the images till now, tens of hands coming through the gate and pleading with us not to go. So I ran my camera along with the line of people and there was one girl at the end. She was in shunting, she was enchanting, she was just scared, but she had just real sadness in her face.

When I, I am quite emotional at that point as well her face really captured this. I have compassion you know, I stayed and watch.

(Tamil) : We are begging you to stay and witness our suffering.

BENJAMIN  : This Brahmin who is talking to me he just pleaded on the line that “we don’t care about our shelter, freedom, what so ever, we will take care of ourselves.  We just need international eyes on the ground to see what is happening here?

(Tamil) : If we allow you to leave…

The truth is that everyone here will die.

The knife is at our throat.

Jon Snow :  Those pleads fell on deaf ears of the UN. “Our official response was that we accepted the government’s suggestions that they could no longer guarantee our safety”

Interviewer :  What did you personally think?

Gordon Weiss  : “I personally felt that it was a mistake”

BENJAMIN  : “For me that was personally the worst moment of my life. Seeing like the crisis down to lead the great, when the army sitting on the doorstep to take the town and we drive out, that was very very difficult experience for us. And and a real sense of abandon of these people”

Jon Snow :  As the UN report now acknowledges the removal of their staffs left virtually no international witnesses in the area which meant the path is open for the government forces to launch a final offensive into the Tiger held areas.

In Jan 2009 the tigers’ strong hold of Kilinochi fell.

Gordon Weiss  : In the frontlines close deal of tamil tigers more and more civilians are called up directly in the line of front. Suddenly 100s and thousands of people were on the move and fleeing.

Jon Snow :  These were civilians driven from their homes by the government forces, who appear to see all tamil civilians are virtually indistinguishable from the fighters of the tamil tigers.

But the Tigers too showed little respect for civilians increasingly prepare to use them as pawns or human shields in this battle to the end.

Over the next 4 months these hundreds of thousands of innocent civilians would be bombed herded and crawled into an ever decreasing area of land.

In these killing fields tens of thousands of them were destined to die targeted by deliberate government fire.

Prof. William Schabas : Combatant saying in a conflict of due departed target civilians and, they are only allowed to target military objectives and they go outside the, what’s the purely military justified by military necessarily that they are already in the range of illegality

Jon Snow :  And that is exactly what happened.

As the frightened tamil civilians fled government forces followed. More and more civilians like these fell victim to the governments’ relentless offensive.

This was an unequal war. The Sri Lankan government had the tacit support of most of the world’s powers and was equipped with heavy artillery from china and elsewhere. It also had a fleet of isralian kafer combat aircraft.

This footage of a typical air raid comes from the government.

But on the ground the tamils were filming too, we dont know who shot this, it may be a tiger cameraman or it may be a civilian, whoever it was, they clearly thought it important to keep a record. Families dug shallowed  in trenches which provided limited protection but nothing could protect the children against the fear.                                                 (Upto 10 : 15)

Vany Kumar : Every time when the frontline comes closer, shell bombs hit nearby you and you can hear the bullet sounds of fighting, the gun sounds and scenes and everything, then we will realize they have close enough and time for us to move.

Jon Snow : Vany Kumar is a young English Tamil woman who left London to spend six months with relatives in Sri Lanka. But then she found herself caught up Srilanka with tens of thousands of displaced Tamil civilians on the exodus eastward.

They had nowhere to go. They just knew they had to leave.

Then some 3 weeks after the fall of kilinochi, the SL government announced the creation of what they called the “NO FIRE ZONE”.  This they claimed as a part of govt. policy of Zero Civilian casualties.

Among the thousands of people flocked here encouraged by that promise were doctors, nurses, patients and hospitals has been destroyed in the fighting.

Just inside the NFZ they set up this emergency hospital. A makeshift arrangement of beds and mattresses in an abandon primary school. It was clearly marked with Red crosses on the roof which gave it protection under international law.

Prof. William Schabas: “It’s Quite simple, You can’t attack hospitals.  The only exception if the evidence of the hospital is actually being used for the military purposes, otherwise it is very clear that the hospital is totally off the limit. It is not a military objective, how could it been attacked?

Jon Snow : But the government forces did attack it. One man who arrived immediately after this, found a scene of horror. We have this guy, whose identity protected. And his relatives still live in SL.

Is this an accident? You think?

(Tamil)

The young English Tamil Vany Kumar also arrived just after the bombing, she was qualified as a bio medical technician in London before she came to SL. And was horrified by what she saw.

Vani : I expected it to be like a hospital, it was just a like a normal house with just a few equipments and just like dead bodies on the floor. Everything happened outside and blood from the dead bodies was just running with the rainwater.

Jon Snow : By now there were between 300 to 400 thousand people living in the no fire zone. Satellite and ground footage made the UN and the other powers knew the great deal about what went on throughout the war in the no fire zone.

In Colombo HQ Un monitored what happened.

Was they safe in the NFZ?

Gardon : No, it was not the NFZ. Which was taking significant amount of shelling of the govt of SL, killing civilians.

Jon Snow : The Un special panel report published this april found that the govt heavy artillery was constantly retargeted on so called NFZs. Yet the SL govt continue to insist, It was engaged in humanitarian rescue operation with the policy of zero civilian causalities. That was, as the next few weeks were proved drastically horror again.

