தேய்த்துத் தேய்த்துத் தேய்ந்தே போனது
தலைமுறைகள்;
அழுத்தித் தேய்டா சுருக்கம் போகணும்
ஆணையிட்டார் ஆண்டை;
எதைக்கொண்டு தேய்க்க
உங்க மனசை;
அரிசி இல்லையே வீட்டில்
ஆனாலும்
அடுப்புப் பற்றவை
வெள்ளாவி;
கஞ்சி பத்தலையே
குறைப் பட்டுக் கொண்டது நானல்ல
சட்டை வாங்கிய பெரிய மனுசன்;
கழுதை போனது
மோட்டார் வண்டி வந்தது
முன்னேற்றம்
அதே அழுக்கு மூட்டை;
இசுதிரிக் கடை
உருப்படிக்கு காசு
தொவைக்கிறது மட்டும் நானேதான்;
நாகரிக உலகத்தில் எல்லாமே மாறியாச்சு
அய்யா செத்துப்போனார்
கூப்புடுடா அம்மாசியை
அம்மாசி செத்துப்போனான்
கூப்புடுடா அய்யாவை;
என்னடா மாறிச்சு
ஆண்டாண்டாய் வெளுத்தாலும்
அழுக்குப் போகலையே
சமூகம்;
அடித்துத் தொவைத்தால்தானே
அழுக்குப் போகும்
எல்லா அழுக்கும் அப்படித்தான்.

2 responses to “தேய்ந்தே போனவை”
gowthamanpasu
15:12 இல் ஜனவரி 2nd, 2012
”அடித்துத் தொவைத்தால்தானே
அழுக்கு போகும்
எல்லா அழுக்கும் அப்படித்தான்.”
அதனால்தான் அய்யா
அன்றே சொன்னார்,
”கத்தியும், பெட்ரோலையும்
வைத்துக் கொள்.
நான் சொல்றேன்,
தயாரா இரு” என்று
அய்யாவுக்குப் பிறகு
யார் சொன்னார் இதை ?
சொல்ல வேண்டியவர்கள்
சொல்லவில்லை !
செய்ய வேண்டியவர்கள்
செய்ய வில்லை.
ஆனால்
தனித் தனியே
தங்களையே செய்து கொண்டார்கள்!
ஈழம் தொடங்கி
இப்போது முல்லை பெரியாறு வரை ?
RAMESH V
15:53 இல் ஜனவரி 4th, 2012
XELANT ARTICLES SO FOR I HAVE RECEIVED. PLEASE DO CONTINUE SENDING
ALSO TELL ME HOW TO TYPE IN OUR LANGUAGE tamil