அணுஉலை விவகாரம் ஆரம்பித்தாலும் ஆரம்பித்தது இந்த அறிவாளிகளின் கொசுத்தொல்லை தாங்கலைடா சாமி.                 ஏதோ நிரோத் ஆணுறை விளம்பரம் மாதிரி அணுஉலை நூறு சதவீதம் பாதுகாப்பானது.  ஒன்றும் ஆகாது.  எதுவுமே நடக்காதுன்னு கற்பூரம் ஏத்தி ஆத்தா சத்தியமான்னு அடிச்சுச் சொல்லும் அறிவாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிப் போச்சு.  ஆளுக்காளு அட்வைஸ் போட ஆரம்பிச்சுட்டாங்கப்பா.                 இதுல இடையில நம்ம அப்துல்கலாம் ஐயர் வேற.  நானும் இரண்டாவது தடவையா நேர போயிப் பாத்தேன். அரை மணி நேரம் சுத்திப் பாத்தேன்.  [...]