By the end of jan 2009 the remaining tamil tigers and as many as 400,000 civilians were now traped by the SL govt forces. As the tigers last stronghold the town of puthuk kudiyiruppu  (PTK)was under threat.

This is PTK hospital. Once again the laws of war were ignored, and govt shelled.

This man is concealed for his own protection arrives shortly after the attack.

“ was people killed in this incident?”

“Do you think it as an accident the hospital was shelled ”?

Over the next few days the govt’s shelling of the hospitals intensified.

Eventually the doctors were forced to abandon the hospital completely. But this was not the only area under attack. Just a few miles away in the so called NFZ increased govt shellings and incursions by the govt troops were bringing the deaths and terrors to the crowded civilian camps.

Upto 15.55

Vani : People running towards us, screaming the army is coming, run and run… people was just screaming. The bullets are going on top of your head and like if you stand up that stage would be surely hit by a bullet. That’s how the battle was. That’s the time when I start panicking  and think that’s it. I could not be alive for longer.

Steve crawshaw Advocacy director, Amnesty international : One of the absolutely core principles of the warship is the need to protect civilians, she should not be targeting civilians, she should not be attacking in aerial way. Just rightly the civilians might be hit.

Prof William Schabas: The idea of shelling up an enclave to protect civilians is nothing wrong with that except in SL there is no response official living in fact what they did was to pack a jam group of civilians

Who could then be more easily targeted?

Jon Snow : But as 1000s of civilians fled the NFZ they come for themselves came under attack. In one of them Rajeswar was hit and his young son badly injured, again, his face must be disguised.

This is Raja’s son as he lay died in the hospital. This footage, which shells your son when he was injured.

Are you able to watch that now?

(Tamil)

To terrify civilians, it seemed government forces would determine to maximize casualties. One govt tactic they said is to follow each shell with the second delayed one, so that anyone who helped the injured risks being hit themselves with the second shell.

For those who had seemed left once died in front of them like these girls, the agony of not being allowed to leave their bunker was unbearable. For others like these men they lost seem to blind them to the danger of the further attack.

But govt forces were not the only one sharing the brutal disregard for the civilians, on the 9th of February, the female tiger suicide bomber killed the large number of soldiers and tamil civilians in this government centre for the displaced.

And in the NFZ too, they defy the laws of war

Gordon Weiss: Tamil tigers were responsible for using this large civilian population as a shield. We know from available evidence that the tamil tigers were killing people in order to stop them from leaving.

Upto 20.33

Jon Snow : But the loss of war, do a cause of play equally to both sides.

Prof William Schabas:  Crimes by one side do not begin to give a kind of ‘cartbalch’ to break the rules as well.

Jon Snow : By the 12th of Feb, the old no fire zone is virtually abandoned, the govt. announced a new one, about seven miles long on a narrow sands bed, as many as four hundred thousand people flooded there and found themselves trapped under constant bombardment, the next few weeks, were proven agony of death, hunger and fear.

Steve crawshaw  : Military forces have an answer obligation to ensure, that the civilian population is not starved, in other words they should have access to food, they should have access to drink, they should have access to access the medicine,

Jon Snow : Yet according to the UN report, the SL govt. Shelled the food distribution lines and systematically deprived people in the conflict zone of humanitarian aid in the form of food and medical supplies. The civilians, many of the tigers were now effectively crawled in the no fire zone, and the in april, the govt. adopted a new approach, they focus lethal brash of heavy shellings, on the line stretching back, from a temporary hospital in pudhumathalan, splitting half the section of the zone.

Gordan: The govt. cut the sands bed into half, so that nearly one hundred thousand civilians, flooded up and shift off the internment camps inside the govt. territory.

Jon Snow : This is the govt. footage of some of those fleeing civilians, before they were taken into custody by the army, but no one knows how many had died in the assault.

22.00

At the end of April the government claimed that there were just ten thousand civilians left trapped in that area in fact there were over two hundred thousand, so why were the govt. figure so wrong.

Gordan weis: I think, only explanation is that we deliberately misleading and I think the reason for that is because they don’t want to account for the number of people killed inside the safe zone.

Jon Snow : The staff and patients who survived in the Pudhumathalan hospital moved further into the no fire zone away from the new frontline and setup in secondary school in Mullivaikkal .

Conditions here was so desperate that anyone with any kind of medical knowledge was recruited to help and so that Vany Kumar, herself here in pink dress began working as a volunteer. As a biomedical technician in London, she had never dealt directly with patients, but now she found herself  helping surgical operations, with the man running the hospital, Dr. Shanmuga Raja

Vani : He is a great person, he is an example of how a doctor should be. I never saw him rested, or even went into a bunker to safeguard himself.

Jon Snow : But the conditions they all worked was terrible

Vani : Once a staff came in and taking a blood in a bottle, like the waste blood from the wound and then she was like filtering it with a white cloth and re-entering into the patient.

Jon Snow : One day the hospital was visited by somebody from Red cross (ICRC)

Vani : A foreigner came to visit hospital, he was going through everywhere, he was with Dr. Shanmuga Raja, was taking him everywhere and showing him where the patients were.

