தேய்த்துத் தேய்த்துத் தேய்ந்தே போனது தலைமுறைகள்;   அழுத்தித் தேய்டா சுருக்கம் போகணும் ஆணையிட்டார் ஆண்டை; எதைக்கொண்டு தேய்க்க உங்க மனசை;     அரிசி இல்லையே வீட்டில் ஆனாலும் அடுப்புப் பற்றவை வெள்ளாவி;   கஞ்சி  பத்தலையே குறைப் பட்டுக் கொண்டது நானல்ல சட்டை வாங்கிய பெரிய மனுசன்;   கழுதை போனது மோட்டார் வண்டி வந்தது முன்னேற்றம் அதே அழுக்கு மூட்டை;   இசுதிரிக் கடை உருப்படிக்கு காசு தொவைக்கிறது மட்டும் நானேதான்;   [...]