செம்மொழி மாநாடும், செம்மறி ஆடுகளும்
செம்மொழி மாநாடும், செம்மறி ஆடுகளும் - சு. தளபதி ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் பலிகொள்ளப்பட்டு, மூன்று லட்சம் பேர் இன்னமும் வாழ்விடத்திற்கு அனுப்பப்படாமல், சொந்த நாட்டிலேயே முள்வேலிச் சிறையில் அகதிகளாய் அடைக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில், அவர்களின் ரணங்களை மீறி உலகத் தமிழ் மாநாடு நடத்த தமிழாராய்ச்சிக் கழகம் அனுமதி அளிக்காத இத்தருணத்தில், சினிமா செட்டிங் போட்டு படப்பிடிப்பு நடத்துவது போல், அவசரஅவசரமாக, கோவையைத் தூசிதட்டி வெள்ளையடித்து, 10 கோடியில் போடப்பட்ட தோட்டாதரணியின் செட்டிங்குடன், [...]