Gordan Weis: The standard practice of International Red Cross and in the battle field situations like this is that they provide the code nets of many facilities with which would protect under International humanitarian law to the opposing parties so that the both can avoid attacking these spaces.

Vani : And then after he left about, like half an hour to one hour, shell bomb right into the board. I have just seen blood, just a piece of dead bodies stucking to walls, and it was completely destroyed, there were only few people we were able to safe from the shell bomb.

Jon Snow : So do you think this was, deliberated one.

Vani : This was targeted, the shell bomb was targeted.

Gordan weis: Eventually, The attacks on the medical spaces seems to be so consistent, that the Tamil govt. doctors requested the ICRC to stop providing the code lines to the government.  By May 2009, roughly, there have been roughly 65 attacks on these medical points. Targeting the civilians,

Jon Snow : That is a evidence of a war crime?

Gordan Weis: Well, yes. It probably constitute a war crime,

Jon Snow : The war was approaching its increasingly  bloody end.  SL forces were advancing ever further into the no fire zone. There were more reports of the cornered tiger fighters firing on the civilians who try to escape.  And the govt. released this footage at which they said, shows tigers firing into the ground to prevent civilian from escaping.

For the one hundred and thirty thousand more people still trapped in the so called no fire zone. conditions were getting ever more desperate, on the second of May Vany Kumar, arrived at the hospital in the morning to find a scene, of carnage.

Vani : First person I met was Dr. Shanmuga raja on the door way.  He just told me, well just we had a shell bomb hit the hospital again for the second time, we can move them to hospital.

Jon Snow : By now most of the no fire zone overrun by the govt. On the eighth of May they announced the new one around one square mile in size. one hundred and thirty thousand people were trapped in this tiny area, with no escape. Among them surviving staff and patients from the secondary school to setup yet again, this time in a abandon primary school.  But they were desperately short of requirement as the hospital administrator explains with one of the camera man trapped with them.

Jon Snow : Just four days later, the administrator himself was killed in a shell attack on this hospital.

Jon Snow : In an other incident, several children in a food queue were killed, and many others wounded in a govt. shell attack.

Vani : There was one boy, who is about six or seven years old, his left leg was completely into pieces, and almost  out. Dr. Shanmuga raja, well was like, we have to do something, we either safe the patient or just let him die. I am  so, we decided to treat him, with the amount of stuff we had.  And it was like a medical equipment knife there, we would use to take of someone’s leg and arm.  It was like just a normal knife, you would use at home. And he said well, hold his mouth, someone hold his hand, someone hold his other leg, just going to cut it off.  And he is like, I looked at him, just going to cut off a six year old boys leg without even giving local anesthetic, how was it possible.  And he said we have to safe him or just he will die, that’s the way we have to do it.  So I actually hold his mouth with my hand, he start crying and all finished. I looked at him the boy was screaming and I fainted then, after about half an hour, so I was back to normal and I refuse to go to operation theatre.  But I saw that boy afterward, he go one of his legs and he was alive.  I don’t know what happen to him afterward but he was alive when I saw him.

Jon Snow : Still the government shelling of hospital continued,

Jon Snow : On twelvth of May the hospital was shelled again.

Vani : They have started shell bomb, when I came out. It was just like again full of dead bodies into pieces.

Jon Snow : For Dr. Shanmuga raja, he was clear that the situation is becoming impossible.

Vani : That day Dr. Shanmuga raja urgently called everyone and had a meeting.  We talked abut it, and he said, well nothing we can do, hospital being targeted, everything destroyed, no medicine no nothing at all, we have come to a decision that we just have to shut down the hospital. It’s nothing we can do. So I went leaving so much guilt. I mean, I thought well, we just left them the wounded, even the patients in the hospital.

31.43

Jon Snow : No one knows how many died over the next few days. At this point the footage from the tamil site come to an end.

These images from the last few days shot by the official govt camera man shows srilankan troops in north remains in the camps, which should be in home just a couple of days earlier to at least 130 thousand civilians.

Srilanka minister:  “We are please to tell you that the all of the civilians who were in side the no fire zone have now been rescued by govt. forces.

Jon Snow : That statement, it is now clear, could not have been farther from the truth. UN panel is now concluded that as many as 40 thousand people died in the final few weeks of the war. Our sources, says the figures may have been even greater.

As thousands of terrified survivors, struggled to escape for slaughter at the end of Sri Lankas civil war in May 2009. Triumphant government forces made sure, no international observers were allowed anywhere near. The reason is now clear. Was the world was shown these official images of the government forces meeting triumphantly on the beach. Other members of the same force were committing series of horrific war crimes.

The reason we know about these crimes is that some of them were recorded on the mobile phones as scripted war trophies. The images which follow, showing the execution of the bond prisoners and the aftermath of the —— systematic sexual abuse and the murder are extremely distressing.  But we believe it is important that they are made public. They represent powerful evidence of war crime, which demand proper investigation.

In Singalam : Straighten up .. fuck you,

It’s like he saw. He looked, then he looked away.

In the sequence recorded on the mobile phone by the Sri Lankan government forces. Naked tiger prisoners are executed with their hands band behind their backs.

Channel 4 news first revealed the existence of this footage and showed extracts late last year. They were denounced as fake by the SL govt. The footage is since been authenticated by the UN, though SL govt. stil refuses to accept that.

In Singalam : Shoot shoot! I’eve shot as well. Shoot.

These are our state property. Let’s shoot.

And now the SL govt. is about to come under even more pressure.

In Singalam : Is there no one with the balls to kill a terrorist?

Of course there is. Shut up.

This program had obtained shocking new video evidence never seen before. Another incident filmed on a mobile phone, in which three bound prisoners including at least one woman are executed.

In Singalam : Come here what’s the matter with you. Hey cunt! Don’t be a wimp.

Shoot on my command. Up.

Take aim.

One man seems to be in charge, is giving instructions on how the prisoners who appear to be tiger fighters should be killed.

In Singalam :

We have added this footage, analysed by the experts who said it shows no sign of manipulations and appears to depict genuine executions. ‘Metadata’ included within the video indicates that it was recorded on the 15 of May 2009, in the last few days of the war.

Prof. William Schabas : International human rights Lawyer.

The execution of the prisoners in whatever the form, whether international or in civil war such as SL, is prohibited by the international law, is prohibited by the national law, it is murder, that’s all in days.

Jon Snow : And now with these isolated episodes ‘Ravi’ is conscripted by the tigers at the age of 16 and then captured by the SL army. Again we have a video evidence filmed by the SL soldiers, themselves which suggests that this treatment is not isolated. This footage shows another prisoner tied to a coconut tree. We have also been passed these photographs, they show the same prisoner alive and threaten with a knife and then dead.

Prof. William Schabas : To  see the chosen man tied in tree and then later see his body being dumped in a trench, is certainly a strong circumstantial evidence that the war crime of killing and of torture took place.

Jon Snow : But the killing and torture were not the only weapon used by the soldiers against tamils, Two months before the end of the war, one group of civilians managed to escape the zone and hand themselves to the government forces, among them this woman and her daughter, her trauma is still so great, she cannot bring herself to use the word rape, to describe what happened.

I am sorry for doing this, but you said all of the women were raped and they were taken away, you heard shots, and you never had them again. And both you and your daughter were raped.

Jon Snow : This footage was shoot by the soldiers themselves shows the corpses of naked woman some appeared to be raped or sexually assaulted and murdered in the background a man appears to mourn in the pain.

And lying among the dead, this woman ‘ Isai Priya’ the Tamil television presenter.

Other footage shows soldiers clearing away the bodies.

In Singalam : Mother fucking tiger wankers.

Load the ammo.

Show your face.

Hey, Pose with the bodies.

STAnd in a trench it appears to be the bodies of dead tiger child soldiers.

In Singalam : Hey look up.

Yet more footage record soldiers loading naked bodies on a trailor many of which appeared to be an abused. ST

In Singalam : Bring that body. Another one.

She is moaning now.

Moaning in your head.

Sill moaning.

Bring that one.

This one has the best figure.

Eh.

This one has the best figure.

We have more footage taken elsewhere which suggests a systematic murder abuse and sexual violence.ST

In Singalam : She seems like some one who’s newly joined.

She looks like someone’s clerk.

Look how many pencils and pens she’s got.

I really want to cut her tits off… if no one was around.

These disturbing scenes raise extremely serious questions for the gov. of SL.

Prof. William Schabas : If you take the examples, of it look like a mass execution of prisoners. These all adopt possibly to the point , that this is in fact a systematic and I would, could point to the highest levels in the military authority of SL has been responsible for war crimes, systematic execution, killing and torture.

Jon Snow : And of course in SL. The military command structure goes all the way to the highest offices in the government. Which means responsibility could ultimately lie with the President Rajapakshe and the man greeting him here, his brother and defense minister Gothapaya. But this other evidence which could implicate the political leadership in these crimes. On the last day of the war 18th May, government announced that this man, senior tiger commander called Col. Ramesh had died in the final battle. Yet we have been paused, trophy footage shot by the government soldiers, which clearly shows Col. Ramesh alive and in the captivity. And now with another photograph one which Col. Ramesh’s wife, in hiding outside the SL, had confirmed to us he is her husband.

It appears to show that at the same point, some time after he was captured Col. Ramesh was killed.

In Sri Lanka we met the singalese critic of the government supplied us with a series of photographs of other dead Tamils many of the were appeared to be executed.

Yet more of this evidence relates to these two men in the last few days of the war. Balasingam Nadesan and Sivaratnam  Pulidevan. Both senior civilian members of the Tiger leadership, told the UN and several foreign govts. That they will surrender unconditionally.

The UN report has confirmed that this offer was conveyed directly to and accepted by Rajapakshe and his political advisor his brother Basil and so on the 18th May carrying a white flag, Nadesan and Pulidevan surrendered. But among the photographs from our sources in Sri Lanka are these. They have positively identified as the bodies of Nadesan and Pulidevan.

These are men who, only evidence suggest a genuine attempt to surrender.

President himself had accepted their offer. We had these other photographs analyzed by forensic experts. These, he said there is a very high incidence of lethal gunshot wounds to the head.

Raising the strong suspicion of executions at the time of surrender with aimed head shots to stationary, highly visible targets. At these pictures, he described as compelling evidences of systematic execution, and likely sexual assault of female prisoners prior to execution so will any are brought to justice for the crimes, that depends to a great extent on the international community and UN itself, but the UN records so far has not been assuring.

Gordan: I think that tens of thousands of people have died inevitable raise the question of UN, what it were doing at that time wasn’t enough. Yes it wasn’t enough.

Jon Snow : Just five days after the end of war UN secretary General Ban Ki Moon flew over the war zone in a Sri Lankan helicopter. But he didn’t land instead he had visited the government camps housing around quarter of million displaced Tamil civilians. These were brutal footage where interment camps were left short of food water and medicine and stories of rape violence and disappearance were life. So the arrival of Ban Ki Moon brought real hope for persons like Vany Kumar.

Vany : He came in to zone, one which was like the showcase for the foreigners. He spent there about 10 to 15 minutes. He didn’t even go around the camp to see the people or even talk to the people. He just looked around and he went out of the camp. I just thought all this happened 15 to 20 minutes. And at that point people lost their trust in UN and most people completely lost trust in International Community that this going to never do anything.

Jon Snow: In April, the UN panel investigated what happened in the concluding months of war, published its report, it was devastating. It confirmed much of our investigation revealed and said it found credible allegations on war crimes and crimes against humanity. But the SL govt. has rejected the report outright. It has set up its own enquiry, ‘The lessons learnt and reconciliation commission’ we said our detailed allegations to the Sri Lankan govt. which responded.

“As the conduct of Channel 4 with regard to this matter has consistently fallen well short of the standards and fairness, expected of a responsible television channel, the government of SL, does not wish to be associated with the channel, at any time unless and until a suitable retraction is made to the satisfaction of the government.”

Jon Snow: Ban Ki Moon meanwhile rejected his own recommendations of the panel that he setup an international enquiry to investigate what happen. He says he doesn’t have authority.  If that is true so the critics then the UN security council itself must implement the call.

Steve: Quite recently the Security Council had unanimously voted for the cause of Libiya to be referred to the international criminal court in the hymen. The contrast between that and the complete other sides an inaction on scores of thousands dead in SL, I think it is in explicable and merely quite interfacing.

Jon Snow: Today Sri Lanka appears on the surface to be at peace. But most of the civilian Tamil prisoners have not been freed. The north remains gripped in a brutal military clampdown. Reports of rape and violence against the civilians are common, opposition is ruthlessly repressed and civil rights denied. This footage shoot secretly for channel 4 news shows the homes taken over by the military, two years after the war, displaced locals still live in tents.

Steve: I think it is difficult to calculate how wide the consequences may be, we the world continued this absolute failure to address the truth and horror and what is happened in SL.

Prof. William: Unpunished crimes lands wounds that return, prevents society from healing.

Jon Snow : It is now more than two years, since these Tamil civilians besieged the UN pleading for the international community to stay and witness their plight. That community failed them and many of them died. The survivors are now looking to the international community for justice. Will they be failed again.


பெரியார் என்ன செய்தார் பெரிதாய்?

 

பெரியார் என்ன செய்தார் பெரிதாய்?

இன்றைய காலகட்டத்தில் சில அறிவாளிகள் கேட்கும் கேள்வி இது. அவர்களுக்கெல்லாம் நாம் சொல்லும் ஒரே பதில், சரியான பதில் “நீங்கள் இப்படி கேள்வி கேட்க முடிவதே பெரியாரால் தான்” என்பது.

                ஆம். பெரியார் பிறந்திருக்காவிட்டால், பெரியார் போராடியிருக்காவிட்டால், பெரியார் வெற்றி பெற்றிருக்காவிட்டால் நாம் யோசிப்பதும், பேசுவதும், செயல்படுவதும் அடிமைத்தன வட்டத்தைத் தாண்டியிருக்காது என்பதே உண்மை.

                பெரியார் என்பது ஒரு சாதாரண பெயர்ச்சொல் அல்ல. அது ஒரு வினைச்சொல். பெரியாரைப் புரிந்து கொண்டால், பெரியாரை பின்பற்றினால், பெரியார் சாதனைகளை வாழ்க்கை நடைமுறையாகக் கொண்டு வாழ்ந்தால், மனித வாழ்வின் இடர்கள், நடைமுறைத் துன்பங்கள் அனைத்தையும் எதிர்கொள்வதற்கு வழி கிடைப்பதோடு, வாழ்க்கையின் பொருள் என்ன என்பதற்கான விடையும் கிடைத்து விடும்.

                வாழ்க்கை என்பதே நம்பிக்கைகளில் இயங்குவது தான். அவை சரியான நம்பிக்கைகளாக இருந்தால் அவன் வாழ்வு முன்னேற்றமடைகின்றது. அதுவே முட நம்பிக்கையாக இருந்தால் அவன் வாழ்வு தோல்வியை நோக்கி பயணப்படுகின்றது.

                இது தான் பெரியார் கண்டறிந்த சமுக விஞ்ஞானம். நம்பிக்கையின் முலம் மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்கின்றானோ, அவ்வளவுக்கவ்வளவு முட நம்பிக்கையினால் தன் வாழ்வை இழந்து கொண்டிருக்கின்றான் என்பதே அவரது முதல் கண்டுபிடிப்பு.

                மனிதன் ஏன் துன்பமடைகின்றான்? புத்தரின் கண்டுபிடிப்பு – ஆசை! ஆசை கொள்வதால் மனிதன் துன்படைகின்றான் என்றார் அவர். எல்லா உயிர்களையும் தன்னைப்போல் நேசித்தால் துன்பமில்லை என்றார் வள்ளலார். கட்டுப்பாட்டுடன் இல்லாததால் மனிதன் அல்லலுறுகிறான் என்றார் நபி. ஆனால் மண்ணின் அனைத்துத் துன்பங்களுக்கும் நடைமுறை வாழ்வில் ஒரே ஒரு காரணம். அது மூட நம்பிக்கை தான் என்ற முடிவுக்கு வந்தவர் பெரியார் தான். அது தான் சரியான முடிவு என்பதை உறுதி செய்தவரும் அவரே.

                பெரியாரின் பரிமாணங்களைக் கற்றவர்கள், உணர்ந்தவர்கள் ஒரு சிலரே. பலர் யானை கண்ட குருடர்கள் போல கடவுள் மறுப்பாளர், சாதி ஒழிப்பாளர், இட ஒதுக்கீட்டு போராளி, பெண்ணுரிமை பேசியவர், விடுதலைப் போராட்ட வீரர், பிராமணிய எதிரி, சுயமரியாதையை தமிழனுக்குக் கற்றுக் கொடுத்தவர் என்று பல பெயரிட்டு அழைத்தாலும் பெரியார் நமக்குத் தந்த அனைத்தும் ஒரே புள்ளியில் குவிவது, சற்று உற்று நோக்கினால் நமக்குப் புரியும். அது மனிதம்.

                மனிதன் மனிதத்தைக் கடைப்பிடித்தால் எந்த இடரும் இல்லை. ஆனால், மனிதனை மனிதனாக இருக்க விடாமல் தடுப்பது எது? அந்த வேரை நோக்கியே பெரியாரின் தேடல் அமைந்தது. படிப்படியாக ஒவ்வொரு காரணங்களையும் கண்டுபிடித்து நமக்கு அறிவுறுத்தினார். அவற்றில் முக்கியமானது ‘மூடநம்பிக்கை’

                மூடநம்பிக்கை என்பது, விரிவான பொருளில் ஒரு உணர வேண்டியது. இல்லாத ஒன்றை நம்புவது, அல்லது தவறான நம்பிக்கை வைப்பது என்றும் இதைப் பொருள் கொள்ளலாம்.

                மனு தர்மம், சாதி இழிவு, சூத்திரப்பட்டம், தொழில்முறை இழிவு, கல்வி மறுப்பு, வேலை மறுப்பு, மரியாதை மறுப்பு ஆகிய அனைத்தும் பிராமணரல்லாதார் மிதும் முக்கியமாக சூத்திரர், பஞ்சமர் மிதும் சுமத்தப்பட்டபோதும் அவற்றையெல்லாம் ‘தன் தலைவிதி’ என்று தவறான நம்பிக்கையோடு ஒப்புக் கொண்டதனால் விளைந்ததுதான் இந்த அடிமைத்தனம். இந்த அடிமைத்தனத்தை மாற்ற “எதை வேண்டுமானாலும் துக்கியெறியுங்கள், அது கடவுள் நம்பிக்கையாக இருந்தால் கூட” என்று போர்முரசு கொட்டியவர் தான் நம் பெரியார். அந்தப் போரில் அவர் பெற்ற வெற்றியின் விளைவுதான் இன்று நாம் அணிந்திருக்கும் மேல் சட்டை, துண்டு, வேட்டி.

     பகுத்தறிவு எது என்பதை நமக்குச் சொல்லித் தந்தவர் பெரியார் தான். சமூகம், அரசியல், பொருளாதாரம் என்று பல  தளங்களிலுள்ள  மூடநம்பிக்கைகளை எதிர்த்து தன் போரை நடத்திய முதல் மாவிரன், இன்றைய மாற்றங்களின் நாயகன் பெரியார் தான்.

 சமூகம்

                ஒரு சமுதாயம் ஏன் முன்னேற்றம் காண முடியவில்லை? ஏன் இழிவைச் சந்திக்கிறது? என்பதன் வேரைத் தேடியவர் பெரியார்.

                சமூகத்தை வர்ணங்களாகப் பிரித்து, சூத்திரர் என்றும் பஞ்சமர் என்றும் அவர்களை அடிமைப்படுத்தி, அந்த அடிமைத்தளையை அவர்கள் உணர முடியாதவாறு அவர்களுக்கு அறிவு மறுப்பை ஏற்படுத்தி, அவர்களை என்றென்றும் அந்தக் கட்டுமானத்திலேயே அமிழ்த்தி வைப்பதுதான் ஆரியத்தின் சூழ்ச்சி. அந்தச் சூழ்ச்சியின் முதல் ஆயுதம் தான் சாதி. சாதிதான் இழிவைத் தருகிறது. இந்தச் சாதியின் அடிப்படை மதம். அந்த மதம் நிற்கும் அடிக்கல்தான் கடவுள். கடவுள் மீதான நம்பிக்கைதான் அனைத்திலும் மிகப் பெரிய மூடநம்பிக்கை. எல்லா அடிமைத்தனங்களுக்கும் அதுவே அடிப்படை. சாதி நம்பிக்கையை நீர்த்துப் போகாமல் காப்பாற்றுவதற்கு உதவுபவை. சடங்குகள், சம்பிரதாயங்கள் முதலானவை. எனவேதான் அவர் எழுப்பிய விடுதலை முழக்கம் முதலில் கடவுள் நம்பிக்கை என்னும் அடிக்கல்லைக் குறி வைத்தது. அடிக்கல்லை உருவினால் கட்டடம் தானாகவே உடையும் என்பது நடைமுறை.

அடிமைத்தனம்

 

அரசியல் பொருளாதாரப் பின்னடைவு

 

கல்வி மறுப்பு

 

முடநம்பிக்கை

 

சாதி

 

சாத்திரங்கள், வேதங்கள்

 

வர்ண பேதங்கள்

 

மதம்

 

கடவுள்

 

பார்ப்பனியம்

 

வெறும் பேச்சில், எழூத்தில் மட்டுமல்லாது, நடைமுறையிலும் தனது போரை அவர் நடத்தியதின் சில துளிகள் தான் இவை.

                விதவை மறுமணம் என்பது சமுதாயத் தளத்தில் அவர் நடத்திய முதல் புரட்சி. அதை தனது சொந்த குடும்பத்திலேயே தனது 30வது வயதிலேயே தன் தங்கையின் மகளுக்கு நடத்தி வைத்தவர் பெரியார்.

                இந்த நாட்டிலேயே பெண்களை முதன் முதலாக பொது வாழ்வுக்கு அழைத்து வந்தவர் பெரியார். பெண்ணடிமைத் தத்துவத்தை உடைத்தெறிந்து தன் மனைவியையும், தங்கையையும் எல்லாப் போராட்டங்களிலும் பங்கேற்க வைத்தவர் அவர். காங்கிரசு கட்சியில் இருந்தபோதும் வர்ண வேறுபாடுகளை கற்பிக்கும் மனுதர்ம சாத்திரத்தையும், அதைப் பரப்பும் ராமாயணத்தையும் கொளுத்த வேண்டும் என்று முழங்கியவர் அவர்.

                சாதியை மறுத்து அவர் நடத்தி வைத்த கலப்புத் திருணமங்கள் எண்ணற்றவை. சாதியை நினைவுபடுத்துவதால் கலப்புத் திருமணம் என்ற சொல்லையே கேலி செய்தவர் பெரியார். “மனித இனத்துக்குள் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் திருமணம் எப்படி கலப்புத் திருமணமாகும்” என்பது அவரின் கேள்வி.

                தலைவிதி, மோட்சம், நரகம், பிறவிகள் என்ற நம்பிக்கைகளைத் தகர்க்க வெடி வைத்தவர் அவர். 1924 இல் நடந்த வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டம், தீண்டாமையின் கரங்களை ஒடுக்கி சாமான்ய மக்களை முக்கியமாக கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைக் கூட, தம் அடிமைத்தளைகளை அறுக்குமாறு தூண்டியது.

                கர்ப்பத்தடை பற்றி 1928 ஆம் ஆண்டிலேயே தனது ரிவோல்ட் இதழில் முதன் முதலில் எழூதியவர் பெரியார்.

                1930 இல் நீதிக் கட்சி ஆட்சியில் தான் பலத்த எதிர்ப்புக்கிடையில் பார்ப்பனக் கட்டமைப்பான தேவதாசி முறை ஒழிக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது.

                அவர் எழுப்பிய “அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம்” என்ற முழக்கமே பார்ப்பனியத்தின் மிது அவர் கொடுத்த முதல் அடி.

 பொருளாதாரம், அரசியல்

                 ஒரு சமுகத்தின் உண்மையான முன்னேற்றத்திற்கு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதும், அந்த முன்னேற்றத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு, அரசியல் விடுதலையும் அவசியமாகின்றது. இவற்றை நாம் பெறுவது கல்வியறிவு, வேலை வாய்ப்பு ஆகியவற்றின் மூலமேயாகும். இந்தக் கல்வியறிவு என்னும் அடிப்படை உரிமையை நமக்குக் கிடைக்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்த பார்ப்பனியத்தை நொறுக்குவதை தன் தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட்டவர் பெரியார்.

                1924 இல் வ.வே.சு.ஐயரின் குருகுலத்தில் பிராமண ஆதிக்கத்தைக் கண்டித்தது முதல், அவர் தொடங்கிய போராட்டம், கல்வியில் இட ஒதுக்கிடு, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என விரிவடைந்து அரசியல் ரீதியாகவும் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றவும் நம் மக்களுக்கு வாய்ப்பாய் அமைந்தது என்பது கண்கூடு.

                1952 இல் ராசாசி கொண்டு வந்த “குலக்கல்வித் திட்டம்” என்னும் கல்வி மறுப்புத் திட்டத்திலிருந்து பெரியாரின் கடும் போராட்டத்திற்குப் பிறகே நமக்கு விடுதலை கிடைத்தது. அவரின் போராட்டத்தில் 1951 ஆம் விதி 15ல் 4வது உட்பிரிவை புதிதாக சேர்த்து வழங்கப்பட்ட “வகுப்புரிமை சட்டமே” இட ஒதுக்கிடுகளின் மூலமாகும். அரசியலில் காங்கிரசின் மீது தாம் கொண்ட நம்பிக்கை தவறானது என்பதைக் கண்டு கொண்ட அந்த விநாடியே காங்கிரசையும் அதன் பார்ப்பனிய மேதாவித்தனத்தையும் ஒழிப்பதுவே தன் முதற் பணி என்ற முடிவை எடுத்தவர் பெரியார்.

                மத ரீதியான அடிமைத் தனத்தையும், இன ரீதியான அழுத்தங்களையும் எதிர்கொண்டு போராடக் கற்றுக் கொடுத்தவர் பெரியார்.

                “திராவிட நாடு திராவிடருக்கே” என்று 1939 இல் அரசியல் விடுதலைக்கான முதல் குரலை எழூப்பியவர் பெரியார். “சாதிய, இன ரீதியான அடிமைத்தளைகளிலிருந்து விடுதலை கிடைக்காமல் வெறும் அரசியல் ரீதியான விடுதலை கிடைப்பது பயனில்லை. அத்தகைய விடுதலை நாள் துக்க நாள்” என்று அறிவித்து கருப்புக் கொடி ஏற்றியவர் அவர்.

     வடநாட்டினர் கவர்னர் பதவியில் நியமிக்கப்படுவதை எதிர்த்து தனது போரை தொடங்கிய அவர் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு தனியே பிரிந்தால் தான் இன ரிதியான விடுதலைக்கு வழியாகும் என்பதை உணர்த்த தேசியக் கொடியை 1955ல் எரித்தும் 1956ல் தமிழ்நாடு தவிர்த்த இந்திய வரைபடத்தை எரித்தும் தன் விடுதலைப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்தினார்.  

     பெரியாரின் பையில் எப்போதும் ஒரு கையேடு ஒன்று இருக்கும். அந்த ஏட்டில் எந்தெந்தப் பார்ப்பன அதிகாரிகளின் பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது என்ற குறிப்பு இருக்கும். உடனே சம்பந்தப்பட்ட அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு அந்த இடத்தில் பார்ப்பனரல்லாத ஒருவரை நியமிக்கக் கோருவார். அரசுகள் செயலற்று இருந்தபோது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான செயலாளராக செயல்பட்டவர் பெரியார் தான்.

 மொழி

                 நம் மீது சுமத்தப்பட்ட சாதி, மதம் ஆகிய அடிமைத்தனங்களை எதிர்த்த பெரியார் மொழி ரீதியான அடிமைப்படுத்தலையும் எதிர்த்து கடும் போரை நிகழ்த்தினார். மத ரீதியான சமக்கிருத மேதாவித்தனத்தையும், அம்மொழியின் முலம் திணிக்கப்பட்ட மந்திரங்கள், யாகங்கள், சடங்குகள் ஆகியவற்றை எதிர்த்தும், பார்ப்பனிய ஆதிக்கத்தை முறியடித்த பெரியார், வடவர்களின் ஆதிக்கக் கருவியான இந்தியையும் எதிர்த்து மிகப் பெரிய போர் நடத்தினார்.

                1952 இல் முதன் முதலில் அவர் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போர் பின் 1955 இல் விரிவடைந்து இந்தியை, தமிழ்நாட்டை விட்டே விரட்டியது.

                தமிழ்மொழியைச் சீர்படுத்த எழூத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியவரும் அவரே.

 

     நம் தலைமுறையைச் சேர்ந்த மாபெரும் தலைவரான பெரியார் அமைத்துக் கொடுத்த முதல் படிக்கட்டில், நம் பயணத்தைத் தொடங்கியிருக்கும் நமக்கு, நமக்காக அமைக்க வேண்டிய பல படிகள் இன்னும் காத்திருக்கின்றன. ஆம், குடியரசுத் தலைவராக ஒரு தலித் இருந்தால் கூட, திண்ணியம், உத்தப்புரங்களை மாற்ற நாம் தான் போராட வேண்டியிருக்கிறது.

                அடுத்தடுத்த படிகளுக்கு நம்மை ஏற விடாமல் தடுப்பதற்கு அத்தனை மேட்டிமைச் சக்திகளும் வாய் பிளந்து கொண்டு தயாராக இருக்கின்றன. நம் முன்னேற்றத்தைத் தடுக்கும் எதிரிகள், நம்மவர்களைக் கொண்டே, அதிலும் பெரியார், அம்பேத்கார் போன்ற நம் குல வெளிச்சங்களைக் கொண்டே நம்மை எரிக்கக் காத்திருக்கின்றனர். இப்போதுதான், நாம் நம் வரலாற்றுக் கடமையான போராட்டத்தை முன்னிலும் வேகமாகத் தொடர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதில் நாம் வெற்றி பெற்று, சரிநிகர் சமமான, மானமும் அறிவும் உள்ள ஒரு மனித சமுதாயத்தை அமைக்கும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் திண்ணம்.